மல்லிப்பூ வாடுது!

/*! elementor – v3.6.8 – 27-07-2022 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} ‘ஐடம் சாங்க்’ என்று பெயர் வாங்கிய ஒரு பாடல் எப்படி பிரிவின் துயரை மொழியும் பாடலாக மாறியது என்ற ஆச்சரியம் எனக்குள் அடங்கவே இல்லை. அண்மையில், சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தான் ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸப் என எல்லா சமூக வலைத்தளங்களையும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. இது, கணவனைப் பிரிந்த […]

மல்லிப்பூ வாடுது! Read More »

அவர் தான் பெரியார்!

பெரியார் இறந்து ஐம்பது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இன்னும் அந்தக் கறுப்புச் சூரியனின் நெருப்புக் குழம்பால் தான், நிலைத்து நிற்கிறது நம், நிலமிசைப் பகல். பெரியாரின் சிந்தனைகள் அருகிக் கொண்டிருப்பதாய் அச்சமூட்டகின்றனர் சிலர்; விண் வரை எழுந்து விழுது இறக்கிய ஆலத்தை, மண் அடி வாழும் கரையான்கள் அரிக்குமா? அவரை நினைக்கும் போதெல்லாம், நினைவுக் குளத்தில் நீந்துகின்றன விந்தை மீன்கள்; அவர் சிந்தனைச் சிற்பிக்குள், முத்துக்கள் எடுக்க முயலாத ஆட்கள், கிளிஞ்சல் என்று அதைக் கீழே

அவர் தான் பெரியார்! Read More »

ஆடும் பாம்படம்

எங்களுக்கெல்லாம்வசவுச் சொற்களின்வாத்தியார் அவர்! அண்டிய செடிகொடிகளால்அதிகம் புழக்கமில்லாதஒற்றை அடிப் பாதையாய் ஆனதுஅப்பாவுக்கும் அப்பத்தாவுக்குமான உறவு! அப்பத்தாவைப் பொறுத்த வரைஅப்பா ஒரு,தேவையில் திறக்கும்அண்டாகா கசம் குகை! அடகு வைத்த நகையைமாதா மாதம் மீட்டுமீண்டும் அடகு வைக்கும்ஏழைச் சாமானியனைப் போலசந்திப்பு ஒவ்வொன்றிலும்சண்டையைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறியதே இல்லை இருவரும்! எவருக்கு எதுவென்றுஎப்போதோ கையெழுத்தானஉடன்படிக்கைகளை எல்லாம்உதவாதவைகளாக்கினஅப்பத்தாவின் ஆயுள்! அன்றாடம் வரும்அனைத்து உபசரிப்புகளும்நின்று போனதன்காரணம் விளங்காமல் அப்பத்தாக்காத்திருக்க, ஐந்து விரல்களில்மோதிர விரலானஅத்தைகள் கூட வந்து பார்க்கவில்லை, அத்தனை நகைகளும்திருடுபோன பின்!

ஆடும் பாம்படம் Read More »

இசைக்குயில் சுவர்ணலதா!

சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள்.   சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு

இசைக்குயில் சுவர்ணலதா! Read More »

வாலியும் கதிரும்-2

முந்தைய அத்தியாயத்தில் சொன்னது போல, கதிருடன் வாலி கொடுத்தக் காதல் காவியங்கள் தான் எத்தனை எத்தனை? காதல் சாயத்தில் கசக்கிப் பிழிந்த துணிகளைப் போல, மொத்தப் படத்தையும் காதலால் முழுக்காட்டி இருப்பார்கள், கதிரும் வாலியும். இவர்கள் இப்படி இருக்க, ரகுமான், எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்திருப்பார். ‘காதல் தேசம்’ முக்கோணக் காதலுக்கு முதல்முறை அல்ல, ஆயினும், ரகுமானும் வாலியும் அதை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது தமிழ் சமூகத்தின் தாரக மந்திரம்.

வாலியும் கதிரும்-2 Read More »

வாலியும் கதிரும்

கூட்டணி இல்லாமல் திரைப்படம் இல்லை. எத்தனைக் கூட்டணிப் பிரிவு இழப்பில் சென்று முடிந்திருக்கின்றன? எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த வைரமுத்து இளையராஜா கூட்டணி, இன்னும் ஒரு படம் இணையாதா என்று எத்தனை மனங்கள் ஏக்கத்தில் இருக்கின்றன. இப்பொழுதும் கூட, பொன்னியின் செல்வனில் வைரமுத்துவைத் தேடும் இதயங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது? ஏனோ தெரியவில்லை, மணிரத்னம் படமென்று வந்துவிட்டால் ரகுமான் அரக்கனாகி விடுவதை கண்டவர்கள் கேட்டவர்கள் சாட்சி. இப்படி எத்தனையோக் கூட்டணிகளை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். கூட்டணி சக்கரம் இல்லாமல், சினிமாத்

