Giethoorn (கீத்தோர்ன்)

யாரும் இல்லாத
இடத்திற்குப் போக வேண்டும்!

அங்கே,
நான் கூட
இருக்கக் கூடாது!

– அப்துல் ரகுமான்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் தமிழ்நாடு எல்லையைக் கூடக் கடந்தது இல்லை. தவழும் அக்கா மகள்கள் வரை அனைவரும் வீட்டில் விமானத்தில் பயணம் செய்திருக்க, நான் மட்டும் விமானத்தை அருகில் கூட பார்த்தது கிடையாது. விடுதலைக்குப் பின் எழுந்த முதல் அல்லது இரண்டாம் தலைமுறை நாங்கள். தானாகவோ அல்லது தூக்கிப் பிடிக்கும் ஏதோ சில கைகளைப் பற்றிக் கொண்டோ எழுந்து மட்டுமே நிற்க முடிந்த எங்கள் தலைமுறைக்குக் கிடைத்த பயணம் எல்லாம் இந்தளவு தான். எட்டாக்கனி கிட்டாக்கனி என்றான பின் அதை நினைத்து ஏக்கம் என்ன வேண்டி இருக்கிறது?

இந்தியர்களைப் பொறுத்தவரை பயணம் என்றால் என்ன? இரண்டு மணி நேரத்திற்கு மேல் அலுவலகத்திற்குச் செல்வது, விடுமுறையில் தொலைவாய் வசிக்கும் விருந்தினர் வீட்டிற்குச் செல்வது, திட்டமிட்ட மூன்று கோவில்கள், வரும் வழியில் திட்டமிடாமல் தரிசனம் கிடைத்த இரண்டு கோவில்கள் அவ்வளவு தானே? ஆம்! பயணம் என்ற சொல்லுக்கான பொருளை இந்திய அகராதியில் தேடிப் பார்த்தால் இப்படித் தான் எழுதி இருக்கும். நாத்திகக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் அந்தக் கோவில் கொடுப்பினையும் இல்லை.

எஸ்.ரா சொல்வது போல, “காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டோ, உறங்கிக் கொண்டோ செல்வது பயணம் அல்ல. பயணத்தை அனுபவிக்க வேண்டும். ஒரு பேருந்திலோ ரயிலிலோ நான் ஏறிவிட்ட பிறகு நான் யாருடைய மகனும் அல்ல, யாருடைய அப்பாவும் அல்ல. நான் படித்தவன் அல்ல, எழுத்தாளன் அல்ல. யாரும் அல்ல. வயதும் ஒரு பொருட்டல்ல. நான் இந்தப் பேருந்தில் இருக்கக் கூடிய ஒரு பயணி”, பயணம் தான் வாழ்வின் இன்னொரு முகத்தைக் காட்டி புதிதாய் நமக்கு ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறது. எல்லாம் இழந்து யாரோ ஒருவராய் நாம் நிற்கும் மொழி தெரியாத நாடும், நிலமும் நமக்கு ஏதோ ஒன்றைப் புதிதாய்க் கற்பிக்கின்றன. மனிதர்கள் தங்கள் அடையாளம் இழக்கும் பொழுது தான் எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.

நெதர்லாந்து செல்ல வேண்டும் எனச் சனிக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து விட்டேன். பலமுறை செல்ல வேண்டும் என நினைத்துச் செல்லாமலே போன ஓர் ஊருக்கு இன்று செல்லப் போகிறேன் என்ற எண்ணமே ஒருவாறு களிப்பை ஏற்படுத்தியது. சீ ஈயு(See EU – https://see-eu.info/) என்ற நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருந்தேன். ஐரோப்பாவை இந்தியக் கண்களால் காண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இந்தியர்கள் நடத்தும் நிறுவனம். பெல்ஜியத்தின் முதன்மை நகரங்களில் இருந்து நம்மை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவில் பல இடங்களுக்குக் கொண்டு செல்லும். துணையாக இந்தி பேசும் ஒருவர், இந்தியத் திரைப்படம், இந்திய உணவு வகைகள், மசாலா தேநீர் போன்ற வசதிகளால் பேருந்தில் ஏறிய கணம் நாசி எங்கும் தேசி வாசம்.

அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்பே நிறுத்தத்தை அடைய, பேருந்து கொஞ்சம் தாமதமாகவே வந்தது. மெக்கல்லனில் என்னோடு இன்னும் மூன்று பேர் ஏற, ஆண்ட்வர்ப்பில் ஒரு சிலரை ஏற்றிக் கொண்டு வண்டி கீத்தோர்னை நோக்கி விரைந்தது. செல்லும் வழியில் அவரவர் அவர்களுக்குத் தேவையான உணவினைப் பெற்றுக் கொள்ள, திரைப்படத்திற்கான வாக்கெடுப்பு நடந்தது. எப்பொழுதும் போடும் அதே ஐந்து படங்கள். பீ.கே திரைப்படம் அதிக வாக்கினைப் பெற, அமீர்கான் பூமிக்கு வந்து அனுஷ்கா ஷர்மாவைத் தன் காதலனுடன் சேர்த்து வைத்துவிட்டு, மீண்டும் தன் விண்ணூர்தியில் ஏறிய கணத்தில் நாங்கள் கீத்தோர்னை அடைந்திருந்தோம். அதிகாலையே எழுந்ததால் பயணம் முழுவதையும் நான் உறக்கத்தில் தான் கழித்தேன்.

இறங்கிய நொடியே உடன் வந்த ஆற்றுநர் இலவசக் கழிப்பறையைக் காட்டி, எல்லோரும் தன் தேவைகளை முடித்துக்கொள்ள இருபது நிமிடங்கள் கொடுத்தார். கழிப்பறை, மலங்களால் அன்றி, மனிதர்களால் நிரம்பி வழிந்தது. முகம் கழுவி நான் வெளியே வந்தபோது, ஒரு படகு எங்களுக்காகக் காத்திருந்தது. படகினைச் செலுத்தவும் எங்களுக்குப் பயணத்துணையாகவும் வயதான ஒரு டச்சுக்காரர் புன்னகையோடே எங்களை வரவேற்றார். பேருந்தில் வந்த அனைவரும் அமர்ந்து கொள்ளும் அளவு பெரிய படகு. அதில் முன் இருக்கையிலேயே எனக்கு இடம் கிடைக்க, எல்லோரும் வந்தடைந்த பின் படகு அசைந்தது. சில நிமிடங்களுக்குப் பின் பேசத் தொடங்கிய அந்த டச்சுக்காரர், கடைசி இருக்கை வரை தன் குரல் கேட்கிறதா என்பதைத் தெளிவு படுத்திக் கொண்டார். அப்படி ஒரு கனீர் குரல். அலெக்ஸ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அந்த ஊரின் வரலாற்றை உரைக்கத் தொடங்கினார்.

WhatsApp Image 2026-08-12 at 4.29.52 PM (3)

கீத்தோர்ன் என்றால் ஆடுகளின் கொம்பு(Giet Hoorn) என்று பொருள். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து தஞ்சம் அடைந்த மக்கள், வெள்ளத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான ஆடுகளின் கொம்புகளை இங்குக் கண்டதால் இவ்வூர் இப்பெயர் பெற்றதென நம்பப்படுகிறது. இங்கு வந்த மக்கள், பிழைப்பிற்காக, சதுப்பு நிலங்களில் இறந்து மக்கிய செடிகளை உலர வைத்து எரிபொருள் ஆக்கினர். நாளுக்கு நாள் எரிபொருளுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் வீட்டைச் சுற்றி பெரும் பள்ளங்களை உருவாக்க, சதுப்பு நிலங்களில் ஊறிய நீரே சிறு சிறு கால்வாயாக மாறியது. தண்ணீர் சூழ்ந்த இச்சிற்றூரை, உலகின் தொடர்புகளில் இருந்து தனித்து விடப்பட்டத் தீவு என்று தான் சொல்ல வேண்டும்.

