நான் ரசித்த வாலி – 8

‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி, “மேடைக்கு மேடை… நாத்தழும்பேறநாத்திகம் பேசினான்;பின்னாளில் – அப்பித்தம் தெளிந்து…நாத்திகத்தை நாக்கில் இருந்துவழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி […]

நான் ரசித்த வாலி – 8 Read More »

நான் ரசித்த வாலி – 7

பாடல்களுக்குள், தங்கச் சிமிழை மட்டுமல்ல சங்கத் தமிழையும் தங்க அழைத்தவர் கவிஞர் வாலி. மொழியை வளர்த்த இடங்களிலும் மொழியை வளரவிட்டவர். தமிழ் ஒரு தான் தோன்றி. எத்தனைக் கட்டுகள் போட்டாலும், தன்னை மெய்ப்பிக்க அவள் தவறியதே இல்லை. அவளது பேரும் புகழும் எல்லா ஊரும் சென்று சேர, உதவும் உதவியாளாராகத் தான் ஒவ்வொரு கவிஞரையும் காண்கிறேன். கவிஞர் வாலியும்,   “கொடிவருடிப் பூந்தென்றல் குலவுகின்ற தென்பொதிகை மடிவருடிப் பூத்தவளே! மணித்தமிழே! மாற்றாரின் அடிதிருடிப் பாடாமல் அம்மா!நின் அரவிந்த

நான் ரசித்த வாலி – 7 Read More »

நான் ரசித்த வாலி – 6

வைரமுத்துவும் இளையராஜாவும் செய்த மந்திர தந்திரங்கள் தான் எத்தனை? இருவரும் சேர்ந்து, எண்பதுகளின் முதல் பாதியில் ஈடில்லா அதிசயங்களை ஏற்படுத்தினர். ஆனால், எல்லா இன்பங்களும் ஏதோ ஒரு புள்ளியில் முடியத்தானே செய்கிறது? கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிய, இளையராஜாவின் ராஜாங்கத்தின் எத்தனையோக் கவிஞர்கள் இருக்க, வாலி அரசவைக் கவிஞரானார். வாலியின் கலைப்பயணத்தில், ஏனையவர்கள் விண்மீனெனில், ராஜா வெண்ணிலவு.   எத்தனையோப் பாடல்களில் எத்தனையோப் பெயர்களுக்கு, குறுநிலங்களைக் கொடுத்த வாலி, ராஜாவுக்கென்று ஒரு ராஜ்ஜியமே கொடுத்திருக்கிறார். அதற்கு,

நான் ரசித்த வாலி – 6 Read More »

நான் ரசித்த வாலி-5

கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை

நான் ரசித்த வாலி-5 Read More »

நான் ரசித்த வாலி-4

உணவு, உடை, உறைவிடம் என்பதோடு காமத்தையும் சேர்த்திருக்க வேண்டும். உணவுக்கு அலைந்தன உயிரினங்கள்; அது கிட்டியதும், தினவுக்கு அலையைத் தொடங்கின. காமத்திற்காக, உறுதிகள் எத்தனை உடைந்தனவோ? குருதிகள் எத்துணை வடிந்தனவோ? மறைத்து மறைத்து கொண்டு செல்வதைத் தான் மனது நினைத்து நினைத்து தவிக்கும். கல்வியில் மெய் வேண்டாம் என்கிறது பிற்போக்கு சமூகம். கல்வி’யில் மெய்யை நீக்கினால், கலவி ஆகும் என்று அறியாதவர்களிடம் என்ன பேசுவது? கல்வி கலவி, பள்ளி பள்ளி இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை என்று வாதாடிப்

நான் ரசித்த வாலி-4 Read More »

நான் ரசித்த வாலி-3

எல்லோருக்குமானது இலக்கியம். அதை, ஒரு சாரருக்கு மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? படங்களை மட்டுமே மக்களின் பந்திக்குக் கொண்டு சென்ற திரைக் கூட்டம், பாடல்களை ஏனோ பறிமாறவே இல்லை. அவர்களின் பசியைக் கவிதையைக் கொடுத்துக் கட்டிப் போட்டது. அதன் சுவையை, உணர்ந்தோர் உண்டு கொழுத்தனர்; உணராதோர் கண்டு தவித்தனர். கலையால் நாமும் களிப்புற, காவியக் கவிஞர் வாலி, இயல் தமிழைத் துறந்து இயல்புத் தமிழுக்குத் தாவினார். அஃதோடு நிறுத்தாமல், புதுபுது முயற்சிகளை மேற்கொண்டு, திரைப்பாடல்களை, அடுத்த கட்டத்திற்கே

