How to name it?


ஆணாகப் பிறப்பவர்கள் என்னவெல்லாம் ஆக முடியும்? அப்பாவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, எதிரியாக, துரோகியாக, பைத்தியக்காரனாக… முடிந்தால் தலைவனாக! அதே போல் பெண்ணாகப் பிறக்கிறவர்கள்? மகளாக, அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, அண்ணியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, முடிந்தால் தெய்வமாக!

சரி, அரவாணியாகப் பிறக்கிறவர்கள்?

– மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் நூல்

பெரும் காத்திருப்புக்குப் பின், டோரோதி ஓடிடி-யில் வெளியான அன்றே பார்த்து முடித்தேன். படம் பார்ப்பதற்கு முன்பே, அதைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்ட ஓர் இயக்குநர் இமயத்தின் நேர்காணல் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர்,

“இது மேற்குலகின் தாக்கம். பணத்திற்காய்ப் பண்பாட்டைச் சீரழிக்கும் படம். கூத்தாண்டவர் கோவிலில் உங்களை அனுமதிக்கிறோமா இல்லையா”, என்று ஏதேதோ பேசியிருப்பார். குறிப்பாக, “இறுதிக் காட்சியில் முத்தக் காட்சியை நீக்கிவிட்டுத் தான் படம் ஓடிடியில் வெளியாக வேண்டும்”, என்று கட்டளையெல்லாம் போட்டிருப்பார்.

அப்போது மனதில் எழுந்த இரு கேள்விகள், ஏற்றுக்கொள்வதற்கும், உள்ளே அனுமதிப்பதற்கும் நீங்கள் யார்? மாறிக் கொண்டே இருப்பது தானே பண்பாடு?

பாலினப் பாகுபாடு பற்றி போதிய தெளிவில்லாத பள்ளி நாட்களில், நளினத்தோடு பேசும் சக தோழன் ஒருவனைத் திருநங்கை என்றே மொத்த வகுப்பும் அழைக்க, ஆசிரியரும் சேர்ந்து அவனை அவ்வாறே கேலி செய்வார். சொல்ல முடியா துயரோடு அவன் கண்ணீர் சிந்திய பொழுதுகளைக் கூட அப்போது கடந்து சென்ற மனம், இப்போது காலத்தின் கைப்பிடித்துப் பின்னோக்கிச் சென்று, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருக்கு, ஆறுதல் சொல்ல முடியாமல் ஆற்றாமையில் தவிக்கிறது.

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாற நினைக்கும் ஒருவர்(இல்லை எதிர்மாறாக) அன்றாடம் சந்திக்கும் அவலங்களைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து செல்லும் நமக்கு, இயல்பு வாழ்க்கைக்கே இத்தனை போராட்டங்களைச் சந்திக்கும் திருநர் சமூகத்தின் மன நிலை எல்லாம் எப்படிப் புரியும்? விலையைக் கருதி விருப்பம் இல்லாமல் அப்பா வாங்கிக் கொடுத்த பிறந்தநாள் சட்டையை அழுது கொண்டே போட்ட நாட்கள் இன்னும் அழியாமல் மனதிற்குள் நிழலாடுகின்றன. விருப்பமான உடலில், விருப்பமற்ற ஆடையைக் கூட உடுத்த மறுக்கும் நமக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது, விருப்பமற்ற உடலில் விருப்பமான ஆடையை உடுத்த நினைக்கும் அவர்களைப் பற்றி கருத்து சொல்ல?

‘டோரதி’ திரைப்படத்தில் பதினாறு வயதிலேயே தன்னைப் பெண் என்று உணர்ந்த சுப்பு, பல ஆண்டுகள் அதை யாருக்கும் சொல்லாமல், ஆழ்மனதில் போட்டு அடை காத்து வைத்திருப்பான். அவனுக்கு எல்லாமுமாய் இருக்கும் கார்த்தி கூட, இந்த ஓர் இடத்தில் இடறி விழ, அண்ணன் மனைவியாக வீட்டிற்கு வரும் டோரதி தான் அவனுக்கு, வார்த்தைகளை வடிகட்டாமல் எல்லாவற்றையும் சொல்லும் இடமொன்றைக் கொடுப்பாள். ஆழ்கிணற்றில், ஆளற்றத் தனிமையில், மனதின் புழுக்கத்தை உடைத்து, அவள் மடியில் படுத்து அழத் தொடங்கும் சுப்பு, கண்ணீர் ததும்பக் காலமெல்லாம் சுமந்த கன்னிமையை, அவள் காலடியில் கொட்டித் தீர்ப்பான். எண்ணத்தைச் சொல்லும் இடத்தைக் கூட அவனுக்கு, இதுவரை யாருமே கொடுத்ததில்லை என்பதை உணர்த்தும் காட்சி அது.

