நான் ரசித்த வாலி – 6
வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மந்திர தந்திரங்கள் தான் எத்தனை? இருவரும் சேர்ந்து, எண்பதுகளின் முதல் பாதியில் ஈடில்லா அதிசயங்களை ஏற்படுத்தினர். ஆனால், எல்லா இன்பங்களும் ஏதோ ஒரு புள்ளியில் முடியத்தானே செய்கிறது? கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிய, இளையராஜாவின் ராஜாங்கத்தின் எத்தனையோக் கவிஞர்கள் இருக்க, வாலி அரசவைக் கவிஞரானார். வாலியின் கலைப்பயணத்தில், ஏனையவர்கள் விண்மீனெனில், ராஜா வெண்ணிலவு. எத்தனையோப் பாடல்களில் எத்தனையோப் பெயர்களுக்கு, குறுநிலங்களைக் கொடுத்த வாலி, ராஜாவுக்கென்று ஒரு ராஜ்ஜியமே கொடுத்திருக்கிறார். அதற்கு, […]