கம்பராமாயணம் 7 – துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்குஉறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்பறை அடுத்தது போலும்-என் பாஅரோ(7) பலத் துறைகளை உடைய விருத்தப் பாடல்கள்கேட்டுப் பழகிய சான்றோர்களின் செவியில் (என் பாட்டினை) ஓதினால், யாழ் என்னும்தேனை செவியால் உண்ட அசுணம் என்னும் நல்ல விலங்கின் காதுகளில்பறை அடித்ததி போல, என்னுடைய கவிதைகள் துறை அடுத்த – பல துறைகளைக் கொண்ட; விருத்தத் தொகை – விருத்தம் என்னும் கவிதை வகை; கவிக்கு […]

கம்பராமாயணம் 7 – துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு Read More »

கம்பராமாயணம் – 1

கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே(1)  உலகம் முழுவதையும் தானே உருவாக்குவதாலும், அதை நிலை பெற வைப்பதாலும், அதை அழிப்பதாலும், அதிலிருந்து நீங்காமல் அளவில்லா இவ்விளையாட்டினை உடையவர் அவரே தலைவராவார்; அத்தகைய தலைவரிடமே நாங்கள் அடைக்கலம் ஆவோம்.   உலகம் யாவையும் – உலகம் மொத்தத்தையும்; தாம் உள ஆக்கலும் – தாம் உள்ளதாய் ஆக்குவதும்; நிலை பெறுத்தலும் – நிலை பெற வைப்பதும்; நீக்கலும்

கம்பராமாயணம் – 1 Read More »

முத்தமிழ் திணையின் முதல் திணை என்க…

கடைபோடும் மீனவர்க்குத்தடைபோடும் சட்டம்,நாற்றத்தால்-நாகரிகத்தை-எடைபோடும் நமக்கெல்லாம்எதற்கிந்தத் திட்டம்; ஆதி மன்றம் ஆகாரத்திற்கேஅகரம் – இன்றுநீதி மன்றம்நீக்கத்துடிக்கும்மகரம்(மீன்); சிங்காரச் சென்னை 2திட்டமென்று சொல்லிஅங்காரம்(கரி) முகத்திலேஅப்பிக் கொள்கிறோம்;தவறென்று உணர்வதைத்-தடுக்காமல்-தன்னலமாய் எல்லோரும்தப்பிச் செல்கிறோம்; குறிஞ்சி முல்லைமருதம் பாலை எனதிணைகள் நால்முன்திசைகள் நால்முன்நெய்தலே முதலில்நிலைத்த நிலம்;அவ்வின மக்களைவைதலால் கிடைக்குமாவாய்க்கு சலம்? சாகரம்(கடல்) கடந்துசா(சாவு) கரம் பிடிப்போர்ஆகரம்(இருப்பிடம்) கூடஆபத்தாயின்,தலைத் தூக்கிக் கேட்பதுதமிழர்க் கடமை; ஏனெனில்,ஆதித் தமிழ் வாழ்வில் – ஒரு அங்கம் வகித்தது கடலே! தமிழன்,கடக்க அல்லாததை‘கடல்’ என்றான்!ஆழமாய்க் கண்டதை‘ஆழி’ என்றான்!கார்சூழ் கொள்வதால்‘கார்கோள்’ என்றான்!பெருமையைப் புகழ‘பெருநீர்’

முத்தமிழ் திணையின் முதல் திணை என்க… Read More »

நெப்போலியன் – ஜோசஃபைன்

தன்னம்பிக்கை என்பதுதண்டவாள ரயில்! இடை வரும்இடர் தரும்இடைஞ்சல்களும் அதைஇடறி விடலாம்!தடம் விடும்இடம் வரின்தொடர்ச்சிகள் விட்டொருதொடரி விழலாம்! எந்த மனிதனாயினும்ஏதோ ஓரிடத்தில்தன்னம்பிக்கை விழுந்துதடுமாறுவான்! சிறுதவிப்புகள் வந்தால்தடம் மாறுவான்! வையம் கொடுத்தவாழ்வில் தோல்வியின்வாயுள் விழுவதும்,ஐயம் சூளும்அனைவர்க்கும் இந்தஆயுள் முழுவதும்!ஆனால்,அக்கினி ஒன்றுஅணையாமல் எரிந்தது! அதுகொளுத்தும் பண்புகொழுந்திலேயே தெரிந்தது! ஆகஸ்டு பதினைந்து,இந்தியத்திற்கு மட்டுமல்லஇன்னொரு நாட்டிற்கும்சுதந்திர தினம்! பிரஞ்சிலும் அன்று தான்விடுதலைக்கானவிதை முளைத்தது! லதீதா லமோலினிசார்லஸ் போனபார்ட்தம்பதிக்கு1769 ஆகஸ்ட் 15ல்மகனாகப் பிறந்தான்நெப்போலியன் போனபார்ட்! ஒரு,மாவீரனை மண்ணகம்வரவு வைத்தது!பிரஞ்சும் ஒருபேரரசனைத்தர்க்கத்திற்கிடமின்றிதரவு வைத்தது; சிற்றிலாடிய காலம் முதலே,புத்தகத்திற்குள்புழுவாய் ஊர்ந்தான்;வாலிபத்திற்கேவழுவாய்

