பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் என் எத்தனையோ இரவுகளை ஈரமாக்கியதென்றால் அது உயர்வு நவிற்சியல்ல; எங்கோ, எவரோ எழுதிய ஒரு கதை, இந்தியாவிலே ஒரு எல்லையில் இருக்கும், முதிர்க்காத இளைஞனின் மூளைக்குள் சென்று, பழங்காதல் பேசி, புளகாங்கிதம் அடையும் என்று என்றாவது தஸ்தயெவ்ஸ்கி எண்ணி இருப்பாரா?
மாஸ்கோவில் பிறந்த ஒரு மாபெரும் மேதை, வடித்துக் கொடுத்த வாக்கிய பொம்மைக்குப் படித்துப் பிடித்தப் பாமரன் தைக்கும் உடை இது. ஆம்! உண்மை உடையை உரித்து விட்டு, தமிழென்னும், தொன்மை உடையைக் கொடுத்துள்ளேன். சிமிழுக்குள் வைத்து சிறைபிடிக்க முடியா, உணர்வுகளைத், தமிழுக்குள் வைத்துத் தமிழர்க்குக் கொடுத்துள்ளேன்!