ராம் குமார்!
கள்வாங்கி இருக்கும்கவின்மிகு மலர்களைஉள்வாங்கி நிற்கும்உள்ளமுன் உள்ளம்! உன்னிடம்சொல்வாங்கிச் செல்வோர்சோகமுற்றால் சொற்களெனும்கல்வாங்கி அடைக்கலாம்கவலையெனும் பள்ளம்! தீட்டாமல் வாளுமில்லை;சுட்டுப் பொசுக்கும்தீயின்றி உலையில்லை;தென்றல் வந்து,மீட்டாமல் குழலுமில்லை;வரவெண்ணாமல்மேதினியில் சொந்தமில்லை;வேண்டும் போதுநீட்டாமல் வாழுகின்றநிலத்தார் முன்னே,நெஞ்சினிக்க அன்புமழைநித்தம் பெய்து,கேட்காமல் உதவுகின்றகேளிர் கிடைத்தால்கிட்டியவன் பெற்றபயன்கிளவியில்(சொல்) அடங்கா! அகவையால் ஒன்றும்ஆவதற்கில்லை – அவரவர்தகவை வைத்துதான் தரணி போற்றும் என்ற வரிகளின்இன்னொரு வடிவு நீ;நிசிக்குள் நிற்போர்க்குநீள்வான் விடிவு நீ; இரண்டு தினங்கள் – உன்னோடுஇருந்தால் போதும் – நீஅரக்க மனத்திலும் – மெல்லஅன்பைக் குடியேற்றுவாய்! மனம்பாழடைந்தாலும் – சிலந்திநூலடைந்தாலும் – […]