நெப்போலியன் – ஜோசஃபைன் Read More »

சலீம் – அனார்கலி

எந்தத் துளைக்குள்இசை இருக்குமென்றுகாற்றே அரியும்! எந்தத் துளிக்குள்வானவில் இருக்கும்,வெயிலே அறியும்! அதைப் போல் தான்காதலும்!எந்த மனத்திற்குள் காதல் இருக்கும்,உலகம் அறியாது,காலமே அறியும்! உலக வரலாற்றில்உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்கஆ! தாயம்! கேட்டு,மனைவி மனைமாடு இழந்து,கைப்பொருள் விட்டுக்காடு நுழைந்து,உட்பகை நெஞ்சுக்குள்உலையாய் கொதிக்க – அதுகொதித்த வேகத்தில்கொலையாய் சுகிக்ககுடும்பத்திற்குள் நிகழ்ந்தகுருட்சேத்திர போரா? எல்லைகளைப் பரப்ப – பலர்அல்லைகளை உருவியமுகலாய யுத்தங்களா? வீழ்ச்சியால் தவித்தவெள்ளை இனம்சூழ்ச்சியால் வென்றுசுருட்டிக் கொண்டஅமெரிக்க யுத்தங்களா? பானிபட்டா?கலிங்கமா? வணிகம் என்றவாசல் வழி வந்துபோகும்

சலீம் – அனார்கலி Read More »

விதைகளில் போதிமரம்!

மேன்மையென்றும் கீழ்மையென்றும்மேதினியைப் பிரித்துநிற்கும்சாதியென்ற ஆழ்கடலைக் கடைந்தாய்! பின்போதிசென்ற புத்தனையும் அடைந்தாய்! ஏறிநின்று மிதித்தவரைஏழையாக்கும் சதித் தவறைசட்டமென்னும் சாட்டைகொண்டு வெளுத்தாய்! கீழ்மட்டம்குறைத் தீட்டிவைத்தாய் எழுத்தாய்! வேறுபாட்டு தொல்லையில்லைவெல்வதற்கும் எல்லையில்லைஎன்று அன்று நீ கொடுத்த காட்சி – நாங்கள்இன்று வெல்வ தென்ன உந்தன் நீட்சி! தாக்குதலை தடுத்து எதிர்த்தாக்குதலை விரும்பாமல்உன்னுலையில் கேடயமே செய்தாய்! எதிராய்நின்றவர்க்கும் அன்புமழைப் பெய்தாய்! சகமனிதரைக் காயமாக்கிசனாதனத்தை நியாயமாக்கிஅந்தணர்கள் அடித்தனரே கூத்து! பணிந்துவந்தனரே உன்புகழைப் பார்த்து! சட்டங்கள் உனைச்சுற்றிசாமரங்கள் வீசிவிடஆணவத்தைத் தோலுரித்துப் போட்டாய்! நீயேஆண் அவத்தை கொளுத்திவிட்டாய்

விதைகளில் போதிமரம்! Read More »

தேன்! தேன்! தேன்!

