J J Dreams – 3
கரைகளைத் தொட்டு நுரைகளைப் பரப்பி, மேடு பள்ளங்களிலும், ஏற்ற இறக்கங்களிலும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஏற்படும் அதிர்வுகள் எண்ணிலடங்காதவை. ஓடும் நதியில் எறியப்படும் ஒரு கல், எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாமல், ஆழம் சென்று அமைதியாய் உறங்கும். ஆனால், குளங்களில் எறியப்படும் கல், கரையைத் தொடும்வரை, தன்னைச்சுற்றி வளையம் உண்டாக்கும் வல்லமை கொண்டவை. வேறுபாடு என்ன? அதிர்வுகளோடும் அசைவுகளோடும் செல்லும் வாழ்க்கை, ஓரிரு இடர்களில் ஒடுங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் முன்பே பழக்கப்பட்டிருப்பதால், ஒரு சிறு கல் அதை […]