Bangalore Days

பேசிக்கொண்டே இருந்ததில் பேருந்துக்கான நேரம் அருகுவதைக் கூட பொருட்படுத்தாது இருக்க, இன்னும் அரை மணி நேரத்தில் பேருந்து என்பதை உணர்ந்த கணம் தான் உடனே கிளம்பினேன். ஏற வேண்டிய பேருந்து எங்கள் வாகனத்திற்குச் சற்று முன்னால் செல்ல, ஒரு வழியாய் அதைப் பின் தொடர்ந்து உரிய நேரத்தில் ஏற வேண்டிய இடத்தை அடைந்து பேருந்தில் ஏறியாயிற்று. காலணி கொஞ்சம் கடுகடுத்தது. செருப்பு கொண்டு வராததால், எங்குச் சென்றாலும் பூட்ஸ் தான். இரவெல்லாம் அதை அணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை ஏதோ செய்ய, கழற்றி வைத்து விட்டு காலோடு கிடக்கவும் மனம் ஒவ்வவில்லை.

“புழுக்கமாய் இருந்தாலும் சரி
பூட்ஸை அணிந்து கொள்

எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்கு போ..!

அங்கு தான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து அடித்தார்கள்
உன் பாட்டனை”

என்ற கண்மணி ராசாவின் கவிதை மனமெங்கும் நிழலாட, காலணிகள் என்னைப் போன்றவனை வந்தடைய எத்தனை போராட்டங்களைப் பார்த்திருக்கும்? அணிந்து கொண்டிருந்த பூட்ஸோடே அற்றைய இரவு கழிந்தது. கண் விழித்தபோது காலைப் புலர்ந்திருந்தது. இன்னும் சில நிமிடங்களில் இறங்கும் இடம் வருமென, உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். மூன்று பைகள் சுமக்க கனமாய்த் தான் இருந்தது. பெங்களூருவில் நான் இறங்கிய இடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போலவே அப்படியே இருந்தது. கன்னட நடையில் தமிழ் பேசும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கடந்து, பிரியா அக்கா வீட்டுக்குச் செல்லும் வழிகளைப் பார்த்தால், ஒரு கிலோமீட்டர் என்றது கூகுள் மேப். மூன்று பைகளோடு ஒரு கிலோமீட்டர் நடப்பது அவ்வளவு எளிதல்ல. ராப்பிடோ ஆட்டோ ஒன்றைப் பதிவு செய்தேன். பதிவு செய்த அடுத்த நொடியே ‘சரஸ்வதி’ என்ற பெண் அதை ஏற்க, பெயரே மனமெங்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பயமாய் இருந்த காலம் கடந்து, இப்படி சுயமாய் இயங்கும் பெண்களைக் கண்டால் பெரும் மகிழ்ச்சி அன்றி வேறென்ன வரும்? இவ்வளவு சிறிய காலத்தில் இத்தனை மாற்றங்களா?

ஆட்டோவிற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால், மாற்றம் என்று நினைத்த ஒன்று ஏமாற்றம் தான் கொண்டு வந்தது. இளைஞன் ஒருவன் என் அருகே வந்து தன் ஆட்டோவை நிறுத்தி, ‘ராப்பிடோ’ என்று சொல்ல, நான் புரியாத விழியோடு, ‘சரஸ்வதி?’ என்றேன். ‘ஆம், என் அம்மா தான்’ என்றான். என் புரியா மொழியைப் புரிந்து கொண்ட இளைஞன், ‘அதிகம் ரத்து செய்வதால் தன் கணக்கு முடக்கப் பட்டதாகவும் அதனால் தான், அம்மாவின் கணக்கைப் பயன்படுத்துவதாகவும்’ விளக்கம் கூறிக் கொண்டே வந்தான். குருதியுள் ஊடுருவிய குளிரை எதிர்க்க, அந்த இளைஞன் கால் முதல் காது வரை மூடியிருந்தான்.

“என்ன படிக்கிற?” என்றதும்,

“பி.காம் படிக்கிறேன்”, என்றான். ஒரு கிலோமீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் நாங்கள் ஓரளவு பேசிக் கொள்ள, குடும்பச் சூழல் காரணமாகத் தான் இப்படி அதிகாலையே ஆட்டோ ஓட்டுவதாய்க் கூறினான். அவன் ஆங்கிலம் என்னை ஆச்சரியப் படுத்தியது. இறங்கும் போது காட்டிய தொகையை விட இருபது ரூபாய் நான் அதிகமாய்க் கொடுக்க, ‘தாங்க் யூ சார், தாங்க் யூ சார்’ என்று அழுந்தக் கூறினான். ஒருவர் நாளை அழகாய் மாற்ற இருபது ரூபாய்க்குத் தான் எத்தனை வல்லமை உள்ளது?

