நான் ரசித்த வாலி-4
உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப் […]