காதல் சைவமா? அசைவமா?

அவள்,மத்தியச் சோற்றுக்கேபத்தியச் சோற்றைப்பழகி வாழ்ந்தவள்! அவன்,நண்டு நத்தையெனக்கண்டு களிப்பதைஉண்டு கொளுத்தவன்! பன்னீரே அவளுக்குபட்டர் சிக்கன்!சோயா உருண்டையேசுக்கா மட்டன்! அவனோ,கட்சிமாறி சைவம் சேர்ந்ததால்முட்டையோடே பந்தத்தைமுறித்துக் கொண்டவன்! அவள்,கடுகே காரமென்றுகண் கசக்கும் அய்யமாரு! அவன்,கறிக்குத் தாகமென்றுகள் அடிக்கும் அய்யனாரு! வெளியே சென்றாலேவெஜ்ஜா? நான் வெஜ்ஜா?பட்டிமன்றம் தான்! ‘ஜீவகாருண்யம்’அவள் வாதம்! ஒரு உயிருக்குஇன்னொரு உயிரைஉணவாய் படைத்ததேஇயற்கை தான்அவன் வாதம்! வாழைக்காய் மீன்பருப்புக் ‘கோலா’ எனஅசைவப் பெயர்களைச்சைவத்திற்குச் சூட்டிஅழகு பார்ப்பாள்,வளைந்து கொடுத்ததாய்வாதிடுவாள்! பாலுண்ணும் போதுஇறைச்சியுண்ணலில்பாதகம் இல்லையெனஅவன் நியாயம் பேசுவான்! உடன்பட்டு இருவரும்உண்ணத்தகுந்தது எனச்சைவத்திற்காக […]

காதல் சைவமா? அசைவமா? Read More »

முதல் பெருந்தொற்று!

  உன் ஒற்றைக் கடைவிழிவெல்லமாய் என்னைஇனிக்க வைக்கிறது! உன் இன்னொரு கண்ணோவிடமாய்ப் பாய்ந்துவிரைக்க வைக்கிறது! ஒரு கையில்மது கோப்பையையும்இன்னொரு கையில்மருந்து குப்பியையும்வைத்திருக்கும்மந்திரக் காரியா நீ? இரண்டு கண்களில்வெவ்வேறு பார்வையெனவிளையாட்டாய்ச் சொன்னாலும்‘நாங்க இருக்கோம்’ என்றுவாசலில் வந்து நிற்கிறதுவாசன் ஐ கேர்! அவர்களின்கண்ணாடிப் பார்வைக்குள்தென்படாமல் எப்படிதெருக்களில் நடமாடுகிறாய்? கொரோனா,உலக நாடுகளைஉலையில் ஏற்றச்சீனம் கொடுத்தசீதனம்! முதலில் அதுஒவ்வொரு பகுதியாய்ஆட்கொண்டது!பிறகு மெல்லஒவ்வொரு நாட்டிலும்ஆட்கொன்றது! தனக்குள்ளே ஒருஎதிர்மத்தை உண்டாக்கி,தன்னைத் தானேதகவமைத்துக் கொண்டகொரோனா உந்தன்கொள்கை பரப்புச் செயலாளரா? பச்சோந்திகளுக்கு நீ தான்பார்வை வகுப்பெடுத்தாயா? விடியலில்சூரியனை வாசலில்காத்திருக்க

முதல் பெருந்தொற்று! Read More »

பிரிவின் பெருவலி

பிரியத்தில் தள்ளாடும் கணம்பிரிதலைப் பற்றிய எண்ணம் ஏன்? காதல் செய்வதில் மட்டும்கவனமாய் இருங்கள்…பிரிவின் அரங்கேற்றத்தைக்காலம் பார்த்துக்கொள்ளும்…  https://kavirasan.com/wp-content/uploads/2024/11/Spiderman.mp4

பிரிவின் பெருவலி Read More »

நான்கடி இமயம்!

சண்டிக்கார சமயங் களாலே மண்டிக் கிடந்த மக்களின் மனதில்  விளக்காய் இருளை விலக்கிய மாட்சி!கிழக்காய் வந்த கிளர்ச்சித் தீத்துகள்! பெரியார் என்னும் பெருஞ்சூரியனேஉரியார் என்று உளத்தில் வைக்கும்  வல்லமை பெற்ற வாக்கியமே! எம்நல்லதை எண்ணிய நான்கடி மலையே! கோபுரம் நிறைந்த காஞ்சியின் நடுவேமாபெரும் புகழில் மலர்ந்தவனே! நீ நாத்திகம் பற்றி நவில்வதைக் கேட்க சாத்தியம் என்றால் சாகவும் சம்மதம்! காரியம் முடித்த கண்ணியனே! நீவீரியம் கொண்டு விளித்ததைக் கண்டுஆரியக் கூட்டம் அஞ்சிய துன்முன்சூரியனுக்கும் சூடு குறைந்தது! இந்தித் திணிப்பை எதிர்த்து அஃதைசந்தியில் நிறுத்திய சரித்திரமே! நீ 

நான்கடி இமயம்! Read More »

சாராயம்!