இன்று அலுவலகம் செல்ல வேண்டும் ஆதலால் அயர்ச்சி ஆயினும் ஓய்வுக்கு அங்கே இடம் இல்லை. இந்தியா வந்தால் பெங்களூரு அலுவலகம் வந்து அனைவரையும் காண்பதாய்ச் சொன்ன வாக்கை நிறைவேற்ற, அலுவலகம் செல்ல ஆயத்தம் ஆனேன். ஸ்ரீதரன் மாமா அலுவலகத்திற்கு மிக அருகிலே இறக்கி விட உள்ளே செல்ல அனுமதி இல்லாமல், வெளியில் நின்றபடி உள்ளே இருக்கும் குழு நண்பர்களை அழைத்து வெளியே வரச் சொன்னேன். வாசலில் நின்றபடி தலை தாழ்த்தி அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, ‘வணக்கம்’ என்றது ஒரு பழகிய குரல். நிமிர்ந்து பார்த்தால், குறையா புன்னகையோடு மேலாளர் ரதி நின்று கொண்டிருந்தார். ரதியை மேலாளர் என்று சொன்னால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். அவ்வளவு இளமையாய், சின்னப் பெண் போல இருப்பார். என்னிடம் ஐடி இல்லை என்றும், உள்ளே செல்லும் முறைமைத் தெரியாதென்றும் அவரிடம் சொல்ல, வா என்பது போல் கையசைத்துத் தன் பின்னாலேயே அழைத்துச் சென்றார். தேடிச் சென்ற இடத்தில் உணவு, தென்படாது போக, ஒற்றைக் குழைக்கு ஓடிச் செல்லும் ஆட்டுக்குட்டியாய் அவருடன் சென்றது என் பாதம். உள்ளே சென்றவர் வாசலில் இருப்பவர்களிடம், நான் பெல்ஜியத்தில் இருந்து இரு நாட்களுக்கு மட்டும் வந்திருப்பதாகச் சொல்லி அனுமதி ஐடி ஒன்றைக் கேட்க, அவர்கள் அப்படி அனுமதி அளிப்பது சாத்தியமில்லை என்று கையை விரித்தனர். அதற்குள் என்னோடு பணி புரிபவர்கள் எல்லாம் கீழே வர, அங்கு ஒரு கூட்டமே கூடியது. ‘உன்னை அழைத்துச் செல்ல ஒரு பட்டாளமே வந்திருக்கிறது’ என்று பகடி செய்தார் ரதி. இல்லை என்று நான் ஏற்க மறுத்தாலும் அத்தனைப்பேர் அங்கே வந்து நின்றது உள்ளூர எனக்குள் ஒருவித சொல்லமுடியாத உணர்வையே கொடுத்தது. அனுமதி கிடைக்க அரை மணிக்கு மேலாக, நான் எவ்வளவு சொல்லியும் மொத்தக் கூட்டமும் அங்கிருந்து அசையாதிருந்ததே ஆச்சரியம்.

ஒரு வழியாய் எல்லோரும், இரண்டாம் மாடியில் உள்ள இருக்கைக்குச் செல்ல, உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு கூட்டம் காலை உணவுக்குச் செல்ல எழுந்தது. அமர்ந்து ஆசுவாசம் அடைய மூச்சு கூட விட்டிருக்க மாட்டேன், அதற்குள் இன்னொரு சுற்றா? எல்லோரும் ஏழாம் மாடியில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றோம். எங்களோடு வந்த கூட்டத்திலேயே எனக்குச் சற்றும் பழக்கமில்லாத ஒருவர் வந்து என்னிடம் வந்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு உண்ண என்ன வேண்டும் என்று கேட்டார். நான் காலை உணவு உண்டதாய்ச் சொல்ல, அப்படியென்றால் காப்பியாவது குடிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தியவர், எனக்கும் சேர்த்து காப்பிக்குப் பணம் செலுத்தினார். ஒரு செயலியில் என்ன வேண்டுமெனத் தேர்வு செய்துவிட்டு பணம் கட்டிக் காத்திருந்தால், உணவு தயாரானதும் நமக்கான அழைப்பு வரும். அந்தக் கடையில் சென்று நம் உணவைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கே ஒருவர் அல்லது இருவரே எல்லோருக்கும் சேர்த்துப் பணம் கட்டி வாங்கும் முறை எனக்குக் கொஞ்சம் புதிதாய் இருந்தது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பழக்கம் எல்லாம் பள்ளி கல்லூரியோடு முடிந்ததாய் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, பணிக்கு வந்தும் அது தொடர்வதைப் பார்க்கும்பொழுது வியப்பாகவும், உவப்பாகவும் தான் இருந்தது. பணிக்குச் சேர்ந்த தொடக்க நாட்களில், பிறருக்கும் சேர்த்து பணம் செலுத்தும் பழக்கத்தைத் தடுத்த நண்பன், ‘இங்க எல்லாரும் தான் சம்பாதிக்கிறான். அவன் அவனுக்கு என்ன வேணுமோ அவன் அவன் வாங்கிப்பான். நீ உனக்கு மட்டும் பணம் கட்டு போதும்’ என்ற போது தான் அவரவர் உணவுக்கு அவரவரே பணம் செலுத்தும் ‘டச்சு ட்ரீட்’ முறை எனக்கு அறிமுகம் ஆனது. அந்த முறைமைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாய் இருந்தது இந்த இளம் தலைமுறையின் விருந்தோம்பல்.

