Bangalore Days

பேசிக்கொண்டே இருந்ததில் பேருந்துக்கான நேரம் அருகுவதைக் கூட பொருட்படுத்தாது இருக்க, இன்னும் அரை மணி நேரத்தில் பேருந்து என்பதை உணர்ந்த கணம் தான் உடனே கிளம்பினேன். ஏற வேண்டிய பேருந்து எங்கள் வாகனத்திற்குச் சற்று முன்னால் செல்ல, ஒரு வழியாய் அதைப் பின் தொடர்ந்து உரிய நேரத்தில் ஏற வேண்டிய இடத்தை அடைந்து பேருந்தில் ஏறியாயிற்று. காலணி கொஞ்சம் கடுகடுத்தது. செருப்பு கொண்டு வராததால், எங்குச் சென்றாலும் பூட்ஸ் தான். இரவெல்லாம் அதை அணிந்திருக்க வேண்டும் என்ற […]

Bangalore Days Read More »

Giethoorn (கீத்தோர்ன்)

யாரும் இல்லாத இடத்திற்குப் போக வேண்டும்! அங்கே,நான் கூட இருக்கக் கூடாது! – அப்துல் ரகுமான்! சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தமிழ்நாடு எல்லையைக் கூடக் கடந்தது இல்லை. தவழும் அக்கா மகள்கள் வரை அனைவரும் வீட்டில் விமானத்தில் பயணம் செய்திருக்க, நான் மட்டும் விமானத்தை அருகில் கூட பார்த்தது கிடையாது. விடுதலைக்குப் பின் எழுந்த முதல் அல்லது இரண்டாம் தலைமுறை நாங்கள். தானாகவோ அல்லது தூக்கிப் பிடிக்கும் ஏதோ சில கைகளைப் பற்றிக் கொண்டோ

Giethoorn (கீத்தோர்ன்) Read More »

கண் மூடுங்கள் ஜானகி அம்மா!

“குயில்கள்மெளனத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கின்றன புல்லாங்குழற் காட்டில்யாருமில்லை வீணையின் மீதுஒரு பூவிழுந்து கிடக்கிறது எங்கிருந்தோமேகங்களை விலக்கிவழியும் ஒளிமஞ்சளில்மிதக்கிறது காற்றுஉன் முகமாகஅனைத்துக்குமானஉன் குரலாக அன்பிசைக்குயில்எஸ்.ஜானகி அம்மாவுக்குஆழ்ந்த இரங்கல்” – பழநிபாரதி பள்ளி நாட்களில் ஒரு பாடலைக் கேட்ட உடனே பாடகர்கள் பெயரைச் சொல்லும் பிரகாஷைப் பார்த்தால் எங்களுக்கு அதிசயமாகவே இருக்கும். சுசீலாவா ஷைலஜாவா என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுதில் சுசிலாம்மா டா என்பான். சித்ராவா சுஜாதாவா என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல், கீச்சுன்னு பாடுறாங்க பாரு, ஸ்வர்ணலதாம்மா என்பான்.

கண் மூடுங்கள் ஜானகி அம்மா! Read More »

சரஸ்வதி பெரியம்மா!

புவி மிசை மரபில் –பொதுவாக –இன்னொருவர் படும்இன்னலுக்கெல்லாம்உதவிட மக்கள்உடன்படுவதில்லை; பிறரதுகண்ணீர்க்கெல்லாம்கடன்படுவதில்லை; ஆம்!மண் வாழ்க்கை வாழும்மக்களிலே பலபேர்தன் வாழ்க்கை ஒன்றே –தழைக்கட்டும் என்றே –வாழ்வதுவே இங்குவழமை ஆயிற்றே; அதுபெற்றவர் ஆயினும்பிறந்தவர் ஆயினும்மற்றவர் போலேமாறியதாலேபற்றெல்லாம் இன்றுபழமை ஆயிற்றே; இப்படி இங்கே –எல்லோரும் இருக்க – துயர் –உறவுக்கு என்றதும்ஓடோடிச் சென்றந்தமரபுக்கு ஒரு கரம்மண்ணள்ளிப் போட்டது; அப்படி –மரபினை எல்லாம்மறந்திருந்து –மற்றவர்க்காய்ச் செவிமடல் திறந்து –நீளும் கரங்களேநித்தியம் காணும்;வாழும் வரையிலும்வாழ்வுக்குப் பின்னும்சரித்திரத்தில் இடம்சத்தியம் காணும்; ஏன் எனக் கேட்கஎவருமின்றி – இருமீனென

சரஸ்வதி பெரியம்மா! Read More »

சநாதனம்!

