கண் மூடுங்கள் ஜானகி அம்மா!
“குயில்கள்மெளனத்தைச் சுவைத்துக்கொண்டிருக்கின்றன புல்லாங்குழற் காட்டில்யாருமில்லை வீணையின் மீதுஒரு பூவிழுந்து கிடக்கிறது எங்கிருந்தோமேகங்களை விலக்கிவழியும் ஒளிமஞ்சளில்மிதக்கிறது காற்றுஉன் முகமாகஅனைத்துக்குமானஉன் குரலாக அன்பிசைக்குயில்எஸ்.ஜானகி அம்மாவுக்குஆழ்ந்த இரங்கல்” – பழநிபாரதி பள்ளி நாட்களில் ஒரு பாடலைக் கேட்ட உடனே பாடகர்கள் பெயரைச் சொல்லும் பிரகாஷைப் பார்த்தால் எங்களுக்கு அதிசயமாகவே இருக்கும். சுசீலாவா ஷைலஜாவா என்று நாங்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நொடிப் பொழுதில் சுசிலாம்மா டா என்பான். சித்ராவா சுஜாதாவா என்று யோசிக்கவே இடம் கொடுக்காமல், கீச்சுன்னு பாடுறாங்க பாரு, ஸ்வர்ணலதாம்மா என்பான். […]