உண்டு முடித்து ஒருவாறு வேலையில் அமரவே ஒரு மணி நேரம் எடுத்தது எல்லோர்க்கும். பெல்ஜியத்தில் இருந்து வந்ததால், இந்தியாவிலிருந்து வேலையைத் தொடங்க எனக்கு இன்னும் அனுமதி வராதிருக்க, நான் மட்டும் அங்கேயே அமர்ந்து எல்லோருடனும் பேசிக் கொண்டே என் பொழுதினைக் கழித்தேன். உலைக்கு மேல் ஊசலாடும் மூடி போல், தலைக்கு மேல் வேலை தாண்டவமாடியது. ஆனால் கையறு நிலையில் அனுமதிக்காகக் காத்திருந்த பொழுதில், எல்லோரும் வந்து என்னிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றனர். விருந்தினைப் போல் நடத்தும் இடங்களை எல்லாம், நான், பெருந்திணை போல் நினைத்து விலகியே தான் இருந்தேன். ஆனால் இன்று, ஒவ்வொருவராய் வந்து உபசரிக்க, உறவினைப் போல் எந்தன் நலம் வினவ, உள்ளம் எங்கிலும் உற்சவ மனநிலை. காலை உணவு போல், மதிய உணவு முறைமையும் மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது. யாரோ ஒருவர் யார் யாருக்கோ உணவு வாங்கிக் கொடுக்க, செலவு செய்யா நிலையே உறுத்தலாய் மாறி உடற்கூசச் செய்தது. உண்டு முடித்ததும் எல்லோரும் வேலைக்குத் திரும்ப, நான் மட்டும் வெளியே கிளம்பினேன். மாலை வரை வேலை இல்லை, வேறென்ன செய்வது.

தெலங்கானாவில் இருந்து சாயும், சென்னையில் இருந்து மௌனிக்காவும் என்னைக் காண இத்தனைத் தொலைவு வந்திருப்பதே எனக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. எல்லோரையும் வெளியே அழைத்துச் செல்ல நினைத்து அவர்கள் வேலை முடிக்கும் வரை காத்திருந்தேன். ஏனையோர் வேலை முடிக்க இரவு ஆக, நானும் என்னோடு பணி புரியும் மற்ற மூவரும் அருகில் இருக்கும் ஃபோரம் மால் சென்று உணவருந்தினோம். அங்கிருந்து வீடு வந்து சேர பத்து மணி ஆனது. சொந்த வேலையாகப் பிரியா அக்கா கோவைக் கிளம்ப, அவர்களை வழியனுப்பி வைக்கச் சென்ற மாமா என்னையும் அவரோடு வரும்படி கேட்டுக் கொண்டார். மூளைச் சுமை உறங்கச் சொல்லி உத்தரவிட, மூடும் இமை, இறங்கத் துடித்து இருவிழி தொட, உள்ளே நானும் உறங்கச் செல்ல வெளியே கதவுகள் பூட்டப்பட்டது.

மறுநாள் அதிகாலையே விழிப்பு எந்தன் விழித் தாழ் திறக்க, நானும் மாமாவும் அருகாமையில் இருக்கும் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டோம். மாமாவோடு பணிபுரிபவரும் அங்கே எங்களோடு இணைந்து கொள்ள, பணி, குடும்பம், சொந்த ஊர், பெங்களூரு, உடல் பராமரிப்பு என உரையாடல் எங்கெங்கோ நீண்டது. ஆண்கள் உலகம் அத்தனை அழகானது. அங்கே அகவையோ அந்தஸ்தோ நட்பை முடிவு செய்வதில்லை. ஆம் அங்கே, நட்புப் படகை நங்கூரமிட்டு நிறுத்த ஒரு குறும் புன்னகையோ, சிறு கைகுலுக்கலோ போதும். நாங்கள் மூவரும் அங்கே நடந்தபடியும் அமர்ந்தபடியும் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருக்க, மாமாவின் நண்பர் எங்களிடம் இருந்து விடை பெற்றார். நானும் மாமாவும் காப்பியோடு எங்கள் காலை நடைப் பயணத்தை முடித்துக் கொண்டோம். வெய்யில் ஏறும் முன், நெய்யில் ஊறிய தோசை, காலை உணவுக்கு. அங்கிருந்து அலுவலகம் என இனிதாய்த் தொடங்கியது என் இரண்டாம் நாள். வேலைப் பார்ப்பதற்கான அனுமதியும் வந்து சேர, அந்நாளைக் கடத்த வேறென்ன வேண்டும்.

