1. மங்கல வாழ்த்துப் பாடல்-புகார் காண்டம்
மக்களுக்கு ஏதும் என்றால்மன்னவன் குடையேகாக்கும்; அதுபோலே- ஆகாயத்தில்-இரவில் ஞாயிறு மறையஇரவல் நிலவேபூக்கும்; அத்தகுச் சிறந்தமதியை மதி;அன்றாடம் அதைத் மனதுள் துதி; ª ஞாயிறு விண்ணின் தோழன்; அதுபோல்ஞாலத்தில் வாழ்ந்தான்சோழன்; அவனதுபாதங்கள் மண்ணைவலம் வரும்; அதனின்பலனாய் பற்பலவளம் வரும்; அதுபோல்பரிதியும் தினமும்நிலம் வரும்; அத்தகு சிறந்தவன்இரவி; இருக்கட்டும்அவன்புகழ் மண்ணில்பரவி; ª விசும்பு விசும்பாமல் போனால்மண் விசும்பும்;மண் விசும்பினால்புல் விசும்பும்;புல் விசும்பினால்புள் விசும்பும்; மழையால் விண்ணும்கானம் பாடும்; அதன்மூலம்மண்ணின் மடியில்தானம் போடும்; அதனால்,அன்றாடம் போற்றுவோம்அடை மழையை; அளவின்றி தருமந்தகொடை நிலையை; […]