தெருவிருந்து போராடத்திறனற்றோன் வணக்கம்! நம்கருவிருந்த பிள்ளைகளும்கத்தியின்மேல் நடக்கும்! ஏற்றிவைத்த நெருப்பிடையேஏழைகளின் குருதி! உரிய(து)ஆற்றிவிடத் தவறிவிட்டால்ஆட்சி மாற்றம் உறுதி! மண்முறைக்கே உரியதெனமல்லுக்கு நின்று – பலர்கண்மறைக்கும் வலிமையெல்லாம்கள்ளுக்கு உண்டு; லட்சங்கள் கொழிக்கும்-இதுலாபகரத் திட்டம்! உயிர்அச்சங்கள் அற்றோரால்அரசுக்கென்ன நட்டம்? வலைகளினைப் பிணம்தின்னும்வாய்களெல்லாம் பின்னும்! பலதலைமுறைகள் அழிகிறதேதாமதமா இன்னும்? நாணில் அம்பு பூட்டு! செத்தநம்பிக்கையை நாட்டு! நமதுமாநிலமே சிறந்ததென்றுமற்றவர்க்குக் காட்டு! விடியலுக்குக் காத்திருக்கவெளுத்திடுமா கிழக்கு? தினம்மடியுமிந்த மக்களுக்குமதுவிலக்கே இலக்கு! தோராயம் பலகோடித்திலகத்தை அழிச்சும் – இந்தச்சாராயம் அழியலையே!சாமிக்கே வெளிச்சம்! 🤦🏻‍♂️

சாராயம்! Read More »

முத்தமிழ் திணையின் முதல் திணை என்க…

கடைபோடும் மீனவர்க்குத்தடைபோடும் சட்டம்,நாற்றத்தால்-நாகரிகத்தை-எடைபோடும் நமக்கெல்லாம்எதற்கிந்தத் திட்டம்; ஆதி மன்றம் ஆகாரத்திற்கேஅகரம் – இன்றுநீதி மன்றம்நீக்கத்துடிக்கும்மகரம்(மீன்); சிங்காரச் சென்னை 2திட்டமென்று சொல்லிஅங்காரம்(கரி) முகத்திலேஅப்பிக் கொள்கிறோம்;தவறென்று உணர்வதைத்-தடுக்காமல்-தன்னலமாய் எல்லோரும்தப்பிச் செல்கிறோம்; குறிஞ்சி முல்லைமருதம் பாலை எனதிணைகள் நால்முன்திசைகள் நால்முன்நெய்தலே முதலில்நிலைத்த நிலம்;அவ்வின மக்களைவைதலால் கிடைக்குமாவாய்க்கு சலம்? சாகரம்(கடல்) கடந்துசா(சாவு) கரம் பிடிப்போர்ஆகரம்(இருப்பிடம்) கூடஆபத்தாயின்,தலைத் தூக்கிக் கேட்பதுதமிழர்க் கடமை; ஏனெனில்,ஆதித் தமிழ் வாழ்வில் – ஒரு அங்கம் வகித்தது கடலே! தமிழன்,கடக்க அல்லாததை‘கடல்’ என்றான்!ஆழமாய்க் கண்டதை‘ஆழி’ என்றான்!கார்சூழ் கொள்வதால்‘கார்கோள்’ என்றான்!பெருமையைப் புகழ‘பெருநீர்’

முத்தமிழ் திணையின் முதல் திணை என்க… Read More »

நெப்போலியன் – ஜோசஃபைன்

தன்னம்பிக்கை என்பதுதண்டவாள ரயில்! இடை வரும்இடர் தரும்இடைஞ்சல்களும் அதைஇடறி விடலாம்!தடம் விடும்இடம் வரின்தொடர்ச்சிகள் விட்டொருதொடரி விழலாம்! எந்த மனிதனாயினும்ஏதோ ஓரிடத்தில்தன்னம்பிக்கை விழுந்துதடுமாறுவான்! சிறுதவிப்புகள் வந்தால்தடம் மாறுவான்! வையம் கொடுத்தவாழ்வில் தோல்வியின்வாயுள் விழுவதும்,ஐயம் சூளும்அனைவர்க்கும் இந்தஆயுள் முழுவதும்!ஆனால்,அக்கினி ஒன்றுஅணையாமல் எரிந்தது! அதுகொளுத்தும் பண்புகொழுந்திலேயே தெரிந்தது! ஆகஸ்டு பதினைந்து,இந்தியத்திற்கு மட்டுமல்லஇன்னொரு நாட்டிற்கும்சுதந்திர தினம்! பிரஞ்சிலும் அன்று தான்விடுதலைக்கானவிதை முளைத்தது! லதீதா லமோலினிசார்லஸ் போனபார்ட்தம்பதிக்கு1769 ஆகஸ்ட் 15ல்மகனாகப் பிறந்தான்நெப்போலியன் போனபார்ட்! ஒரு,மாவீரனை மண்ணகம்வரவு வைத்தது!பிரஞ்சும் ஒருபேரரசனைத்தர்க்கத்திற்கிடமின்றிதரவு வைத்தது; சிற்றிலாடிய காலம் முதலே,புத்தகத்திற்குள்புழுவாய் ஊர்ந்தான்;வாலிபத்திற்கேவழுவாய்