  “எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்” – ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும். அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன? நம்

சநாதனம்! Read More »

டார்ட்மண்ட்

இந்த வாரம் சனிக்கிழமை டார்ட்மண்ட் செல்லலாமா என அறையில் தங்கி இருக்கும் விக்னேஷ் கேட்ட பொழுது அரை மனதுடன் தான் சம்மதித்தேன். ஊர் சுற்றிப் பார்க்கப்போவதில் உள்ளப் பெருந்தொல்லையே அதிகாலை எழுவது தான். முந்தைய நாள் எவ்வளவு முயன்றும் படுக்க மணி பன்னிரண்டு ஆனது. காலை நான்கு மணிக்கே பாலாஜி அழைத்து எழுப்பிவிட, குளித்துக் கிளம்பும் போது மணி ஐந்தரை. செல்லும் வழியில் நிறுத்தக்குறியீட்டுக்காகத் தேநீர் தயாரித்து ப்ளாஸ்கில்(flask) ஊற்றி எடுத்துக் கொண்டோம். ராம் அண்ணாவை ஏற்றிக்

டார்ட்மண்ட் Read More »

சனிக்கிழமை சந்தை!

இந்திய நேரப்படிக் கணக்கிட்டால் எழுந்ததே மிகத் தாமதமாகத்தான். இந்நேரம் அங்குச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நேரம், நண்பகலுக்கும் காலைக்குமான இடைப்பட்ட பொழுது. பதினொரு மணி. ஆனால் பெல்ஜியத்தில் அது வெறும் அதிகாலை தான். காலை ஆறரை மணி. பெல்ஜியத்தில் இருந்தாலும் இந்திய நேரத்திற்கே பழகி இருந்த மனது எழச் சொல்லிக் கட்டளை இட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் தான், இன்னும் சற்று நேரம் தூங்கலாம் ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் அக்காவுக்கு இந்நேரம் மதியம் ஒன்றரை ஆகி

சனிக்கிழமை சந்தை! Read More »

இறைவனிடம் கையேந்துங்கள்!

“வள்ளல் நபி கதையைவரைகின்றேன் – காவியத்தின்உள்ளே நீ நிறைந்து ஒளியேற்ற மாட்டாயா? தெரியாமல் நான் இந்ததீன் நெருப்பைத் தொட்டுவிட்டேன்;கருகாமல் சுடர் வீசக்கருணையினைக் காட்டாயா? எனக்காக இல்லையெனினும்இறைதூதர் ஏந்தல் நபிதனக்காக இங்கெனக்குத்தமிழெடுத்து நீட்டாயா?” – முகமது மேத்தா “இந்த வாட்டியாச்சும் நாகூர் போயி ஒரு தென்னம்பிள்ளை வாங்கி வச்சிருப்பா”, என்று அம்மா சொன்ன போது தான் மாமாவின் வேண்டுதல் நினைவுக்கு வந்தது. மாமா மாமி என்று மட்டுமே அழைத்ததனால் என்னவோ அவர் பெயர் கூட எங்களுக்குத் தெரியாமலேயே போனது.

இறைவனிடம் கையேந்துங்கள்! Read More »

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

“ஓடுவது, துரத்துவதுவீசி எறிவது,குறி பார்த்து அடிப்பது,பிடிப்பது, தப்பிப்பது,மறைந்து கொள்வது,சுற்றுவது, சறுக்குவது,மூச்சு வாங்குவது எனவிளையாடி வாழ்க்கைக்குத்தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்சிறுவர், சிறுமியர்” – முகுந்த் நாகராஜன் வளர்தலும் வளர்தல் நிமித்தமும் வன்முறையை நோக்கி மட்டும் தான் என்று நினைக்கும் போதே இந்த உலகம் குழந்தைகள் உலகமாக மட்டுமே இருந்திருந்தால் எவ்வளவு அமைதியாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஜெர்மானியக் கவிஞர் கதே படைத்த சாத்தான் கதாபாத்திரம், கடவுளை விடவும் நான் நல்லவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும். அதில், “நீங்களே

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது Read More »

முப்பாலுக்கு அப்பால்!

ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், ‘திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்’ என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவம் ஒரு

முப்பாலுக்கு அப்பால்! Read More »

Shopping Cart
Scroll to Top