எங்கள் குழு மட்டும் மாலை வெளியே செல்ல முடிவெடுத்து, ஓர் உணவகத்தைத் தேர்ந்தெடுத்தோம். எல்லாம் முடித்து இரவு வீடு வரப் பிரியா அக்காவை அழைக்க, மாமா தொடர்வண்டி நிலையம் சென்றிருந்தமையால் வாசலிலேயே காத்திருக்க வேண்டியதாய்ப் போனது. அருகாமையில் இருக்கும் கடையில் வாங்கிய தேநீர் துணையோடு தெருக்களில் உலாவினேன். பொதுவாய் பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். ஆனால் இத்தனை முறைச் சென்றிருந்த போதிலும் நான் ஒருமுறை கூட பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் சிக்கியதே இல்லை எனக் காலை தான் மாமாவிடம் நான் பெருமையாய் சொல்லிக் கொண்டிருந்தேன். பதினொரு மணிக்கே வருவதாய்ச் சொன்ன மாமா போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வீடு வரப் பன்னிரண்டரை மணி ஆனது. போக்குவரத்து நெரிசலை அனுபவிக்க நாம் சாலையில் செல்லத் தேவையில்லை என்றும், பெங்களூரு நெரிசல் ஏதோ ஒரு வகையில் நம்மை பாதிக்க வல்லது என்றும் அன்று தான் விளங்கியது எனக்கு.

அக்கா திரும்பிய கையோடு மாமா சென்னை செல்ல வேண்டிய சூழல் ஆதலால், சனிக்கிழமை மதிய உணவுக்கு ஷ்யாமா அக்கா அழைக்க, நானும் பிரியா அக்காவும் மட்டும் கிளம்பிச் சென்றோம். நாங்கள் சென்று இறங்கிய கணத்தில் காயத்ரி அக்காவும் வந்து சேர வந்தவர்களை வரவேற்க ஷ்யாமா அக்காவின் கணவர் வாசலிலேயே காத்திருந்தார். ஷ்யாமா அக்காவும் மாமாவும் சுத்த சைவம். அசைவத்திலிருந்து சைவத்திற்குக் கட்சித் தாவல் செய்த முட்டையை மட்டும் ஷ்யாமா அக்கா ஏற்றுக் கொண்டபோதும், சனிக்கிழமை போன்ற கிழமைகள் அதற்குச் சம்மதிப்பதில்லை. ஆயினும், ஊரிலிருந்து வரும் நான் உண்ண வேண்டுமென, ஷ்யாமா அக்கா எனக்காக அன்று முட்டை மற்றும் இதர சைவ உணவுகள் செய்ய, வெளியிலிருந்து காயத்ரி அக்கா, கோழி, கறி, மீன் அசைவத்தில் அனைத்தும் செய்து எடுத்து வர, பிரியா அக்காவும் நானும் உண்டு கொழுத்து அசைய முடியாமல் கிடக்கும் ஊர்வன போல் ஆனோம். அளவுச் சாப்பாடு, அரை வயிற்று உணவு என இக்கிகாய்ப் பேசும் எந்த விதியும் அங்கே எடுபடாமலேயே போனது. உண்ணும் பொழுது,

“ஷ்யாமா அக்காவும் மாமாவும் தான் அசைவம் சாப்பிட மாட்டாங்களே அப்பறம் ஏன் க்கா இதெல்லாம் செஞ்சி இங்க கொண்டு வந்தீங்க?”, என்று நான் காயத்ரி அக்காவிடம் கேட்க,

“சைவம் மட்டும் போதும்னு தான் நெனச்சோம் அப்பறம் ஊர்ல இருந்து வந்த புள்ள, பொக்குன்னு போயிடும்ல. அதான்”, என்றார் ஷ்யாமா அக்கா, தன் கொஞ்சமும் மாறாத கொங்கு மொழிகள்.

அங்கிருந்து எல்லோரும் பிரியா அக்கா வீட்டிற்குச் செல்ல, மாலை இன்னும் சிலரோடு உணவகம் ஒன்றில் திட்டமிட்ட கூடலுக்குத் தயார் ஆனோம்.