நெப்போலியன் – ஜோசஃபைன் Read More »

சலீம் – அனார்கலி

எந்தத் துளைக்குள்இசை இருக்குமென்றுகாற்றே அரியும்! எந்தத் துளிக்குள்வானவில் இருக்கும்,வெயிலே அறியும்! அதைப் போல் தான்காதலும்!எந்த மனத்திற்குள் காதல் இருக்கும்,உலகம் அறியாது,காலமே அறியும்! உலக வரலாற்றில்உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்கஆ! தாயம்! கேட்டு,மனைவி மனைமாடு இழந்து,கைப்பொருள் விட்டுக்காடு நுழைந்து,உட்பகை நெஞ்சுக்குள்உலையாய் கொதிக்க – அதுகொதித்த வேகத்தில்கொலையாய் சுகிக்ககுடும்பத்திற்குள் நிகழ்ந்தகுருட்சேத்திர போரா? எல்லைகளைப் பரப்ப – பலர்அல்லைகளை உருவியமுகலாய யுத்தங்களா? வீழ்ச்சியால் தவித்தவெள்ளை இனம்சூழ்ச்சியால் வென்றுசுருட்டிக் கொண்டஅமெரிக்க யுத்தங்களா? பானிபட்டா?கலிங்கமா? வணிகம் என்றவாசல் வழி வந்துபோகும்

சலீம் – அனார்கலி Read More »

திருநங்கை/திருநம்பி

புகழ் விரும்பிகளும்கேட்க விரும்பாதகைத்தட்டுக்குச்சொந்தக்காரர்கள்! முப்பாலைமூலை முடுக்கெல்லாம்பரப்பியவர்கள்! அவனா? அவளா? என்றுஅடித்துக் கொண்டது போதும்!‘அவர்’ விகுதி கூடதமிழ்த் தான்! கடவுள் தூரிகைகலந்துத் தீட்டியவண்ண ஓவியம்! பிடித்த உடலில்பிடிக்காத உடைகூடஅணிய மறுக்கும்நமக்கென்ன தெரியும்பிடிக்காத உடலில்பிடித்த உடை அணியும்அவர்களின் வலி? மொழியில் ஒருசின்ன திருத்தம்!மேனியை இனிமெய் என்றுசொல்லாதீர்கள்!இவர்களுக்கு அதுமெய் இல்லை! வல்லினம்மிகும் மிகா விதிகளைத்தீர்மானித்து அவர்களைசந்திப் பிழை என்று சொல்வதேசந்ததிப் பிழை! கடவுள் எழுதியகவிதைத் தொகுப்பில்அவர்கள்அச்சுப் பிழை அல்லசமூகம் ஏற்றுக் கொள்ளாதசீர்த் திருத்தங்கள்!காலம் கடந்தேபுரட்சி என்றுபேசப்படுவார்கள்! இறுதியில் நிகழ்ந்தசிறிய மாற்றம் –

திருநங்கை/திருநம்பி Read More »

செத்துவிடவில்லை!

கனவாய்ப் போகும் வேளைகளில் – அடகரியாய்ப் போகும் நாளைகளில்,கனமாய்ப் போகும் உறவுகளில் – என்கவிதைக் கிடந்து சாகிறதே! கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பலகளிப்பினை எல்லாம் கொலை செய்தேன்முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்முப்போகம் நிலம் விளை செய்தேன்! எழுதா சொற்கள் ஏராளம் – நான்எழுத்தென்றானால் தாராளம்,விழுதா கிளையா தெரியாது – என்விதைகள் கொண்ட வேர் ஆழம்! முகத்தில் களிப்பு கொண்டதனால் என்முட்காயங்கள் மறைவதில்லை!அகங்கள் கொண்ட ஆழத்தை – அடஅக்கம் பக்கம் அறிவதில்லை! கண்ணிமை கவிழும்

செத்துவிடவில்லை! Read More »

Shopping Cart
Scroll to Top