பூனைக் குட்டிகள்!

எனக்கு ஒரு
அற்ப ஆசை!
இல்லை இல்லை
கர்ப்ப ஆசை!

அனைவரும்
அடுத்தப் பிறப்பில்
பூனையாகவே
பிறக்க வேண்டும்!

அவைகள்,
விரட்டி விரட்டி யாரையும்
காதலிப்பதில்லை!

அவைகள்
தேவையென்ற போது மட்டுமே
வன்முறையில் இறங்கும்!

முக்கியமான ஒன்று,
அவைகள் தன்
அந்தரங்கத்தை யாருக்கும்
காட்டுவதில்லை!

அவைகளைத் தான்,
இன்னொருவர் வழியில்
குறுக்கிடுவதை
யாருமே விரும்புவதில்லை!

ஆதலால் தான்,
அனைவரும்
அடுத்தப் பிறப்பில்
பூனைக்குட்டியாக
பிறக்க வேண்டும்
ஆசைப் படுகிறேன்!

ஏங்கும் பொழுதெல்லாம்
இன்னொரு உடல் சூட்டை
யாசிக்கும் பூனைகளாக
நான் இப்போதே
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்!

Shopping Cart
Scroll to Top