இதயத்தளபதி

“ஆரஞ்சுக் கலரா? ரோஸ் கலரா? என்னப் படம்ணே வேணும்?”, என்று வாசலில் நின்று கொண்டு கேபிள்கார அண்ணாக் கேட்க, அப்பா எங்களோடு கலந்தாலோசித்தார். மாதத்தின் முதல் வாரத்தில் தவறாமல் கேபிள் கட்டியவர்களுக்கு எல்லாம் அப்போது வெளிவந்த ‘ஆளவந்தான்’ ‘ஷாஜகான்’ பட டிக்கெட்டுகளை, கேபிள்கார அண்ணன்கள் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்பாக் கட்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர் சொல்வதைக் கேட்டு, நானும் ஆர்த்தியும் ஆளவந்தானுக்கு வாக்களிக்க, பாரதி மட்டும் தான் ஷாஜகானைத் தேர்வு […]

இதயத்தளபதி Read More »

பாதியின் பாதையில்…

“சமயங்களில் கைவிடுதலும்கருணைக் கொலையில் தான்சேர்த்தி நண்பா”- நேசமித்ரன் சென்ற வாரம் சோகப்பாடல்களைப் பேசும் நீயா நானாவில் அதிக துயர் தரும் பாடல் பற்றி கோபிநாத் கேட்க, ‘குயில் பாட்டு’ பாடலைக் குறிப்பிட்ட பெண் ஒருவர், “பாதில நிக்கிறப் பாட்டு இருக்குல சார் அது கொடுக்குற வலியே ஒரு மாதிரி பயமா இருக்கும்”, என்றார். பால்வெளியில் பயணப்படும் வால் நட்சத்திரமாய் மனது ஒருநிமிடம் அந்தரத்திலேயே அலைந்து திரும்பியது. குயில் பாட்டைப் பற்றி மனது ஏதேனும் குறிப்பு வைத்திருக்கிறதா என

பாதியின் பாதையில்… Read More »

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட…

பயணத்தில்ஜன்னல் ஓரம்கண் மூடிக்காற்று வாங்குபவன்போல்கிடக்கிறான்பனிப் பெட்டிக்குள்பின்னகரும் மரங்கள்போல வந்துசாத்துயர் கேட்டுப்போகிறார்கள்- கலாப்ரியா “இந்த ஊர்ல இருக்க எல்லாத் தெருவையும் போட்டோ எடுத்து வச்சிக்கணும் டா”, என்று பெல்ஜியம் சாலைகளைக் காட்டியதற்கு “ஏன்?”, என்றான் ஜெரால்ட் கொஞ்சம் வியப்பாக. “நாளப்பின்ன இங்க வந்தா எது எது மாறிருக்குனு நமக்கு அடையாளம் தெரியணும்ல” “அதெல்லாம் ஒன்னும் மாறி இருக்காது. இது யூரோப். நூறு வருசத்துக்கு முன்னடி எடுத்த எந்தப் போட்டாவ பாத்தீன்னாலும் இந்த ஊரு அப்படியே தான் இருக்கும். எதுவும்

முன்ன மாரி இல்ல, ரொம்ப மாறிட்ட… Read More »

Adolescence

“கசப்பாய் இருக்கிறதெனஒவ்வொரு மிடற்றுக்கும்ஒவ்வொரு பிடி சர்க்கரையை வாயிலிட்டுவிசமருந்திச் செத்தவள்உங்களுக்கு யுவதியாகவாத் தெரிகிறாள்? நான் குழந்தை என்கிறேன்” – ந. சிவநேசன் சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் ‘அடலசன்ஸ்(Adolescence)’ பற்றிய உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஒரு சிலர் அதை ஆகச் சிறந்ததென்றும், ஒரு சிலர் அதை மறுத்துப் பேசுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி அதில், என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்துடன் பார்த்தோமேயானால், தூக்கம் கெடுவது தான் மிச்சம். பதிமூன்று வயது சிறுவன் செய்த கொலையைப்

Adolescence Read More »