பெல்ஜியம் வந்த சில நாட்களில், மேலாளர் ஒருவருக்கும் எனக்கும் பகை ஒன்று நெருப்பாய்ப் பற்றி எரிய, எவருக்கும் சொல்லாமல், எனக்குள்ளேயே அதை மறைத்து வைத்திருந்தேன். காலப் போக்கில் அந்தக் கனல் முற்றிப் போக, எரிமலையாய் வெடித்து எல்லோர்க்கும் தெரிந்தது. அப்போது என்னிடம் வந்து பேசிய பெல்ஜிய நாட்டு சக ஊழியன் ஒருவன்,

“இதை ஏன் நீ எங்களிடம் முன்பே சொல்லவில்லை. நாங்கள் எல்லாம் உனக்கு உறுதுணையாய் அல்லவா இருந்திருப்போம். அனைத்தையும் பகிர்ந்து கொள்ளப் போதுமான இடம் அளிக்காததை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்(Sorry for not giving you the enough space to confess)”, என்று ஆறுதலாய் என் கைகளைப் பிடித்தான்.

நம்மைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் இயல்பாய் எண்ணத்தைச் சொல்லும் இடங்களைக் கொடுத்திருக்கிறோமா? உற்றார், உறவினர், நண்பர், காதலன், காதலி, கணவன், மனைவி என அது யாராக வேண்டுமானால் இருக்கட்டும்? மனக்குமுறலைச் சொன்னால் மதிப்பீடின்றிக் கேட்கப்படுவோம் என்ற எண்ணத்தை எத்தனை உறவுக்கு நாம் கொடுத்திருக்கிறோம் என்று நம்மை நாமே ஒருமுறை கேட்டுக் கொள்வோம்.

பத்தாண்டுகளுக்குப் பின் அழைத்த கல்லூரி தோழன் ஒருவன், பேச்சின் ஊடே தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் என்று சொன்னதை நான் இயல்பாய்க் கடந்து செல்ல, “யாருக்குமே நான் சொன்னது இல்ல டா. ஏன்னா யாருமே எனக்கு அந்த இடத்தக் கொடுக்கல. உன் கிட்ட சொல்லணும்னு தோனுச்சு” என்றான்.

எல்லா உறவுகளிலும், இடம் கொடுத்தல் எத்தனை முக்கியம்?

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் கொழுந்தனாரும் அண்ணியும் என்ற தலைப்பில், கொழுந்தன் பக்கம் ஒரே ஒரு பெண் மற்றும் அமர்ந்திருப்பது தொடக்கத்தில் சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியது. அண்ணிமார்கள் எப்படி இன்னொரு தாயாக மாறினார்கள் என்பது தான் அன்றைய தலைப்பு. ஆண் குரலில் பேசத் தொடங்கி தன்னை திருநங்கை என்று அறிமுகம் செய்து கொள்ளும் அந்தத் தனித்த பெண், தன் அண்ணனின் திருமணத்திற்கு முன்பே பெண்ணாக மாறியிருந்த போதிலும், பெண் வீட்டார் வீட்டிற்கு வந்த போது தன்னை வெளியே அனுப்பியதை, திருமணத்திற்கு ஆண் உடுப்பு அணிய வைத்ததை, முடி வெட்டச் சொன்னதை எனச் சில நிகழ்வுகளைச் சொல்லி வீட்டார் அனைவரும் அவரை ஆணாக மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தியதைக் குறிப்பிடுவார். ஆனால், எதிர்ப்புறம் இருந்த அண்ணி, ‘என்னோட நாத்தனாரு’, என்று தொடங்க, தொகுப்பாளர், “யாரைச் சொல்றீங்க. உங்க கொழுந்தனாரையா?”, என்பார்.

“மாறிட்டாங்கள்ல. இனிமே அவங்க கொழுந்தனாரு இல்ல நாத்தனாரு தான்”, என்று அழுந்தச் சொன்ன அண்ணி, “எனக்கு இப்படி ஒரு பிள்ளை பொறந்தா நான் இப்படித் தான பாத்துருந்துருப்பேன்”, என்று தொடர்வார். தன்னைப் பெண்ணென்று விளிப்பதையே பெரும் பேறென்று நினைப்பதாய்ச் சொல்லும் அந்தத் திருநங்கை,

“இவங்க வந்ததுக்கு அப்பறம் தான் எங்க வீட்ல எனக்கு ஓர் அங்கீகாரமே(ஆங்காரம் அல்ல) கிடைச்சுது. ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கு பேண்ட் சட்டை தான் எடுத்துக் குடுப்பாங்க. இவங்க என்ன ஏத்துக்கிட்டதுக்கு அப்பறம் தான் முதல்முறையா தீபாவளிக்கு எனக்குப் புடவை எடுத்துக் குடுத்தாங்க”, என்று பெருமிதம் கொள்வார்.

டோரதிகள் வானோடு பிறந்து வாசலில் வந்து நிற்கும் தேவதைகள் அல்ல, ஊனோடு உதித்து நம்மில் ஒருவராய் நடமாடும் பெண்ணினம் தான் என எனக்குப் பறைசாற்றிய நிகழ்ச்சி அது.

சுப்புவை சாலையில் இறக்கிவிட்ட இடத்தில் படம் முடிந்திருக்க வேண்டும் என்ற கருத்துகளைப் பரவலாகக் காண முடிந்தது. ஏன் அதோடு முடிந்திருக்க வேண்டும்? அதற்குப் பின் சுப்புவின் நிலை? தெருத்தெருவாகப் பிச்சை எடுத்திருக்க வேண்டும், இல்லை வேலை கிடைக்காமல் பாலியல் தொழிலைப் பழகி இருக்க வேண்டும், அது தான் அவர்களைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவான முடிவு. ஒரு முத்தம் எத்தனை முகத்திரைகளைக் கிழிக்க வல்லது? மிஷ்கின் சொல்வதைப் போல, இந்த ஆண்கள், கத்தி எடுத்துச் சென்று இன்னொரு ஆண் கழுத்தை அறுக்க முடியும் என்றால், முத்தம் கொடுப்பதில் தவறொன்றும் இல்லை தானே?

ஆணாக எனக்கு அறிமுகம் ஆகி, சில நாட்களில் பெண்ணாக மாறிய தோழி ஒருத்தி, ஒரே பொழுதில் தான் உற்றார், உறவினர், வீடு, வேலை, என அனைத்தையும் இழந்த கதையைச் சொல்லி ஆதங்கப்பட, என்ன சொல்லித் தேற்றுவதெனத் தெரியாமல் வழி மறந்த பிள்ளையாய் மொழி மறந்து விடைபெற்றேன். அவரிடம் சென்று ‘உணர்வுகளே பாலினம், உறுப்பு அல்ல’ என்று பாடம் எடுக்கச் சொல்லிக் கொடுப்பது எத்தனை அபத்தம்? மாற வேண்டியது சமூகம் அல்லவா? மாற்றங்களுக்குட்பட்ட மனங்களையே மாற்ற வேண்டிய பொறுப்பையும் சுமந்து திரியச் சொல்வது எத்தனை வன்முறை?

மாரி செல்வராஜ் எழுதிய மறக்கவே நினைக்கிறேனில் வரும் பால் கதையில், கார்த்தியாக அறிமுகம் ஆகிப் பின் கார்த்திகாவாகி இருக்கும் ஒருவரை அவர் வீட்டு ஆட்களே அடித்து விரட்ட, மாரி முன், கண்ணீர் ததும்பக் கன்னிக் கோலத்தில் காட்சி கொடுப்பார். என்ன சொல்வதென்று தெரியாத மாரி, ‘ஆணாகப் பிறந்து , பெண்ணாக வாழ நினைக்கும் இவன் இப்போதைக்குச் சாக வேண்டுமா? வாழ வேண்டுமா? சாவதென்றால் ஏன் சாக வேண்டும்? வாழ்வதென்றால் எங்கு வாழ வேண்டும்?’, என்று ஒற்றைக் கேள்வியில் ஒடுக்கப்பட்டக் குரல் அனைத்திற்கும் சேர்த்து உரக்கப் பேசியிருப்பார். இறுதியில்,

“இப்ப என்ன பண்ண போற?”

