நான் ரசித்த வாலி – 7
பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும், “கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே! மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல் அம்மா!நின் அரவிந்த […]