A Thousand Years of Pain
பெங்களுரு சாலைகளில், கார்களின் சத்தங்களுக்கு மத்தியில் நசுங்கிச் செத்துக் கொண்டிருந்தது அமைதி. ஆயிரம் பெரும் அலைகளை ஆழி வீசினாலும், அது அத்தனையையும் ஆற்றுப் படுத்தும் கரைகளைப் போல, அத்தனைப் பெரும் ஓசைகளையும், ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தன, அங்கிருந்த புத்தகக் கடைகள். யாருக்குத் தான் இங்கே கனவு இல்லை? கடையில் வேலை செய்பவருக்கு, சொந்தக் கடை வாங்க வேண்டும் என்ற கனவு. சின்ன கடை வைத்திருப்பவருக்கு, பெரிய கடை வாங்க வேண்டும் என்ற கனவு. பெரிய கடை முதலாளிக்கு கோடிஸ்வரன் ஆக வேண்டும் […]