கவிஞர் பா.மருது பாண்டியன்
கவிஞன் அன்று; ஒரு காட்சியின் அழகியலைப் புரியாதவர்களுக்கு எளிதாய், சொல்லால் புரிய வைக்க முயலும் மொழிபெயர்ப்பாளன். கணி நீ என்று உங்களிடம் சொன்னால், கணிக்கவே முடியாத கணினி பொறியாளன். மொழி மீது ஆர்வம் கொண்டு, நடைகட்டி வந்திருக்கும் தமிழ்த்தாயின் கடைக்குட்டி.
காணக் கிடைக்கும் ஞானக் கிறுக்கன்;
வானக் கூட்டில் வாழும் பறவை;
காணப் போகும் நாள்சொல்லும் - நான்
கடலை எதிர்க்கும் நெருப்பென்று;
ஞானம் தேடி நீர்வார்க்கண்ணின்
நம்பிக்கைகளின் இருப்பென்று;
‘சென்றநாட் கதையெலாம் சிந்தைவிட் டோடுமோ’
என்றநான் இன்றில்லை என்பதும் தெரியுமோ?
திரும்பிச் செல்லவும் திகட்டாத இன்பங்கள்
விரும்பி வந்தினும் வீட்டுக்குள் சேர்க்காதத்
தெளிவினைப் பெற்றபின் தீர்க்கமாய் நின்றபின்
பழிவினை கொண்டெனைப் பள்ளத்தில் சாய்த்திடும்
நண்பர்காள் நண்பிகாள் நம்புங்கள் நானென்றும்
அன்பர்தான் ஆனாலும் ஆத்திரம் பொறுத்திடேன்;
நேற்றிலே நிற்கிலேன்; நிகழ்வதில் கற்கிறேன்;
ஏற்றிடும் நாளையே எனதென வாழ்கிறேன்;
கடனுக்கு வாழ்வோரே கையெடுத்துக் கும்பிடுவேன்
உடனுக்கு உடன்நின்று உரையாட வழக்காடப்
பொழுதிலை; அடுத்தநாள் புலர்ந்திடும் காலையை
முழுவதும் எனதாக்கும் முயற்சியில் உழைக்கிறேன்;
வந்தவர் போனவர் வாழ்வதற் கொருவழி
தந்தவர் ஆயினும் தர்மத்தின் பாதையில்
நிற்பதற்கஞ்சினால் நிமிடத்தில் உதறிடக்
கற்றவன்; எனக்கதும் கடினமா? விருட்சத்தில்
இலையிலாப் போதெல்லாம் எரிக்கவேப் பார்க்கிறீர்;
நிலையிலா உலகிதில் நீங்களும் நானுமே
வாடகை வீடென்றே வாழ்கிறேன்; உடனுளோர்
நாடக ஒத்திகை நம்பிக்கை உரைக்கெலாம்
நாழியில் லாதவன்; நம்பினால் நம்புங்கள்;
ஊழியம் செய்வதற் குதவுங்கள்; ஒதுங்குங்கள்;
ஓட்டம் ஒன்றேதான் உலகத்தின் சித்தாந்தம்;
கூட்டம் எதற்கதில் கொடிபிடிப்போர் மத்தியிலே
ஏற்றுவோர் யாரோ? இருகால்கள் வாரிவிட்டுத்
தூற்றுவோர் யாரோ? துணைவரும் பயணத்தில்
செல்லும் வழியெல்லாம் சிறைச்சாலை என்றஞ்சி
அல்லும் பகலெல்லாம் அயராது விழிக்கின்ற
வாழ்வினைத் துறப்போர்க்கு, வானம் வழிசொல்லும்;
ஊழ்வினை மட்டும்தான் உலகத்தில் நிலைகொள்ளும்;
இன்பம் இரண்டாகும்; இதயம் அறுக்கும்
துன்பம் அணுவாகும்; துணைகொண்டோர்க்கு;
ஆயினும் நானுறவண்டிடாச் சத்திரம்;
ஓய்விடம் போலவே உறவெனைக் கருதிடும்;
யாத்திரைப் பாதையில் யாருக்காகவும்
காத்திருக்காதவன்; கால்வழிப் போகிற
பயணம் தூரமென்றும் பாதைக் கடினமென்றும்
உயரப் பறக்காத ஊர்க்குருவி சொல்கேட்டு
வல்லூறு என்றுமென் வழிமாற்றலாகாது;
முள்ளேறி பாதம்தான் முடமாகிப் போகாது;
விட்டோரெல்லாம்; வியாபார வாழ்விலே
நட்டம் அல்ல; நன்றிக்கு உரியவர்;
மனத்திலே என்றைக்கோ மாண்டவர் ஆனபின்
எனக்கென்னப் பேச்சு இறந்தவர் உடனெல்லாம்?
வைகோ
சிலம்பின் கதையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எளிய நடையில் எடுத்துச் சென்றுள்ளார். தொடரட்டும் அவர்து தமிழ்ப்பணி
பேரா. சுபவீ
மருதுவின் நூலின் மூலம் மளமள வென்றே யாரும் திருந்திட அறிந்து கொள்வார் திராவிட வழியில் செல்வார்! கரும்புபோல் இனிக்கும் இந்தக் கவிதைநூல் வெல்க வாழ்க
கவிஞர் சதீஷ்குமார்
உன்போல் எழுத்தாளன் கிடைப்பது இனி அரிது! உன் எழுத்தாளுமைக்கு நிகரேது மருது! உன் எழுத்துக்கு தான் தர வேண்டும் ஞானபீட விருது!
தற்போது விற்பனையில்
உங்களது பிரதியை இப்பொழுதே உறுதி செய்யுங்கள்
அலைபேசி : +91-9994856734
யானை வரும் பாதை
₹120.00பெரியார் வர்றார் வழிவிடுங்கோ
₹50.00நான் ரசித்த வாலி
₹150.00இறகு உதிர்க்கும் மரம்
₹80.00வேள்விகள் செய்யும் கேள்விகள்
₹80.00சங்கச் சாளரம்
₹250.00