மொத்த ஐரோப்பாவும் இறைச்சிக்காக மாடுகளையும் பன்றிகளையும் நம்பி இருக்க, இந்த ஓர் ஊர் தான் ஆடுகளை நம்பி வாழ்கிறது(ஐரோப்பா ஐயனார் போலும்). ஆம்! சொந்தங்கள் ஒன்றுகூடுகையில் இவர்கள் உணவு அதிகம் நம்பி இருப்பது ஆடுகளையும் கோழிகளையும் தான். கோடைக் காலத்தில் எரிபொருள் விற்பதையும் மீன் பிடிப்பதையும் தொழிலாகக் கொண்ட இம்மக்கள், நீரும் நிலமும் உறைந்து போகும் குளிர் காலத்தில் படகு செய்வதைத் தங்கள் தொழிலாக்கிக் கொண்டனர். மொத்த நெதர்லாந்தும் நீர் சூழ்ந்த நிலம் ஆதலால், படகு விற்பனை செல்வம் கொழிக்கச் செய்தது.

வேதாரண்யம் செல்லும் பொழுது, உப்பளங்களைக் கண்ட இராமு அண்ணன், “இதெல்லாம் என்னடா தம்பி?”, என்றார் ஆச்சரியமாக. உப்பளம் என்று நான் அதைப் பற்றி விளக்க, “அப்ப இங்க நிலத்தடி நீரெல்லாம் உப்பா தான இருக்கும். இங்க எப்படி விவசாயம் செய்வாங்க. கடவுளோட படைப்பு எப்படி இருக்குன்னு பாரேன். நம்மூரு பக்கம் எல்லாம் விவசாயம். இங்க அதுக்கு வழி இல்ல, அதனால இப்படி உப்பு தயாரிச்சு பொழச்சிக்கிறாங்க”, என்ற அடுத்த நொடி,

“அந்தந்த நிலத்துல என்ன செய்ய முடியுமோ அதுக்கு ஏத்த மாதிரி மக்கள் தங்கள் வாழ்க்கைய அமைச்சிக்கிறாங்க. இதுல கடவுள் எங்க வந்தாரு”, என்று நானும் அப்பாவும் ஒன்றாய் பதிலுரைத்தோம். அப்பா இன்னும் பரிணாமம் பற்றி அண்ணனுக்குப் பாடம் எடுக்க, சேப்பியன்ஸ் புத்தகம் பற்றி அறிந்திடாத இராமு அண்ணன் அதை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

மூலம் இல்லா இடங்களிலும் ஏதேனும் ஒன்றைப் புதிதாய் முளைக்க வைக்க வல்லதல்லவா இந்த வையம்? அகமமைத்து, புறமமைத்து, கீத்தோர்ன் தன்னைத் தானே தகவமைத்து வாழக் கற்றுக் கொண்டது. வெளியே வந்து உலகத்தோடு ஒன்றி வாழ அச்சப்பட்ட அந்த மக்கள், தங்களுக்குள்ளே திருமணம் செய்து கொண்டனர். இலையாடும் கிளைகள், கிளையாடும் மரங்கள், அலையாடும் கால்வாய், மலையாடும் கோழியும், எண்ணற்ற வாத்துகள், நீரால் ஆன தெருக்கள், வீடுகளை இணைக்கும் மரப்பாலங்கள், உள்ளூரிலேயே ஒரு தேவாலயம், எங்கும் செல்லச் சின்ன சின்ன மரப்படகுகள் என்று சிறு வட்டத்திற்குள் தான் அவர்கள் வாழ்க்கை முழுவதும். உலகம் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க, பல நூறாண்டுகளாக இம்மக்கள் பதிமூன்றாம் நூற்றாண்டின் பிடியிலேயே தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆண்டுக் கணக்காய் அடைபட்டக் குருவிக்குக் கூண்டுக் கதவுகள் திறந்தது போல, ஊரை விட்டு அதிகம் வெளியே வராத இவர்கள் முதன் முதலில் உலகத்தைப் பார்த்தனர். வெளியே செல்லாமல், உலகத்தையே தங்கள் ஊருக்கு வர வைத்தனர். ஆம்! உலகின் பார்வை முதல் முதலில் அதன் மீது விழுந்தது 1958ல் தான். ‘ஃபான்ஃபேர்(Fanfare)’ என்றொரு டச்சு திரைப்படம் அங்கே எடுக்கப்பட மொத்த ஐரோப்பாவும் அங்கே வண்டி கட்டிக் கொண்டு வரத் தொடங்கின. வந்திருக்கும் பயணிகளுக்காகத் தொடங்கப்பட்ட கடைகள், உணவகங்கள் எல்லாம் அவர்களது வருவாயைக் கொஞ்சம் உயர்த்த, இந்த ஊரே ஒரு சுற்றுலாத் தலம் ஆனது. மகுடத்தின் சிறகாய் ஆப்பிரிக்காவில் இருந்து வலசைக்கு வந்து செல்லும் வண்ண வண்ணப் பறவைகள்.