வெளிநாடு எடுத்துச் செல்வதற்காய் காயத்ரி அக்கா கொண்டு வந்த பொருட்களை எல்லாம் ஷ்யாமா அக்கா வீட்டில் இருந்து சுமக்க முடியாமல் தூக்கி வந்தேன். வீடு வந்த கணமே என்னுடைய இன்னொரு மேலாளர் காவ்யா அழைத்து எனக்கு ஏதோ பார்சல் அனுப்பி இருப்பதாகக் கீழே வரச் சொல்ல, ஊபரில் உடைகள் இரண்டு வந்து சேர்ந்தன. என்ன சொல்வதென்று தெரியாமல் நான்,

“எதுக்கு காவ்யா இதெல்லாம்?”, என்று வினவ,

“உனக்குப் புடிக்குமோ, புடிக்காதோ தெரியல ஆனா கொடுக்கணும்னு தோனுச்சு. குர்த்தாவ முதல்ல குளிர் தண்ணில துவைச்சிடு, அப்ப தான் அளவு சரியா இருக்கும். கலர் எல்லாம் ஒகேவா?”, என்று என் நெருடலைப் பொருட்படுத்தாமல் நீண்டு கொண்டே சென்றது அவர் பதில். இடை இடையே என்னோடு பணி புரியும் சுவாமி நான் எங்கிருப்பதாய்க் கேட்டு அழைக்க, அலைச்சலுக்கு நடுவில் நான் அவ்வளவாய் அவனைப் பொருட்படுத்தவே இல்லை. இங்கு, அங்கு என்று ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழிக்க, ஆனால் சுவாமி விடுவது போல் இல்லை. அலட்சிய நோக்கம் இல்லை எனினும், அற்றை நாள் கொடுத்த அயர்ச்சி, காரணம் சொல்ல எனைக் கட்டாயப் படுத்தியது. இரவு, உணவகம் செல்லப் போவதாகச் சுவாமியிடம் சொல்ல, என்னைத் தேடி அங்கேயே வந்துவிட்டான். வாசலில் ஒரு சில நிமிடங்கள் பேச வேண்டும் என்றவன், எங்கே தங்கி இருக்கிறேன், எப்போது திரும்பிச் செல்கிறேன் என ஒரு சில முறைசார் கேள்வி கேட்டு முடித்துக் கொண்டு, தன் வண்டியில் இருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்து என்னிடம் நீட்டினான். பிரிக்காமலேயே அது கைக்கடிகாரம் என்று தெரிந்தது எனக்கு. நான் வேண்டாம் என்று சொன்னபோதும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் கைகளில் திணித்த சுவாமி, ஏதோ எங்களால் முடிந்தது என்றான். சில நிமிட உரையாடலுக்குப் பின், சுவாமி விடைபெற்றுக் கொள்ள, ஆர்வம் தாங்காமல் அதைப் பிரித்துப் பார்த்தேன். எப்போதோ வாங்க நினைத்து, காசில்லாமல் தவறவிட்ட விலையுயர்ந்த கடிகாரம். அன்பின் அளவீடு பொருட்களில் இல்லை எனினும் இப்படி ஒரு சேரக் கிடைத்த அனைத்தும், ஒருவாறு நெஞ்சை நிலைகுலையச் செய்தது. எப்போதோ எழுதிய கவிதை ஒன்றைக் கடந்து செல்லாமல் இருக்க முடியவில்லை.

“கம்பளிப் பூச்சி ஊர்ந்தே
பழகிய உடம்பு
முதன்முதலாய் சிலிர்க்கிறது,

தலை மேல் விழுந்த பூக்களால்”

இரவு உணவகத்தில் சுபா அக்காவும், சுதா அக்காவும் வந்து சேர்ந்து கொள்ள, அவர்களின் கனிவு, முதல்முறைப் பார்த்த வியப்பு, ஆசையாய்ப் பேசும் அன்பு என அற்றைய நாள் மேலும் அழகாகிக் கொண்டே தான் போனது. இதில் வியப்பு என்னவெனில், அக்கா மாமா என்று உறவோடு அழைக்கும் ஒருவர் கூட எனக்கு உறவு முறை அல்ல. இலக்கியம் புத்தகம் என எங்கெங்கோ கிடைத்த அறிமுகம், இத்தனை உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்றால் வியப்பன்றி வேறென்ன வரும்? பேருந்துக்கு நேரமானதால் அங்கிருந்து அடைத்து நெரித்து மாமாவின் வாகனத்திலேயே வீடு வந்து சேர்ந்தோம். மெட்ரோ வேலை நடக்கிறதென ஆட்டோ ஓட்டுனர், தெற்கு வடக்குத் தெரியாத ஏதோ ஓர் இடத்தில் என்னை இறக்கிவிட அரக்கப்பறக்க ஓடி, தோள் வலிக்க, மூச்சிரைக்க மூன்று பைகளோடு ஒருவழியாய் பேருந்தைப் பிடித்து, இறக்கி வைத்தேன், சுமைகளையும் இமைகளையும்.

காலை விடிந்த பின்பும் பேருந்து தஞ்சாவூர் தான் அடைந்திருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் பேச்சுக் கொடுக்க, அலைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு கும்பகோணம் செல்லும்வரை பேசிக் கொண்டே வந்தேன். வழித்துணை இருக்க, விழித் துணை எதற்கு?

