சலீம் – அனார்கலி
எந்தத் துளைக்குள்இசை இருக்குமென்றுகாற்றே அரியும்! எந்தத் துளிக்குள்வானவில் இருக்கும்,வெயிலே அறியும்! அதைப் போல் தான்காதலும்!எந்த மனத்திற்குள் காதல் இருக்கும்,உலகம் அறியாது,காலமே அறியும்! உலக வரலாற்றில்உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்கஆ! தாயம்! கேட்டு,மனைவி மனைமாடு இழந்து,கைப்பொருள் விட்டுக்காடு நுழைந்து,உட்பகை நெஞ்சுக்குள்உலையாய் கொதிக்க – அதுகொதித்த வேகத்தில்கொலையாய் சுகிக்ககுடும்பத்திற்குள் நிகழ்ந்தகுருட்சேத்திர போரா? எல்லைகளைப் பரப்ப – பலர்அல்லைகளை உருவியமுகலாய யுத்தங்களா? வீழ்ச்சியால் தவித்தவெள்ளை இனம்சூழ்ச்சியால் வென்றுசுருட்டிக் கொண்டஅமெரிக்க யுத்தங்களா? பானிபட்டா?கலிங்கமா? வணிகம் என்றவாசல் வழி வந்துபோகும் […]