முத்தமிழ் திணையின் முதல் திணை என்க…
கடைபோடும் மீனவர்க்குத்தடைபோடும் சட்டம்,நாற்றத்தால்-நாகரிகத்தை-எடைபோடும் நமக்கெல்லாம்எதற்கிந்தத் திட்டம்; ஆதி மன்றம் ஆகாரத்திற்கேஅகரம் – இன்றுநீதி மன்றம்நீக்கத்துடிக்கும்மகரம்(மீன்); சிங்காரச் சென்னை 2திட்டமென்று சொல்லிஅங்காரம்(கரி) முகத்திலேஅப்பிக் கொள்கிறோம்;தவறென்று உணர்வதைத்-தடுக்காமல்-தன்னலமாய் எல்லோரும்தப்பிச் செல்கிறோம்; குறிஞ்சி முல்லைமருதம் பாலை எனதிணைகள் நால்முன்திசைகள் நால்முன்நெய்தலே முதலில்நிலைத்த நிலம்;அவ்வின மக்களைவைதலால் கிடைக்குமாவாய்க்கு சலம்? சாகரம்(கடல்) கடந்துசா(சாவு) கரம் பிடிப்போர்ஆகரம்(இருப்பிடம்) கூடஆபத்தாயின்,தலைத் தூக்கிக் கேட்பதுதமிழர்க் கடமை; ஏனெனில்,ஆதித் தமிழ் வாழ்வில் – ஒரு அங்கம் வகித்தது கடலே! தமிழன்,கடக்க அல்லாததை‘கடல்’ என்றான்!ஆழமாய்க் கண்டதை‘ஆழி’ என்றான்!கார்சூழ் கொள்வதால்‘கார்கோள்’ என்றான்!பெருமையைப் புகழ‘பெருநீர்’ […]