வாலியும் கதிரும் Read More »

நான் ரசித்த வாலி – 8

‘எப்படி ஒரு கவிஞன் நாத்திகனாய் இருக்க முடியும்? இறைமையை உணராமல் எப்படிக் கவித்துவம் வரும்? அதனால் தான், ஆதி நாட்களில் நாத்திகனாய் இருந்த கவியரசர் கண்ணதாசன், பாதி நாட்களில் ஆத்திகனாய் ஆனார்’ என்று நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருப்பார் கவிஞர் வாலி. அவரைப் பற்றி கவிஞர் வாலி, “மேடைக்கு மேடை… நாத்தழும்பேறநாத்திகம் பேசினான்;பின்னாளில் – அப்பித்தம் தெளிந்து…நாத்திகத்தை நாக்கில் இருந்துவழித்து வீசினான்;” என்று ‘கிருஷ்ண பக்தன்’ என்னும் நூலில் கண்ணதாசன் என்னும் கவிதையைக் கவிதையாய் வடித்திருப்பார் வாலி. இப்படி

நான் ரசித்த வாலி – 8 Read More »

புத்தனின் கருவறை!

புத்தனாக மாறசித்தார்த்தன்தவம் செய்தான்!முதலில் அவன்,சித்தார்த்தன் ஆகவேதவம் செய்தான் என்பதை ஏன் யாரும் சொல்லவில்லை? முன்னது,இருப்பதில் இருந்துஇல்லாமைக்குச் செல்வது…பின்னது,இல்லாமையில் இருந்துஇருத்தலைச் சொல்வது… ஒரு ஒற்றுமை!இரண்டு தவங்களின்ஈட்டலையும்கடவுளாகக் கருதினாலும், விருப்பமில்லாமல்,புத்தனுக்குப்பூசப்பட்டதைப் போல்இங்கும் ஏராளமான கைகள்மதச்சாயங்களோடுநிற்கின்றன! *இது,தண்ணீருக்குள் மூழ்கியதவநிலை! இங்கு,இலைகள் விழுந்துஎழுப்பப்போவதில்லை! எத்தனைக் குரல்கள்எங்கு ஒலித்தாலும்முகங்களும் மொழிகளும்பரிட்சயமில்லாததால்முடியாத மோன நிலை! கடவுளாகக் கருதக்முக்கிய காரணம்,‘கருவறை’ காவலே! ஆனால்,இந்தக் கருவறையில்எல்லோர்க்கும் அனுமதி உண்டு!

புத்தனின் கருவறை! Read More »

ஆசிரியர் பா!

தன்னலமே கொள்ளாதோர்,தமக்கென்று நில்லாதோர்,தரணியிலே ஆசிரியர் மட்டும்! அஃதிடம்சின்னதொரு விதைதந்தால்சிங்கார மரமாக்கிசிரிப்போடு வளர்ச்சியில்கைத் தட்டும்! பெற்றோர்கள் வெளியிலேபெருமையோடு சொன்னாலும்பேர்வாங்கித் தந்ததுவோ இவர்கள்! பலகற்றோர்கள் ஆனாலும்கர்வமே இல்லாமல்(கொள்ளாமல்)கைகொடுப்போர் இவரில்லா தெவர்கள்? வள்ளுவனோ தன்னுடையவார்த்தைகளில் மறந்தானோமேன்மையான ஆசான்கள் பற்றி! அந்தவல்லவனே மறந்தாலும்வாழ்த்துவோம் இல்லையெனில்வையகமே எறிந்திடும்தீப் பற்றி! இருள்நீக்கி மனிதர்கள்இதயத்தை ஒளியாக்கிஎந்நாளும் ஒளிருமிந்த மெழுகு! அவர்கள்பொருளீட்ட வழியொன்றைப்புரியாமல் எங்கேதான்போகிறதிப் பொல்லாத உலகு? அவமானம் செய்தாலும்அறியாமை என்றெண்ணிஅன்பாக பேசிடுவார் நாளும்! அஃதைதவமாக எண்ணாததற்குறிகள் மேதினியில்தழைத்தோங்கி எவ்வாறு வாழும்? ஏணியென பலபேரைஏற்றிவிட்டோர் அவர்மட்டும்ஏறாமல் நிற்பதுதான் கொடுமை!

ஆசிரியர் பா! Read More »

Shopping Cart
Scroll to Top