ஆதி குகையின் அணையா நெருப்பு…
ஆதி குகையில் அணையாத நெருப்பு… அகரம் எதுவென்றே அறியப்படாத பூமியின் நாகரிக நெருப்பிற்கு, சிகரம் தான் முதலுரசிய சிக்கிமுக்கிக் கல். அங்கு தொடங்கிய ஆதி மனிதன், வேட்டையாடி விலங்கினத்தை உண்டும், மலைகளில் புதர்களில் மறைந்தும் வாழ்ந்தான். குன்றின் வளங்கள் குன்றிப் போக, காடுகளுக்குள் கால் வைத்தான். விலக்கி வாழ்ந்த விலங்கினை எல்லாம், பழக்கி வாழ்ந்து பட்டிக்குள் அடைத்தான். எத்தனை வளங்கள் இருந்தால் என்ன, உட்கார்ந்து உண்ணும் உணவு, ஒருநாள் தீர்வது போல, காடுகளும் அவனைக் கைவிட்டன. விதைக்காமல் […]