வெவ்வேறு ஒளி, ஒரே நிழல்!
வேடிக்கைக்குள் விழுந்த உலகம்வெறுப்பைக் கொடுக்கும் சம்பளமாய்;மூடிக்குள்ளே முடங்கிக் கிடக்கும் முகமென்றாகும் அம்பலமாய்? இருப்பதை எல்லாம் இசைப்பதற்கே – என்இதயம் இரண்டாய் அடிக்கிறது;இருபதில் செய்ததை மறக்காமல் – மனம்இப்போதும் செய்யத் துடிக்கிறது; உரைக்கும் சொற்கள் செவிமடல்கட்குஉள்ளேச் செல்ல மறுக்கிறதா?இரைச்சல் என்றே நினைக்கும் மனமதைஎடுத்துக் கொள்ளாதிருக்கிறதா? நிகழ்வதை நிந்தனை செய்வீர்; ஒருநாள்நிச்சயம் திறக்கும் தடங்காது;இகழ்வதைத் தொழிலெனக் கொண்டோரே – அடஎரிமலை முறத்தால் அடங்காது; நித்தம் நித்தம் முதுமை என்றன்நினைவுக்குள் சென்று அடர்கிறது;எத்தனை வயது ஏறும் போதும்இளமையும் என்னைத் தொடர்கிறது; மூடிய […]