இறகு உதிர்க்கும் மரம்!
கவிதைத் தொடரின் முன்னுரை… தோன்றிய நாள் முதலே, வாழ்வில் மனிதன் ஓடிக்கொண்டே இருக்க, உழைக்க வேண்டியிருந்தது. உழைத்துக் களைத்த ஊமை விழிகள், கலைகள் மூலமாய்த் தான் கதைகள் பேசின; ஆம்!கலைகள் தான் அவன்,காயங்களுக்கெல்லாம்களிம்புகள் இட்டன;மௌனத்தைக் கூடமொழி பெயர்த்தன; சமிக்ஞையே அவனதுசகலமும் ஆனது;குறிகள் காட்டியகுறைகளைப் போக்கஒலிகள் வந்துஉதவத் தொடங்கின;ஒலிகள் கூடஓரிரு இடத்தில்உதவாமல் போக,மொழிகள் வந்துவழிகள் காட்டின; ஆனால் மொழிகளால்,வளர்ச்சியில் உழன்றவனின்வலக்கரம் பிடித்தாலும்,அயர்ச்சியில் கிடந்தவனைஆற்றுப்படுத்த முடியவில்லை; வேகமாய் ஓடும் நதியைவெட்டித் திருப்பி வயலுக்குக்கொட்டித் தீர்க்கப் பாய்ச்சுவது போல,மொழிகள் தன்னைமுறைமை […]