கனித்தேனே! உனைத்தானே! சுவைக்க வேண்டும் – எனகணித்தேனே! களித்தேனே! தினமும் தானே!இனித்தேனே! வேண்டாமென் றெனக்குள் நானே! உன்இதழ்தேனைக் குடித்தப்பின் எண்ணினேனே!இனித்தேனே! உன்னாலே! உள்ளன்பாலே! உனைஇசைத்தேனே! விரல்களாலும்! இதழ்களாலும்!சனித்தேனே! கனவில்நீ சாரல் தூற! அடசபித்தேனே மூடாத இமைகள் சேர!மணித்தேனே மலர்த்தேனேத் தோற்றுப் போகும் எனமலைத்தேனே! மலைத் தேனே கண்டி ராததனித் தேனே! உனைப்போல தரணி எங்கும் ஒருதகைத்தேனே! இல்லென்று வண்டும் நாட!பணித்தேனே! உனையென்னுள் பார்க்கத் தானே! – அடபகைத்தேனே! சுற்றத்தைப் பாக்கள் பாட!தனித்தேனே! எனைநானே உன்னைத் தேட! அடதவித்தேனே!

தேன்! தேன்! தேன்! Read More »

திருநங்கை/திருநம்பி

புகழ் விரும்பிகளும்கேட்க விரும்பாதகைத்தட்டுக்குச்சொந்தக்காரர்கள்! முப்பாலைமூலை முடுக்கெல்லாம்பரப்பியவர்கள்! அவனா? அவளா? என்றுஅடித்துக் கொண்டது போதும்!‘அவர்’ விகுதி கூடதமிழ்த் தான்! கடவுள் தூரிகைகலந்துத் தீட்டியவண்ண ஓவியம்! பிடித்த உடலில்பிடிக்காத உடைகூடஅணிய மறுக்கும்நமக்கென்ன தெரியும்பிடிக்காத உடலில்பிடித்த உடை அணியும்அவர்களின் வலி? மொழியில் ஒருசின்ன திருத்தம்!மேனியை இனிமெய் என்றுசொல்லாதீர்கள்!இவர்களுக்கு அதுமெய் இல்லை! வல்லினம்மிகும் மிகா விதிகளைத்தீர்மானித்து அவர்களைசந்திப் பிழை என்று சொல்வதேசந்ததிப் பிழை! கடவுள் எழுதியகவிதைத் தொகுப்பில்அவர்கள்அச்சுப் பிழை அல்லசமூகம் ஏற்றுக் கொள்ளாதசீர்த் திருத்தங்கள்!காலம் கடந்தேபுரட்சி என்றுபேசப்படுவார்கள்! இறுதியில் நிகழ்ந்தசிறிய மாற்றம் –

திருநங்கை/திருநம்பி Read More »

அணையா நெருப்பு…

எப்போதாவது நீத்தார் பெருமையை நினைத்துப் பார்த்ததுண்டா?   உலகில் ஏதேனும் ஒரு நாடு, ஒரு மொழி, உயிர் நீப்பில்லாமல் உயிர் வாழ்கிறதென்று சொன்னால் அது மிகப்பெரும் பொய். ஆம்! உயிர் தான் ஒரு நாட்டை, மொழியை, அணையாமல் எரியவைக்கும் நெய்.   தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், இன்று மரமாய் இருக்கிறது என்றால், அதற்காக பல உயிர் தன்னைக் கொன்று உரமாய் இட்டதனால் தான்.   செங்கொடி!   செங்கொடி பற்றி அறியும் முன்னே,

அணையா நெருப்பு… Read More »

பூனைக் குட்டிகள்!

எனக்கு ஒரு அற்ப ஆசை!இல்லை இல்லைகர்ப்ப ஆசை! அனைவரும்அடுத்தப் பிறப்பில்பூனையாகவே பிறக்க வேண்டும்! அவைகள்,விரட்டி விரட்டி யாரையும்காதலிப்பதில்லை! அவைகள்தேவையென்ற போது மட்டுமேவன்முறையில் இறங்கும்! முக்கியமான ஒன்று,அவைகள் தன்அந்தரங்கத்தை யாருக்கும்காட்டுவதில்லை! அவைகளைத் தான்,இன்னொருவர் வழியில்குறுக்கிடுவதையாருமே விரும்புவதில்லை! ஆதலால் தான்,அனைவரும்அடுத்தப் பிறப்பில்பூனைக்குட்டியாக பிறக்க வேண்டும்ஆசைப் படுகிறேன்! ஏங்கும் பொழுதெல்லாம்இன்னொரு உடல் சூட்டையாசிக்கும் பூனைகளாகநான் இப்போதேவாழ்ந்துகொண்டு இருக்கிறேன்!

பூனைக் குட்டிகள்! Read More »

Shopping Cart
Scroll to Top