இதயத்தளபதி
“ஆரஞ்சுக் கலரா? ரோஸ் கலரா? என்னப் படம்ணே வேணும்?”, என்று வாசலில் நின்று கொண்டு கேபிள்கார அண்ணாக் கேட்க, அப்பா எங்களோடு கலந்தாலோசித்தார். மாதத்தின் முதல் வாரத்தில் தவறாமல் கேபிள் கட்டியவர்களுக்கு எல்லாம் அப்போது வெளிவந்த ‘ஆளவந்தான்’ ‘ஷாஜகான்’ பட டிக்கெட்டுகளை, கேபிள்கார அண்ணன்கள் வீடு வீடாகச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்பாக் கட்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, அவர் சொல்வதைக் கேட்டு, நானும் ஆர்த்தியும் ஆளவந்தானுக்கு வாக்களிக்க, பாரதி மட்டும் தான் ஷாஜகானைத் தேர்வு […]