பேருந்து எங்கள் இருவரையும் ஆட்டோ, நகரப்பேருந்து என எதுவும் இல்லாத சுவாமிமலை பைபாசிலேயே இறக்கி விட்டுச் செல்ல, என் கைகளில் இருந்த மூன்று பைகளில் ஒன்றை வாங்கிக் கொண்ட பக்கத்து இருக்கை இளைஞன் தன்னை அழைக்க வந்தவரிடம் என்னை ஆட்டோ நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கூறினான். வந்தவர் உதவியால் வழி பிறக்க, அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். முதல் நாள் சரஸ்வதி அம்மாவின் பெயரில் ஆட்டோ ஓட்டிய இளைஞனின் முகம் கண் முன் வந்து போனது. எங்கோ யாருக்கோ செய்யும் உதவி வேறொரு வடிவில் நம்மை மீண்டும் வந்தடைவதெல்லாம் வையத்தில் பேரன்பு வடியாதிருப்பதன் சாட்சி அல்லவோ?

காயத்ரி அக்கா கொடுத்த பையைப் பிரித்துப் பார்த்தால், உணவு உடை என ஏதேதோ இருந்தது. இயல்பாய் பேசும் போது சொன்ன இனிப்பு வகைகளைக் கூடச் செய்து அனுப்பி இருந்தார். அதனூடே காவ்யா கொடுத்த உடைகளும் கண்ணில் பட, அவருக்கு நன்றி சொல்லியும், குழுவினர் வாங்கிக் கொடுத்த கடிகாரத்தைப் பற்றியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். செய்தி சென்றடைந்த மறு கணமே,

“இவையெல்லாம் நாங்கள் உன் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு மருது”, என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

“இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை காவ்யா. எப்படிக் கைம்மாறு செய்வதென்றே புரியவில்லை”, என்றேன்.

“எதுவும் செய்ய வேண்டாம், இப்போதைக்குக் கிடைக்கும் அன்பை அனுபவித்துக் கொள்”, என்றார்.

அன்பின் பெருவெளி எவ்வளவு அழகானது? பிறகு, இந்த உலகில் அது தானே எல்லாம்?

ஆம்!

அன்பே முறை!
அன்பே மறை!
அன்பே நிறை!
அன்பே இறை!

Bangalore Days!

There are times when a journey begins long before we actually leave.

That night, I was still sitting and talking when the time for my bus was quietly slipping away. It was only when I realised that the bus would leave in another half an hour that I finally got up and hurried out.

The bus was already moving a little ahead of our vehicle. We followed it for a while and somehow reached the place where I had to board. I climbed in just in time.

I settled into my seat.

The boots on my feet were beginning to bother me.

I had not brought slippers with me. So wherever I went, the boots had followed. Now I had to spend the whole night in them.

I could take them off.

But somehow, I could not bring myself to sleep with my bare feet exposed either.

And then, from somewhere in the back of my mind, a poem by Kanmani Rasa came looking for me.

Even if it feels suffocating,
wear your boots.

No matter how long it takes,
go to school
only through Melatheru.

Because it was there
they tied up your grandfather
and beat him
simply because he wore slippers.

I looked at my boots again.

How many struggles must have taken place before a pair of shoes could become something ordinary for someone like me?

That night, I slept with my boots on.

When I opened my eyes, morning had already arrived.

I gathered my things. In a few minutes, it would be time to get down. Three bags were not easy to carry.

The place where I got down in Bengaluru looked almost exactly as it had three years ago. I passed auto drivers speaking Tamil in a Kannada accent and checked the way to Priya Akka’s house.

Google Maps said one kilometre.

One kilometre with three bags is not really one kilometre.

So I booked a Rapido auto.

The moment the booking was accepted, I saw the name of the rider.

Saraswathi.

The name itself brought a strange happiness.

We have come a long way from a time when women were expected to live within fear and restrictions. To see women moving about on their own, earning and working for themselves, still gives me a quiet joy.

So much change in such a short time.

I waited for the auto.

A few minutes later, a young man arrived and stopped beside me.

“Rapido,” he said.

“Saraswathi?” I asked, looking at him with confusion.

“Yes. She is my mother.”

He understood my confusion and explained. His mother’s account had been blocked because of too many cancellations, so he was using her account to drive the auto.

The cold had entered deep into the morning. He had covered himself from his feet almost up to his ears.

“What are you studying?”

“B.Com.”

Before we reached the one-kilometre mark, we had spoken enough to know a little about each other. He told me that because of his family situation, he had to drive the auto from early morning.

His English surprised me.

When I got down, I paid him twenty rupees more than the amount shown.

“Thank you, sir. Thank you, sir,” he said, with a sincerity that made those twenty rupees feel much larger than they were.

How much power can twenty rupees have to change someone’s day?

There was no time to rest.

I had to go to the office.