நான் ரசித்த வாலி-3 Read More »

நான் ரசித்த வாலி – 2

ஒரு படைப்பில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அதன் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அருகிவிட்ட சொற்களைக் கொஞ்சம் ஆராய்ந்து சென்றால் அதன் நூற்றண்டுக்குள் நாமும் நுழைந்துவிடலாம். ஆம்! கால தண்டவாளங்களில் தான் பலக் கவிதைத் தொடரிகள் செல்கின்றன. அதை சிலர் கருத்தில் கொண்டு இயக்குவர், சிலர் இயல்பாகவே எழுதி விடுவதுண்டு. காவியக் கவிஞர் வாலி இதில் முதலாமவர். மேகத்திலிருந்து விழுகையில் துளியாகவும், அருவியில் நீரோட்டமாகவும், மலைகளில் நதிகளில் வெள்ளமாகவும், குட்டைகளில் சலமற்றதாகவும், கடல்களில் சீற்றம் கொண்ட அலையாகவும் என

நான் ரசித்த வாலி – 2 Read More »

நான் ரசித்த வாலி-1

தொண்ணூறுகளின் இறுதியில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் எல்லாம் பாக்கியசாலியகள் என்றே கருதத்தோன்றுகிறது. ஏனெனில், எல்லாத் தலைமுறைகளும் பத்தாண்டுகளைக் கடக்கும், ஒரு சில தலைமுறைகள் நூற்றாண்டுகளை கடக்கும், மிகச் சொற்பமான தலைமுறையே ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடக்கும் தலைமுறைகள் ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடிக்கிறது. சென்ற ஆயிரம் ஆண்டில் இராஜ இராஜன் வாழ்ந்திருக்க, இந்த முறை, நாம். உலகமே மில்லினியத்தை நோக்கி உருண்டு கொண்டிருந்தது. உலகப் பணக்காரர்களின் பட்டியலில் ஒருவர் உச்சத்திற்கு ஏறி, உலகத்தை இன்னும்

நான் ரசித்த வாலி-1 Read More »

A Thousand Years of Pain

பெங்களுரு சாலைகளில், கார்களின் சத்தங்களுக்கு மத்தியில் நசுங்கிச் செத்துக் கொண்டிருந்தது அமைதி. ஆயிரம் பெரும் அலைகளை ஆழி வீசினாலும், அது அத்தனையையும் ஆற்றுப் படுத்தும் கரைகளைப் போல, அத்தனைப் பெரும் ஓசைகளையும், ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தன, அங்கிருந்த புத்தகக் கடைகள். யாருக்குத் தான் இங்கே கனவு இல்லை? கடையில் வேலை செய்பவருக்கு, சொந்தக் கடை வாங்க வேண்டும் என்ற கனவு. சின்ன கடை வைத்திருப்பவருக்கு, பெரிய கடை வாங்க வேண்டும் என்ற கனவு. பெரிய கடை முதலாளிக்கு கோடிஸ்வரன் ஆக வேண்டும்

A Thousand Years of Pain Read More »

ஆதி குகையின் அணையா நெருப்பு…

ஆதி குகையில் அணையாத நெருப்பு… அகரம் எதுவென்றே அறியப்படாத பூமியின் நாகரிக நெருப்பிற்கு, சிகரம் தான் முதலுரசிய சிக்கிமுக்கிக் கல். அங்கு தொடங்கிய ஆதி மனிதன், வேட்டையாடி விலங்கினத்தை உண்டும், மலைகளில் புதர்களில் மறைந்தும் வாழ்ந்தான். குன்றின் வளங்கள் குன்றிப் போக, காடுகளுக்குள் கால் வைத்தான். விலக்கி வாழ்ந்த விலங்கினை எல்லாம், பழக்கி வாழ்ந்து பட்டிக்குள் அடைத்தான். எத்தனை வளங்கள் இருந்தால் என்ன, உட்கார்ந்து உண்ணும் உணவு, ஒருநாள் தீர்வது போல, காடுகளும் அவனைக் கைவிட்டன. விதைக்காமல்

ஆதி குகையின் அணையா நெருப்பு… Read More »

Shopping Cart
Scroll to Top