எம்மைப் பற்றி
வெளியிட்ட நூல்கள்
2018
கோடையின் நிழல்கள்
முதல் கவிதைத் தொகுப்பு
2021
எழுத்துக்கும் விலையுண்டு
இரண்டாவது கவிதைத் தொகுப்பு
2022
வேள்விகள் செய்யும் கேள்விகள்
கேள்வி நூலால் நெய்த வேள்வி நூல் ஆடை
2022
திருக்கவிதை
மரபுக்குள் வாழ்ந்த வள்ளுவனின் கருத்துக்கு புதுக் கவிதை என்னும் பொன்னாடைப் போர்த்தும் முயற்சி!
2022
கண்ணகி காவியம்
எளிய தமிழில், சிலப்பதிகாரம் என்னும் இனிய காப்பியம்!
2022
முத்தமிழ் தந்த முத்துத் தமிழ்
முத்தமிழ் தந்தவரின் வாழ்க்கையை, இரண்டாம் தமிழில் கொடுத்த, முதல் முயற்சி. கவிதை நடையில் கலைஞர் மு. கருணாநிதியின் வாழ்க்கை.
2022
எனதருமை நாஸ்தென்கா!
பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள், கவிதை வடிவில்.
2023
இறகு உதிர்க்கும் மரம்
ஒவ்வொரு பாடுபொருளுக்கும் மரபுக் கவிதையில் ஒரு அழகியல் விளக்கம்.
2023
சங்கச் சாளரம்
ஐம்பது குறுந்தொகைப் பாடல்களுக்கு விளக்கம், எளிய விளக்கம், அருஞ்சொற்பொருள், புதுக்கவிதை, பாடல் வரிகள்.
2023
நான் ரசித்த வாலி
அறுபது ஆண்டுகளாக திரைத்துறையில் கோலோச்சிய காவியக் கவிஞர் வாலியின் பாடல்களில் உள்ள அழகையும் புதுமையையும் எடுத்துச் சொல்லும் இன்னொரு படைப்பு.
2023
பெரியார் வர்றார் வழிவிடுங்கோ
மறைந்த பெரியார் மறுபடி வந்தால்? பார்ப்போர்க்கெல்லாம் பதிலடி தந்தால்? பெரியார் மீதுள்ள புனைவுக் கதைகளை உடைப்பதே இந்நூலின் எண்ணம்.
2023
யானை வரும் பாதை
புதுக்கவிதைப் புயலில் சிக்கி, மரணம் எய்திய மரபுக் கவிதைக்கு மௌன அஞ்சலி செலுத்தியது போதும். இனியாவது, மரபு மரங்களை, தமிழ் நிலமெங்கும் நட்டு வைப்போம். அதில், தவறாமல் புதுமை உரம் இட்டு வைப்போம். ஆம்! பழைய குருதி மட்டும் பாய்ந்து கொண்டிருந்தால், கைப்பிடி அளவுள்ள, இருதயம் கூட இயங்காதெனில், காலமெல்லாம் நிலைக்கும் தமிழ், எப்படி பழைமைக்குள் இறவாதிருக்கும்?
காலங்களுக்குக் கட்டுப்படாத தமிழின் நாளங்களுக்குள் புதுக்குருதி நாமல்லவா பாய்ச்ச வேண்டும்? புதுக்கவிதையின் புதுமை புகுத்தப்பட்டு, மரபுக் கவிதைகள் மலரட்டும். காலநதிக்குள் காணாமல் போன கரைகள் மீண்டும் கண்ணுக்குத் தென்படட்டும்.
வையமிசை மீண்டும் தமிழ், தழைத்தோங்கட்டும்!
2023
முடிவிலியின் முதல் பக்கம்
காலச்சக்கரம் கொடுத்த நம்பிக்கையில், இறந்த காலத்தில் செய்த ஒரு சிறு பிழை, எதிர்காலத்தை எப்படி எல்லாம் மாற்றுகிறது, நட்பா காதலா என்ற கட்டத்தில் எதை முன்னெடுத்துச் செல்வது போன்ற பல நிகழ்வுகளை உள்ளடக்கி எளிய நடையில் சொல்ல முயற்சித்தக் கதை.