சநாதனம்!

  “எனக்குக் கடவுள் மேல் பயமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் மேல் தான் பயம்” – ஸ்டீபன் ஹாக்கிங்க்ஸ் ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ என்று உதயநிதி சொன்னது தான் இன்று வலதுசாரிகள் அனைவருக்குமான பேசுபொருள். அவர் என்ன சொன்னார், சொன்னது சரியா தவறா என்றெல்லாம் ஆராயாமல், அவர் மீது அவதூறு பரப்பத் தொடங்கியாயிற்று. அவர் தேர்ந்தெடுத்த சொற்களை ஆராய்ந்தால் அவர் சொல்ல வந்த கருத்தின் பொருள் புரியும். அதற்கு முன் சனாதனம் என்றால் என்ன? நம் […]

சநாதனம்! Read More »

சனிக்கிழமை சந்தை!

இந்திய நேரப்படிக் கணக்கிட்டால் எழுந்ததே மிகத் தாமதமாகத்தான். இந்நேரம் அங்குச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கும் நேரம், நண்பகலுக்கும் காலைக்குமான இடைப்பட்ட பொழுது. பதினொரு மணி. ஆனால் பெல்ஜியத்தில் அது வெறும் அதிகாலை தான். காலை ஆறரை மணி. பெல்ஜியத்தில் இருந்தாலும் இந்திய நேரத்திற்கே பழகி இருந்த மனது எழச் சொல்லிக் கட்டளை இட்டது. சனிக்கிழமை விடுமுறை நாள் தான், இன்னும் சற்று நேரம் தூங்கலாம் ஆனால் சிங்கப்பூரில் இருக்கும் அக்காவுக்கு இந்நேரம் மதியம் ஒன்றரை ஆகி

சனிக்கிழமை சந்தை! Read More »

முப்பாலுக்கு அப்பால்!

ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் படித்து முடித்ததாய் செருக்குக் கொஞ்சம் சிரம் தூக்கும் ஒவ்வொரு முறையும், ‘திருக்குறளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்’ என இறையன்பு சொன்னதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருக்குறள் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல, வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய நூல். ஒவ்வொரு முறை அதைப் படிக்கும்போதும், ஒரு புதிய பொருளோடும், அதுவரை காணாத முகத்தோடும் காட்சியளிக்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவம் ஒரு

முப்பாலுக்கு அப்பால்! Read More »

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்!

  “என் அழகைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”, என்றாள் இளவரசி மாதேவி. “நீங்கள் பொறுக்கி எடுத்த பூலோக அழகை, உருக்கிச் செய்த உன்னதச் சிற்பம்; நெருக்கி வடித்த நேர்த்திச் சித்திரம்; அடுக்கி வைத்த அழகியல் வாக்கியம்; தடுக்கி வீழ்த்தும் தாமரைத் தடாகம்”, என்றான் கெவின், உலகில் கண்ட உன்னதப் படைப்பின் அழகில் விழுந்த அடுத்த நொடி. – காலச்சக்கரம் நூல் சமூக ஊடகங்களைத் திறந்தாலே, எங்குப் பார்த்தாலும் ஜெமினை ஏ.ஐ(Gemini AI) செய்து கொடுக்கும் செயற்கைப் படங்கள்

ஜெமினை ஏ.ஐ-யும் அழகின் அளவீடும்! Read More »

Adolescence

“கசப்பாய் இருக்கிறதெனஒவ்வொரு மிடற்றுக்கும்ஒவ்வொரு பிடி சர்க்கரையை வாயிலிட்டுவிசமருந்திச் செத்தவள்உங்களுக்கு யுவதியாகவாத் தெரிகிறாள்? நான் குழந்தை என்கிறேன்” – ந. சிவநேசன் சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் ‘அடலசன்ஸ்(Adolescence)’ பற்றிய உரையாடல்களைக் கேட்க முடிகிறது. ஒரு சிலர் அதை ஆகச் சிறந்ததென்றும், ஒரு சிலர் அதை மறுத்துப் பேசுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அப்படி அதில், என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்துடன் பார்த்தோமேயானால், தூக்கம் கெடுவது தான் மிச்சம். பதிமூன்று வயது சிறுவன் செய்த கொலையைப்

Adolescence Read More »

Shopping Cart
Scroll to Top