முப்பாலில் இதை முதலாம் என்க…

“திருக்குறளைத் தூக்கிச் சுமக்க மதங்களின் பீடங்கள் இல்லை – அரசுகளின் பல்லக்குகள் இல்லை – திருக்குறள் பேசப்பட்ட நிலப்பரப்புக்கே தமிழ்நாடு என்ற பேரில்லை – வாள்முனையில் நீட்டிக்கப்பட்ட நெடுந்தேசம் இல்லை – திருக்குறள் எழுதப்பட்ட இனம் உலக மக்கட்பரப்பில் பேரினத் தொகுதியில்லை. சத்தியத்தின் சார்பை மட்டுமே நம்பி ஒரு நூல், உலக அறிவின் உயரத்தில் ஓர் ஆதி இனத்தின் அடையாளமாகத் திகழ்கிறதென்றால் அது எங்கள் முப்பால் ஆசான் வள்ளுவரின் மூளைச் சாறாய் விளங்கும் திருக்குறள் மட்டும்தான்” –

முப்பாலில் இதை முதலாம் என்க… Read More »

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது!

“பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை.யார் மேலும் பட்டுவிடாமல்இரண்டு கைகளையும்வீசிக்கொண்டுஇன்னும் கொஞ்ச தூரம்போகவேண்டும்.அவ்வளவு தான்” – வண்ணதாசன் இந்தத் தலைமுறையில் பயணம் செய்யப் பிடிக்கும் எனச் சொல்லிக் கொள்ளும் பலரைக் காணமுடிகிறது. இந்தியர்களைப் பொறுத்தவரைப் பயணம் என்றால் காணாததைக் காண்பது. ஆனால் மற்ற நாட்டவர்களைப் பொறுத்தவரை, காண்பதைக் காணாதது தான் பயணம். விடுமுறைக்கு எங்கே செல்வதெனத் தெரியாமல், குழப்பமான மனத்துடன் இத்தாலி செல்வதென முடிவு செய்தேன். சீசர் போன்ற ஹீரோக்களும், முசோலினி போன்ற நீரோக்களும் வாழ்ந்த வரலாற்று ஊருக்குச் செல்வதென்றால்

சீசரா? தெரியாது! நீராவா? கிடையாது! Read More »

அணையா நெருப்பு…

எப்போதாவது நீத்தார் பெருமையை நினைத்துப் பார்த்ததுண்டா?   உலகில் ஏதேனும் ஒரு நாடு, ஒரு மொழி, உயிர் நீப்பில்லாமல் உயிர் வாழ்கிறதென்று சொன்னால் அது மிகப்பெரும் பொய். ஆம்! உயிர் தான் ஒரு நாட்டை, மொழியை, அணையாமல் எரியவைக்கும் நெய்.   தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், இன்று மரமாய் இருக்கிறது என்றால், அதற்காக பல உயிர் தன்னைக் கொன்று உரமாய் இட்டதனால் தான்.   செங்கொடி!   செங்கொடி பற்றி அறியும் முன்னே,

அணையா நெருப்பு… Read More »

The 5-Hour Rule

எட்டு மணி நேர நீண்ட நாளுக்குப் பின், வீட்டிற்குள் நுழையும் நீங்கள், உணவைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு சீரிஸில் மூழ்கி நேரத்தைத் தொலைக்கிறீர்கள். ஒரு எபிசோட் போதுமென்று தொடங்கிய சீரிஸ், நான்கைந்தில் கொண்டு வந்து நிறுத்த, அயர்ச்சியில் ஆழ்துயில் கொள்கிறீர்கள். கேளிக்கை விரும்பாத மனித மனமா? என்றோ ஒருநாளெனில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எல்லா நாளும் இப்படியே சென்றால்? வென்றவர்கள் எல்லோரும் இவ்வழியில் சென்றவர்களா என்றால், இல்லை. சாதனையாளர்கள் வாழ்வை, சற்று உற்று நோக்கினால்,

The 5-Hour Rule Read More »

இமயம் சென்ற சமயம்…

இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு

இமயம் சென்ற சமயம்… Read More »

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

War is not about who is right!War is all about who is left! போர்களில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. எந்த சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதே, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தனது எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும்

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது Read More »

Shopping Cart
Scroll to Top