கம்பராமாயணம் – 1
கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலாஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே(1) உலகம் முழுவதையும் தானே உருவாக்குவதாலும், அதை நிலை பெற வைப்பதாலும், அதை அழிப்பதாலும், அதிலிருந்து நீங்காமல் அளவில்லா இவ்விளையாட்டினை உடையவர் அவரே தலைவராவார்; அத்தகைய தலைவரிடமே நாங்கள் அடைக்கலம் ஆவோம். உலகம் யாவையும் – உலகம் மொத்தத்தையும்; தாம் உள ஆக்கலும் – தாம் உள்ளதாய் ஆக்குவதும்; நிலை பெறுத்தலும் – நிலை பெற வைப்பதும்; நீக்கலும் […]