மரபுக் கவிதைகள்
கவிதை, நூல்கள்
யானை வரும் பாதை
₹120.00
புதுக்கவிதைப் புயலில் சிக்கி, மரணம் எய்திய மரபுக் கவிதைக்கு மௌன அஞ்சலி செலுத்தியது போதும். இனியாவது, மரபு மரங்களை, தமிழ் நிலமெங்கும் நட்டு வைப்போம். அதில், தவறாமல் புதுமை உரம் இட்டு வைப்போம். ஆம்! பழைய குருதி மட்டும் பாய்ந்து கொண்டிருந்தால், கைப்பிடி அளவுள்ள, இருதயம் கூட இயங்காதெனில், காலமெல்லாம் நிலைக்கும் தமிழ், எப்படி பழைமைக்குள் இறவாதிருக்கும்?
காலங்களுக்குக் கட்டுப்படாத தமிழின் நாளங்களுக்குள் புதுக்குருதி நாமல்லவா பாய்ச்ச வேண்டும்? புதுக்கவிதையின் புதுமை புகுத்தப்பட்டு, மரபுக் கவிதைகள் மலரட்டும்.
காலநதிக்குள் காணாமல் போன கரைகள் மீண்டும் கண்ணுக்குத் தென்படட்டும்.
வையமிசை மீண்டும் தமிழ், தழைத்தோங்கட்டும்!