When I was in Belgium, I had told everyone that I would visit the Bengaluru office and meet them. A promise is a small thing until the day comes when you have to keep it.

Sridharan Mama dropped me near the office.

But I had no ID, and I had no idea how I was supposed to get inside.

So I stood outside and called my teammates, asking them to come down.

I stood at the entrance, head bent, looking at my phone.

“Vanakkam.”

It was a familiar voice.

I looked up.

Rathi was standing there with her usual smile.

Calling Rathi a manager is still a little difficult for me. She looks so young, almost like a schoolgirl.

I told her I did not have an ID and did not know the procedure for entering the office.

She simply gestured for me to follow her.

Inside, however, the security team was not ready to let me in. Rathi explained that I had come from Belgium and would be there only for two days. She asked if they could issue me a visitor ID.

They refused.

By then, one after another, my colleagues had started coming down.

Soon, there was a small crowd around me.

“You have brought an entire army to take you away,” Rathi joked.

I denied it.

But inside, seeing so many people standing there just for me created a feeling I could not quite explain.

The permission took more than half an hour.

I kept telling them to go back to work.

Nobody moved.

That, perhaps, was the part that touched me most.

Finally, we were allowed in.

I reached my seat on the second floor. I had barely sat down and taken a breath when another group got up to go for breakfast.

Another round already?

We went to the restaurant on the seventh floor.

Among the group was someone I hardly knew. He came over, introduced himself, and asked what I wanted to eat.

I told him I had already had breakfast.

“Then at least have coffee.”

He insisted.

And he paid for mine too.

The food was ordered through an app. We selected what we wanted, paid, waited for the notification and then went to collect it.

What felt new to me was the way one or two people simply paid for everyone.

I had thought the habit of sharing food ended with school and college. Seeing it continue even after entering working life was both surprising and comforting.

When I had first joined the company, a friend once stopped me from paying for others.

“Everyone here earns. Everyone will buy what they want. You just pay for yourself.”

That was how I first came to know the idea of a Dutch treat, where each person pays for their own food.

The hospitality of this younger generation felt like the end of that Dutch treat.

After breakfast, it took all of us nearly an hour to settle back into work.

For me, there was still one problem.

I had come from Belgium, and I was still waiting for permission to start working from India.

There was nothing I could do except wait.

So I sat there and talked to whoever came by.

I had always kept away from places where I was treated like a guest. I never liked that feeling.

But here, people kept coming to me one by one.

They made me feel less like a visitor and more like family.

My heart was in a festive mood.

Lunch followed the same pattern as breakfast.

Someone bought food for someone else. Someone else paid for another person.

And strangely, not spending money myself began to make me uncomfortable.

After lunch, everyone went back to work.

I left for a walk.

There was no work for me until evening. What else could I do?

Sai had come all the way from Telangana. Mounika had come from Chennai. The fact that they had travelled so far simply to see me and the team made me happy.

I wanted to take everyone out, so I waited until they finished work.

By the time they were done, it was already night.

Finally, three of my teammates and I went to Forum Mall and had dinner.

I reached home around ten.

Priya Akka had to leave for Coimbatore, and Mama had gone to see her off. He asked me to come along.

My mind was already ordering me to sleep.

My eyelids were becoming heavier by the minute.

I went inside to sleep.

The doors outside were locked.

The next morning, I woke up early.

Mama and I went for a walk in a nearby park. One of his colleagues joined us.

The conversation wandered everywhere.

Work.

Family.

Our hometowns.

Bengaluru.

Taking care of our health.

Men’s world is a beautiful place.

Age does not decide friendship there.

Status does not decide it either.

Sometimes, all it takes to anchor a friendship is a small smile or a simple handshake.

The three of us walked, sat, talked and walked again for nearly two hours.

Then Mama’s friend said goodbye.

Mama and I finished our morning walk with coffee.

Before the sun became too strong, there was dosa soaked in ghee for breakfast.

Then, the office.

The permission to work finally came through.

What more did I need for a good second day?

That evening, our team decided to go out together. We chose a restaurant and went.

After everything was done, I started heading home.

Mama had gone to the railway station, so I had to wait outside.

I bought a tea from a nearby shop and walked around the streets.

Usually, Bengaluru means one thing.

Traffic.

That morning, I had proudly told Mama that despite having visited Bengaluru so many times, I had never once been caught in its traffic.

Mama had said he would be home by eleven.

He got caught in traffic.

He reached only at half past twelve.

That night I understood something.

You don’t have to be on the road to experience Bengaluru traffic.

Sometimes, Bengaluru finds a way to make you wait even when you are sitting at home.

Soon after Priya Akka returned, Mama had to leave for Chennai.

Shyama Akka invited us for Saturday lunch, so only Priya and I went.

Gayathri Akka also arrived by the time we reached there.

Shyama Akka’s husband was waiting at the door to welcome us.

Shyama Akka and Mama are strict vegetarians.

