இமயம் சென்ற சமயம்…
இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு […]