
வேடிக்கைக்குள் விழுந்த உலகம்
வெறுப்பைக் கொடுக்கும் சம்பளமாய்;
மூடிக்குள்ளே முடங்கிக் கிடக்கும்
முகமென்றாகும் அம்பலமாய்?
இருப்பதை எல்லாம் இசைப்பதற்கே – என்
இதயம் இரண்டாய் அடிக்கிறது;
இருபதில் செய்ததை மறக்காமல் – மனம்
இப்போதும் செய்யத் துடிக்கிறது;
உரைக்கும் சொற்கள் செவிமடல்கட்கு
உள்ளேச் செல்ல மறுக்கிறதா?
இரைச்சல் என்றே நினைக்கும் மனமதை
எடுத்துக் கொள்ளாதிருக்கிறதா?
நிகழ்வதை நிந்தனை செய்வீர்; ஒருநாள்
நிச்சயம் திறக்கும் தடங்காது;
இகழ்வதைத் தொழிலெனக் கொண்டோரே – அட
எரிமலை முறத்தால் அடங்காது;
நித்தம் நித்தம் முதுமை என்றன்
நினைவுக்குள் சென்று அடர்கிறது;
எத்தனை வயது ஏறும் போதும்
இளமையும் என்னைத் தொடர்கிறது;
மூடிய போதும் இமைகள் வழியே
முற்றும் பார்க்கப் பழகிவிட்டேன்;
கூடிய மட்டும் அடைபட்டிருக்கும்
கூண்டுகள் உடைக்கத் துணிந்துவிட்டேன்;
வாள்கள் முன்னே வெல்லாதே – சிறு
வைக்கோல் செய்யும் தொந்தரவும்;
தோள்கள் உண்டு தூக்க எதற்கும்
துணிந்தவர் மட்டும் முன்வரவும்;
பாதம் நூறும் பாதை மாறும்
பயணம் இங்கே ஒன்றல்லவா?
வேதம் போல மனங்களில் அன்பை
விதைக்க உகந்தது இன்றல்லவா?
காலம் எதற்கும் பதில் சொல்லும்முன்
கனவில் மண்ணைக் கொட்டாதீர்;
ஆலமரங்கள் வளரும் முன்னதன்
அடி வேர்களையும் வெட்டாதீர்;
பாடல் தீரும் பஞ்சம் மீறும்
பாரே ஒருநாள் சுரம் கோரும்; அன்று
வாடல் என்றே வாழ்ந்தோர் குரல்கள்
வையத்திசையில் அரங்கேறும்;
Different Light, Same Shadow…
Do you feel my presence, echoing here?
Can you see the storm of thoughts I fear?
A doubt persists—am I rightly placed?
The dread of failure looms, unchased;
What I can give remains abundant, plenty,
I still do the things I did at twenty;
Though aging comes along my side,
A youthful spark still burns inside;
Don’t shun my worth, nor quell my fight,
Don’t mute my shout, nor dim my light;
Through the years, I’ve learned to see,
I can hear, I can feel, I can set you free;
I hold my skill, with bounds so rare,
You teach me much, as I too share;
Together we can grow and change,
Our views expand, it’s not so strange;
Let’s end all doubt, start to trust,
This world’s a gem, a marvel we must;
No matter the age or the road we take,
No matter the choices we dare to make,
Though veils of falsehood gently fall,
We must uplift the grace in all,
Each voice a note in life’s grand song,
Respected, heard, where all belong;