எல்லா வீடுகளும் கூரைகளால் வேயப்பட்டிருக்க, ஓடு பதித்திருந்த ஒரு சில வீடுகளைக் காட்டி, அவையெல்லாம் அரசு வேலையில் இருக்கும் மேயர், ஆசிரியர், பாதிரிமார்களின் வீடுகள் என்று இரு விரலால் பணம் கொழிக்கும் சமிக்ஞையைச் செய்து காட்டினார் அலெக்ஸ்.

படகுப் பயணத்தின் போது அனுபவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தவர், தன் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார். வெளியூரில் இருக்கும் செல்வந்தர்கள் இங்கே வீடு வாங்கிப் போட்டுவிட்டு கோடையில் மட்டும் வந்து தங்கள் பொழுதுகளை இங்கே கழிக்க, இவ்வூர் மக்களுக்குச் சற்றும் தொடர்பில்லாதவர்களாய் சில மாதங்கள் மட்டும் அவர்கள் வாழும் அந்த உல்லாச வாழ்க்கை, உள்ளூரில் இருக்கும் இணக்கத்தை உடைப்பதோடு, ஊருக்குள் இருக்கும் நில மதிப்பையும் உயர்த்துகிறது. ஓராண்டு முழுவதும் அங்கே தங்காத ஒருவர் நிலத்தை வாங்கும் தகுதியினை இழப்பதாய் அண்மையில் நடைமுறைப் படுத்தப்பட்ட சட்டத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் கூறினார். கால்வாய் சென்று கலக்கும் ஏரியின் நடுவே ஒரு சிறு படகில் தண்ணீர் மற்றும் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருக்கும் சிறுவன், தன் முழு பலத்தோடு எங்கள் படகை இழுத்துப் பிடித்து அருகே நிறுத்தி யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுக் கேட்டு ஒவ்வொன்றையும் ஓடி ஓடிக் கொடுத்தான். ஆழம் பற்றி வினவிய போது, ஒரு மீட்டர் என்று தன் கையில் இருக்கும் குச்சியைத் தண்ணீரில் இறக்கி அளந்து காட்டிய அலெக்ஸ், மொத்த ஏரியையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, எங்களையும் தனியாய்ப் படகில் பயணம் செய்யச் சொல்லிப் பரிந்துரைத்து, தொடங்கிய இடத்திலேயே எங்களை இறக்கிவிட்டார்.

அலெக்ஸ் சொன்னது போல், படகுப் பயணம் செய்ய வேண்டும். ஆனால் ஒரு படகின் கட்டணமே ஐம்பது ரூபாய் வரை போக, என்னோடு வந்த ஒரு சிலரைக் கேட்டு ஐந்து பேராய்ச் செல்வதென்று தீர்மானித்து படகு ஒன்றை வாடகைக்கு எடுத்தோம். கணவன் மனைவி, அவர்களோடு வந்த முதியவர், நான் மற்றும் இன்னொரு இளைஞர் என ஐவராய்த் தொடங்கினோம். தொடக்கத்தில் அந்தப் பெண்ணின் கணவன் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு படகினைச் செலுத்த நானும் அந்த இளைஞனும் படகின் இன்னொரு மூலையில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதில் ஆழ்ந்தோம். படகு என் கைக்கு வந்த போதே ஓரளவு கூட்டம் கூடி இருந்தது. அங்கும் இங்கும் மோதி, பாதித் தொலைவுக்குப் பின் தான் ஓரளவு கட்டுப்பாடு என் கைக்கு வந்தது. இரண்டு மணி நேரத்திற்குள் படகை ஒப்படைக்க வேண்டும். கால்வாய் முழுவதையும் சுற்றி ஏரி வழியே சென்றபோது எல்லா வழிகளும் பழகிய வழிகளாகவே தோன்றின. ஆனால் தொடங்கிய இடம் மட்டும் வரவே இல்லை. ‘பாப்பிலோன்’ நாவலில் வழி தெரியாமல் கடலில் தத்தளிக்கும் நாயகனின் நிலைமை ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது. தொடங்கிய இடத்தை நான் பதிவு செய்து வைத்திருந்தமையால் ஒரு வழியாக இரண்டு மணி நேரத்திற்குள் படகை ஒப்படைத்தோம். மதிய உணவு, ஊர் முழுவதையும் கால்களால் அளந்து அங்கிருந்து கிளம்ப மாலை ஆனது.

