The 5-Hour Rule

எட்டு மணி நேர நீண்ட நாளுக்குப் பின், வீட்டிற்குள் நுழையும் நீங்கள், உணவைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு சீரிஸில் மூழ்கி நேரத்தைத் தொலைக்கிறீர்கள். ஒரு எபிசோட் போதுமென்று தொடங்கிய சீரிஸ், நான்கைந்தில் கொண்டு வந்து நிறுத்த, அயர்ச்சியில் ஆழ்துயில் கொள்கிறீர்கள். கேளிக்கை விரும்பாத மனித மனமா? என்றோ ஒருநாளெனில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எல்லா நாளும் இப்படியே சென்றால்? வென்றவர்கள் எல்லோரும் இவ்வழியில் சென்றவர்களா என்றால், இல்லை. சாதனையாளர்கள் வாழ்வை, சற்று உற்று நோக்கினால், […]

The 5-Hour Rule Read More »

இமயம் சென்ற சமயம்…

இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு

இமயம் சென்ற சமயம்… Read More »

இசைக்குயில் சுவர்ணலதா!

சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள்.   சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு

இசைக்குயில் சுவர்ணலதா! Read More »

வாலியும் கதிரும்-2

முந்தைய அத்தியாயத்தில் சொன்னது போல, கதிருடன் வாலி கொடுத்தக் காதல் காவியங்கள் தான் எத்தனை எத்தனை? காதல் சாயத்தில் கசக்கிப் பிழிந்த துணிகளைப் போல, மொத்தப் படத்தையும் காதலால் முழுக்காட்டி இருப்பார்கள், கதிரும் வாலியும். இவர்கள் இப்படி இருக்க, ரகுமான், எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்திருப்பார். ‘காதல் தேசம்’ முக்கோணக் காதலுக்கு முதல்முறை அல்ல, ஆயினும், ரகுமானும் வாலியும் அதை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது தமிழ் சமூகத்தின் தாரக மந்திரம்.

வாலியும் கதிரும்-2 Read More »

வாலியும் கதிரும்

கூட்டணி இல்லாமல் திரைப்படம் இல்லை. எத்தனைக் கூட்டணிப் பிரிவு இழப்பில் சென்று முடிந்திருக்கின்றன? எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த வைரமுத்து இளையராஜா கூட்டணி, இன்னும் ஒரு படம் இணையாதா என்று எத்தனை மனங்கள் ஏக்கத்தில் இருக்கின்றன. இப்பொழுதும் கூட, பொன்னியின் செல்வனில் வைரமுத்துவைத் தேடும் இதயங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? ஏனோ தெரியவில்லை, மணிரத்னம் படமென்று வந்துவிட்டால் ரகுமான் அரக்கனாகி விடுவதை கண்டவர்கள் கேட்டவர்கள் சாட்சி. இப்படி எத்தனையோக் கூட்டணிகளை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கூட்டணி சக்கரம் இல்லாமல், சினிமாத்

வாலியும் கதிரும் Read More »

நான் ரசித்த வாலி – 8

‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி, “மேடைக்கு மேடை… நாத்தழும்பேறநாத்திகம் பேசினான்;பின்னாளில் – அப்பித்தம் தெளிந்து…நாத்திகத்தை நாக்கில் இருந்துவழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி

நான் ரசித்த வாலி – 8 Read More »

நான் ரசித்த வாலி – 7

பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும்,   “கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே! மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல் அம்மா!நின் அரவிந்த

நான் ரசித்த வாலி – 7 Read More »

நான் ரசித்த வாலி – 6

வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மந்திர தந்திரங்கள் தான் எத்தனை? இருவரும் சேர்ந்து, எண்பதுகளின் முதல் பாதியில் ஈடில்லா அதிசயங்களை ஏற்படுத்தினர். ஆனால், எல்லா இன்பங்களும் ஏதோ ஒரு புள்ளியில் முடியத்தானே செய்கிறது? கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிய, இளையராஜாவின் ராஜாங்கத்தின் எத்தனையோக் கவிஞர்கள் இருக்க, வாலி அரசவைக் கவிஞரானார். வாலியின் கலைப்பயணத்தில், ஏனையவர்கள் விண்மீனெனில், ராஜா வெண்ணிலவு.   எத்தனையோப் பாடல்களில் எத்தனையோப் பெயர்களுக்கு, குறுநிலங்களைக் கொடுத்த வாலி, ராஜாவுக்கென்று ஒரு ராஜ்ஜியமே கொடுத்திருக்கிறார். அதற்கு,

நான் ரசித்த வாலி – 6 Read More »

நான் ரசித்த வாலி-5

கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை

நான் ரசித்த வாலி-5 Read More »

நான் ரசித்த வாலி-4

உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப்

நான் ரசித்த வாலி-4 Read More »

Shopping Cart
Scroll to Top