She has made only one small compromise with the non-vegetarian world—the egg.

Even that is not allowed on certain days, and Saturday is one of them.

But I was coming from abroad. So, for me, she made eggs along with all the vegetarian dishes. Gayathri Akka had also brought chicken, mutton and fish from outside.

What began as lunch slowly turned into a feast. Priya and I ate one dish after another until we could barely move. By the time we finished, we were so full that all we could do was sit back and let our bodies recover from the feast.

All the Ikigai rules about eating in moderation, eating only half a stomach, and controlling ourselves had no place at that table.

At one point I asked,

“Akka, you and Mama don’t eat non-veg. Then why did you make all this and bring it here?”

Shyama Akka replied in her unchanged Kongu Tamil:

“We thought vegetarian food alone would be enough. But you have come all the way home. I don’t want you to go hungry. That’s why.”

That was enough.

From there, everyone went to Priya Akka’s house.

Another gathering was waiting in the evening.

Gayathri Akka had brought so many things for me to take back abroad that I could barely carry them.

The moment I reached home, another call came.

It was Kavya, one of my managers.

She told me she had sent a parcel and asked me to come downstairs.

Two sets of clothes arrived through Uber.

I did not know what to say.

“Why did you send all this, Kavya?”

“I don’t know whether you’ll like them or not. But I felt like giving them to you. Wash the kurta first in cold water. Then the size will settle properly. Are the colours okay?”

She continued explaining everything to me, making sure I would like what she had chosen and that everything would fit me properly.

In between all this, Swami kept calling and asking where I was.

I was tired.

I gave him one excuse after another.

I did not mean to avoid him. I simply did not have the energy left to explain anything.

But Swami did not give up.

That night I told him I was going to a restaurant.

He came there looking for me.

He stood at the entrance and said he wanted to talk for a few minutes.

Where are you staying?

When are you leaving?

A few ordinary questions.

Then he took a small box from his vehicle and handed it to me.

I knew what it was without opening it.

A watch.

I told him I didn’t want it.

He ignored me and pressed it into my hands.

“Something from us. Something we could do.”

After a few minutes of talking, he left.

I could not resist the curiosity.

I opened the box.

It was the expensive watch I had once wanted to buy but had left behind because I did not have enough money.

Love cannot be measured by the things people give us.

I know that.

And yet, when so many such gestures come together, the heart cannot remain untouched.

I remembered a poem I had written long ago.

A body
long used to the crawling
of caterpillars
shivers for the first time,

beneath the flowers
falling upon its head.

That night, Subha Akka and Sudha Akka also joined us at the restaurant.

Their kindness.

The happiness of meeting me for the first time.

The way they spoke with affection.

The day kept becoming more beautiful.

And the strangest part was this.

Not one of the people I call Akka or Mama is actually related to me.

Somewhere through literature.

Somewhere through books.

Somewhere through a simple introduction.

Life had quietly given me all these relationships.

What greater surprise could there be?

Soon it was time to catch my bus.

We squeezed ourselves into Mama’s vehicle and went home.

Because of the metro construction, the auto driver dropped me somewhere I could not make sense of.

I did not know which way was north or south.

I ran.

Three bags on my shoulders.

My feet hurting.

My breath running short.

Somehow, I reached the bus.

I climbed in.

And finally, I put down both my bags and my eyelids.

When morning came, the bus had only reached Thanjavur.

There was still another hour to go.

A young man sitting beside me started talking.

I kept my phone in my hand, but hardly looked at it.

We spoke all the way to Kumbakonam.

When there is someone to share the journey with, what need is there for a phone?

The bus dropped both of us at the Swamimalai bypass.

There was no auto.

No town bus.

Nothing.

The young man beside me took one of my three bags.

Then he asked the person who had come to pick him up to drop me at the auto stand.

A small act of help opened a way for me.

From there, I found an auto and finally reached home.

For a moment, the young man from Bengaluru came back to my mind.

The boy who had driven an auto in his mother’s name.

The boy who had thanked me for twenty extra rupees.

Somewhere, the help we give someone returns to us in another form.

Isn’t that proof that love has not yet dried up from this world?

I opened the bag Gayathri Akka had given me.

There was food.

Clothes.

Many other things.

She had even made and packed the sweets I had casually mentioned while talking to her.

Then I saw the clothes Kavya had given me.

I texted her and thanked her, and told her about the watch the team had bought for me.

Her reply came almost immediately.

“These are expressions of the love we have for you, Marudhu.”

I did not know what to say.

“How do I ever repay all this?”

Her answer was simple.

“You don’t have to do anything. For now, just enjoy the love you are receiving.”

I sat with those words for a while.

How beautiful is this vast expanse of love?
And, in the end, isn’t that all there is in this world?

Yes!

Love is the way!

Love is the truth!

Love is the fullness!

Love is God!

Shopping Cart
Scroll to Top