தீவாந்திர வாழ்க்கை வழியனுப்பியது. தினசரி வாழ்க்கை வரவேற்றது!

Giethoorn: Where the World Came to a Village

“I want to go somewhere where no one exists.
And even there, I should not exist.”
– Abdul Rahman

There was a time when travel was something I knew only through other people’s stories.

Until a few years ago, I had never crossed the borders of Tamil Nadu. While children in my extended family were growing up with airport photographs and boarding passes, I had never even stood close enough to an aeroplane to hear its engines properly. We belonged to a generation that had inherited little except the determination to move forward. We were among the first generations born after independence, children of families that had learned to rise slowly, often by holding on to whatever hands were available.

For people like us, travel was not a way of life. It was a privilege.

When something seems permanently beyond your reach, you eventually stop yearning for it.

Or at least, you learn to pretend that you have.

Perhaps that is why the idea of travel has always fascinated me.

Because in India, travel rarely means simply going somewhere.

It usually has a purpose.

We travel to work. We travel to visit relatives. We travel for weddings and funerals. We travel to see temples, often with an itinerary carefully planned around three famous ones and two unexpected ones discovered on the way.

We travel because we have somewhere to be.

Very rarely do we travel simply because we want to disappear for a while.

I have always liked the idea that a journey can strip a person of everything he thinks he is.

S. Ramakrishnan once wrote about this beautifully: when you board a bus or train and begin travelling, you are no longer somebody’s son, somebody’s father, a graduate, a writer or a person with a particular status. You are simply a passenger.

I think that is one of the most beautiful things about travelling.

For a few hours, nobody knows who you are.

And when the familiar labels that define us begin to fall away, we are given the rare chance to meet the person underneath them.

A foreign country does this even more intensely. The language is unfamiliar. The streets have different names. Nobody knows your history. Nobody cares what you do for a living.

You arrive stripped of identity.

And perhaps it is only when we are no longer surrounded by the people and places that constantly remind us who we are that we begin to discover what else there is inside us.

That was the feeling with which I set out for the Netherlands.

I woke before sunrise on a Saturday.

I had thought about visiting the Netherlands many times. Like many things we genuinely want to do, it had remained on the list for far too long.

That morning, however, I was finally going.

The journey had been organised by an Indian travel company called See-Eu(https://see-eu.info/), operating in Belgium. Their idea was simple and slightly amusing: to experience Europe without entirely leaving India behind.

The moment I stepped onto the bus, I knew exactly what they meant.

Hindi conversations.

Indian snacks.

Masala tea.

Indian food.

And, naturally, an argument over which Bollywood film we should watch.

Europe, for a moment, smelled like home.

The bus picked up passengers in Mechelen and Antwerp before turning towards the Netherlands. I had woken up far too early and was still carrying the weight of sleep in my eyes.

Eventually, I surrendered.

For most of the journey, I was asleep, waking only now and then to the movement of the bus and the occasional conversations around me.

The last thing I remember was Aamir Khan’s PK wandering around Earth trying to understand human beings.

When he finally returned to his spaceship, we had arrived in Giethoorn.

Giethoorn did not look like a place that belonged to the modern world.

