திருநங்கை/திருநம்பி
புகழ் விரும்பிகளும்கேட்க விரும்பாதகைத்தட்டுக்குச்சொந்தக்காரர்கள்! முப்பாலைமூலை முடுக்கெல்லாம்பரப்பியவர்கள்! அவனா? அவளா? என்றுஅடித்துக் கொண்டது போதும்!‘அவர்’ விகுதி கூடதமிழ்த் தான்! கடவுள் தூரிகைகலந்துத் தீட்டியவண்ண ஓவியம்! பிடித்த உடலில்பிடிக்காத உடைகூடஅணிய மறுக்கும்நமக்கென்ன தெரியும்பிடிக்காத உடலில்பிடித்த உடை அணியும்அவர்களின் வலி? மொழியில் ஒருசின்ன திருத்தம்!மேனியை இனிமெய் என்றுசொல்லாதீர்கள்!இவர்களுக்கு அதுமெய் இல்லை! வல்லினம்மிகும் மிகா விதிகளைத்தீர்மானித்து அவர்களைசந்திப் பிழை என்று சொல்வதேசந்ததிப் பிழை! கடவுள் எழுதியகவிதைத் தொகுப்பில்அவர்கள்அச்சுப் பிழை அல்லசமூகம் ஏற்றுக் கொள்ளாதசீர்த் திருத்தங்கள்!காலம் கடந்தேபுரட்சி என்றுபேசப்படுவார்கள்! இறுதியில் நிகழ்ந்தசிறிய மாற்றம் – […]