ஆடும் பாம்படம்
எங்களுக்கெல்லாம்வசவுச் சொற்களின்வாத்தியார் அவர்! அண்டிய செடிகொடிகளால்அதிகம் புழக்கமில்லாதஒற்றை அடிப் பாதையாய் ஆனதுஅப்பாவுக்கும் அப்பத்தாவுக்குமான உறவு! அப்பத்தாவைப் பொறுத்த வரைஅப்பா ஒரு,தேவையில் திறக்கும்அண்டாகா கசம் குகை! அடகு வைத்த நகையைமாதா மாதம் மீட்டுமீண்டும் அடகு வைக்கும்ஏழைச் சாமானியனைப் போலசந்திப்பு ஒவ்வொன்றிலும்சண்டையைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறியதே இல்லை இருவரும்! எவருக்கு எதுவென்றுஎப்போதோ கையெழுத்தானஉடன்படிக்கைகளை எல்லாம்உதவாதவைகளாக்கினஅப்பத்தாவின் ஆயுள்! அன்றாடம் வரும்அனைத்து உபசரிப்புகளும்நின்று போனதன்காரணம் விளங்காமல் அப்பத்தாக்காத்திருக்க, ஐந்து விரல்களில்மோதிர விரலானஅத்தைகள் கூட வந்து பார்க்கவில்லை, அத்தனை நகைகளும்திருடுபோன பின்!