It looked as though someone had taken an old European painting, removed the roads and replaced them with water.

Our guide led us towards a boat waiting at the edge of the village.

An elderly Dutchman greeted us.

His name was Alex.

He had a smile that suggested he had told this story hundreds of times and still enjoyed telling it.

Once everyone had boarded, the boat slipped quietly into the canal.

Then Alex began speaking.

His voice was enormous.

He paused every few minutes, not because he had forgotten what to say, but to make sure that even those sitting at the back could hear him.

Then he began telling us how Giethoorn came to be.

The village had been shaped by necessity.

Centuries ago, settlers arrived in this marshy landscape and began cutting peat, the accumulated remains of dead vegetation beneath the wetlands, which they dried and used as fuel.

But extracting peat changed the landscape.

The digging created pits.

Water filled them.

The pits became channels.

The channels gradually became a network of waterways.

What began as a way to survive eventually created the very landscape for which Giethoorn is now famous.

There is something deeply human about that.

We often imagine that people shape the world around them.

But sometimes survival works in the opposite direction.

The world shapes us.

The people of Giethoorn could not make their land into something it was not. So they adapted themselves to it.

They built small wooden bridges over the canals where other places would have built roads.

They learned to live with water rather than fight it.

Their geography became their culture.

Their limitation became their identity.

Their difficulty became their beauty.

Alex’s stories reminded me of something that had happened years earlier in Tamil Nadu.

I was travelling with my father and my elder brother Ramu when we passed through the salt pans of Vedaranyam.

Ramu looked at the endless white landscape and asked, with genuine curiosity, what people could possibly do with all that salt.

When I explained that salt was being produced there, he began reasoning aloud.

“If the groundwater is salty, how do they farm? Look at how differently God has created different places. In our region people farm. Here they can’t, so they make salt and survive.”

My father and I immediately responded together.

“People simply build their lives around what their land allows them to do. What does God have to do with it?”

That conversation stayed with me.

Because perhaps that is the story of every human settlement.

People do not wait for perfect circumstances.

They negotiate with whatever the world gives them.

Where the sea shapes the land and leaves its water behind, people learn to turn that abundance into a livelihood.

If there is fertile soil, they farm.

If the land offers something else, they find another way to make a living from it.

Civilisation is perhaps nothing more than humanity learning how to turn obstacles into occupations.

For centuries, Giethoorn remained almost completely enclosed within itself.

The village had its own church, its own little bridges, its own boats and its own rhythm of life.

The canals wound through the village like streets, while the boats became the natural way of moving from one home to another.

The houses stood quietly beside the canals, surrounded by trees, ducks, chickens and an astonishing amount of water.

The people lived within this small world and, for generations, had little reason to leave it.

They married within the community.

They lived among people they had known all their lives.

While the rest of Europe moved through centuries of change, Giethoorn seemed to remain suspended somewhere in the past.

Then something unexpected happened.

The outside world discovered it.

In 1958, a Dutch film called Fanfare was shot in Giethoorn.

People came to see the place where the film had been made.

And then more people came.

And more.

The village that had spent centuries isolated from the world suddenly became a place the world wanted to see.

The irony was beautiful.

Giethoorn did not have to leave its isolation to discover the world.

The world came looking for it.

Restaurants appeared.

Shops appeared.

Tourists arrived from different countries.

The village slowly became one of the Netherlands’ most recognisable destinations.

Even the offspring of migratory birds travelling from Africa began arriving seasonally, adding splashes of colour to a place that already seemed to have been designed for a postcard.

As we moved through the canals, Alex pointed towards the houses.

Most had beautiful thatched roofs.

Then he pointed out a few houses with tiled roofs.

Those, he explained, traditionally belonged to people such as the mayor, teachers and priests.

He rubbed his fingers together.

Money.

Even in a village where roads had been replaced by canals, the language of wealth needed no translation.

But Alex’s relationship with Giethoorn was more complicated than that of a guide simply selling its beauty.

He was proud of the village.

He was also worried about it.

Wealthy outsiders had begun buying houses there, not to become part of the community, but to spend a few weeks or months enjoying the village during summer.

