புத்தனாக மாற
சித்தார்த்தன்
தவம் செய்தான்!
முதலில் அவன்,
சித்தார்த்தன் ஆகவே
தவம் செய்தான் என்பதை
ஏன் யாரும் சொல்லவில்லை?
முன்னது,
இருப்பதில் இருந்து
இல்லாமைக்குச் செல்வது…
பின்னது,
இல்லாமையில் இருந்து
இருத்தலைச் சொல்வது…
ஒரு ஒற்றுமை!
இரண்டு தவங்களின்
ஈட்டலையும்
கடவுளாகக்
கருதினாலும்,
விருப்பமில்லாமல்,
புத்தனுக்குப்
பூசப்பட்டதைப் போல்
இங்கும்
ஏராளமான கைகள்
மதச்சாயங்களோடு
நிற்கின்றன!
*
இது,
தண்ணீருக்குள் மூழ்கிய
தவநிலை!
இங்கு,
இலைகள் விழுந்து
எழுப்பப்போவதில்லை!
எத்தனைக் குரல்கள்
எங்கு ஒலித்தாலும்
முகங்களும் மொழிகளும்
பரிட்சயமில்லாததால்
முடியாத மோன நிலை!
கடவுளாகக் கருதக்
முக்கிய காரணம்,
‘கருவறை’ காவலே!
ஆனால்,
இந்தக் கருவறையில்
எல்லோர்க்கும் அனுமதி உண்டு!