Those houses remained empty for much of the year.

Land prices rose.

The people who had always lived there found it increasingly difficult to remain part of the place they called home.

Tourism had brought prosperity.

But prosperity, Alex seemed to suggest, could also quietly destroy the very thing people had come to see.

Recent regulations limiting property purchases by people who do not actually live in the village gave him some satisfaction.

Perhaps Giethoorn had finally realised that a village cannot survive merely by becoming beautiful for other people.

It must remain a home for the people who belong to it.

At one point, the canal opened into a lake.

In the middle of the water was a tiny boat.

A young boy was selling water and ice cream.

As our boat approached, he pulled himself towards us with surprising strength.

He asked everyone what they wanted, collected the orders and hurried back and forth, delivering everything with the energy of someone who had discovered that even a lake could become a workplace.

I asked Alex how deep the water was.

He took the small stick he was carrying, pushed it into the lake and measured.

“About a metre.”

I looked at the enormous expanse of water around us.

A metre.

It seemed almost ridiculous.

But perhaps that was Giethoorn in miniature.

Everything looked deeper than it really was.

Everything looked more complicated than it needed to be.

Alex eventually brought us back to where we had started and suggested that we rent our own boat.

We took his advice.

The price of a boat was too much for me alone, so I found four others willing to share one.

A couple.

An elderly man travelling with them.

Another young man.

And me.

Five people who had met because of a bus journey, now entrusted with a boat in a village where getting lost was surprisingly easy.

At first, the husband took control of the boat.

The other young man and I were far more interested in taking photographs.

Eventually the controls came to me.

That was when Giethoorn discovered my lack of boating experience.

I bumped into one side.

Then another.

I managed to make the boat behave after some time, but by then I had already gained the attention of several passing boats.

We had two hours.

So we continued.

The canals twisted and turned.

Wooden bridges appeared one after another.

Houses looked familiar.

Trees looked familiar.

Every corner seemed as though I had already passed it.

But there was one problem.

We could not find where we had started.

For a moment, I understood the desperation of someone lost at sea.

I remembered Papillon and its lonely protagonist drifting without knowing where the world had disappeared.

We were not in the middle of an ocean.

We were in a tourist village in the Netherlands.

Yet the feeling was strangely similar.

Fortunately, I had saved our starting location on my phone.

Eventually, we found our way back.

We returned the boat within the two hour limit.

Alive.

Unarrested.

And, most importantly, still in possession of the boat.

After lunch, I left the others behind and wandered through the village alone.

There was no schedule left to follow.

No guide.

No bus.

No instructions.

Only the quiet rhythm of my own footsteps.

I crossed wooden bridges, wandered beside the canals, watched boats glide silently across the water and paused before houses that seemed almost too peaceful to belong to the hurried world outside.

For the first time that day, I was not travelling with a group.

I was simply walking.

And perhaps that was when I experienced Giethoorn most completely.

Not through Alex’s stories.

Not through the boat.

Not through the camera.

But through silence.

The village seemed to ask for nothing.

It did not demand that I see another attraction, reach another landmark or take another photograph.

It simply existed.

And for a while, so did I.

As the afternoon slowly surrendered to evening, I made my way back towards the bus.

I looked back at Giethoorn one last time.

For centuries, this little village had lived almost as though the rest of the world did not exist. Then the world discovered it, turned it into a destination and began travelling thousands of kilometres just to experience the quiet life it had once been forced to live.

Perhaps that is the strange fate of beautiful places.

They become desirable precisely because they have remained untouched by the things from which people are trying to escape.

As the bus pulled away, the canals, bridges and thatched houses slowly disappeared behind me.

For a few hours, I had stepped outside the ordinary rhythm of life and entered a world where water replaced roads, silence replaced urgency and getting lost was almost a pleasure.

Now I was leaving that little world behind.

Giethoorn had given me a few hours of escape, and the familiar world was waiting patiently at the end of the road.

The quiet life of the waterways was fading behind me; the noise and routine of everyday life were beginning to return.

The little island of solitude had said its goodbye and I was returning to the mainland of ordinary life.

Shopping Cart
Scroll to Top