“எங்கயாச்சும் போகப் போறேன்!”

“எங்க போவ”

“கண்டிப்பா என்னை மாதிரி எங்கேயாச்சும் நிறையப் பேர் இருப்பாங்க. அவர்களைத் தேடிப் போறேன்”, என்று அழுது கொண்டே நிற்கும் கார்த்தியை, மன்னிக்க, கார்த்திகாவைப் பேருந்து ஏற்றி அனுப்பி வைப்பார் மாரி. இங்கே கீழ் நடுத்தர, ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெரும்பான்மை திருநங்கை, திருநம்பிகளின் நிலைமை இது தானே? தனக்கான வானத்தைத் தானே தேடிக் கொள்ளும் சிறு பறவையைப் போலத் தானே அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள் என்பதைக் கூட உணராமல், சோதனை மீறி சாதனைச் செய் என புரட்சி புண்ணாக்கு வசனங்கள் பேசுவதெல்லாம் அறியாமையின் உச்சம். இல்லை, ஆணாதிக்கத்தின் அடித்தளம் பெயரும் என்ற அச்சம்.

பின்னாளில் ஒரு நாள், கார்த்தி வீட்டுக்குச் செல்லும் மாரி, தன்னை கார்த்தியின் தோழன் என்று அறிமுகம் செய்து கொள்வார். அந்தப் பெயரைக் கேட்டதும் கதறி அழத்தொடங்கும் கார்த்தியின் அம்மா, ‘கார்த்தி செத்துட்டான்’ என்பார். வாசலில், பள்ளிச் சீருடையில் மாலை மாட்டப்பட்ட கார்த்தியின் புகைப்படத்தைக் கவனித்த மாரி,

‘கார்த்தி இறந்துவிட்டான். அது எனக்கும் தெரியும். என் கார்த்திகா எங்கே? அதைச் சொல்லுங்க’, என்று முடித்திருப்பார்.

டோரதியில், கார்த்தி கொடுத்த கடைசி முத்தத்தில் கொதித்தெழுந்த கூட்டம் புரிந்து கொள்ள வேண்டியது இங்கே ஒன்றைத் தான். சாலையில் சுப்புவை விட்டுச் செல்லும் கார்த்தி, ‘என் நண்பன் சுப்பு தான் எப்பவோ செத்துட்டானே’ என்பான். ஆக, கார்த்தி முத்தம் கொடுத்தது சுப்புவிற்கு அல்ல, பெண்ணாக மாறிய டோரதிக்கு. முத்தத்திற்குப் பின் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்டு, காமம் மட்டுமே காதலின் கடைசி நிலை என்று நினைக்கும் சில அறிவிலிகளுக்கு(இயக்குநர் இமயம் உட்பட) பதிலாய், எப்போதே எழுதிய வரிகள் நினைவில் வந்து போகின்றன.

‘எல்லா பிடித்தமும் காதல், திருமணம், காமம், குழந்தைகள் என்று முடிய வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு சில அன்பின் உச்சமே அதீதமாய்ப் பிடிப்பது தான். சில அன்பு அதீதமாய் வளர்ந்து ஆயுளெல்லாம் நிறைந்து வளரட்டும். அதில் தவறொன்றும் இல்லை’

*

What can a person born male become? A father, a son, an elder brother, a younger brother, a friend, an enemy, a traitor, a madman… and, if fate is kind, a leader!

And a person born female? A daughter, a mother, an elder sister, a younger sister, a sister-in-law, a friend, a lover, a wife… and, if fate is kind, a goddess!

Very well. And those born transgender?

— Mari Selvaraj, Marakkave Ninaikkiren

After a long wait, I watched Dorothy on the very day it was released on OTT. Before I saw the film, I happened to watch an interview with one “Himalaya of Directors” (sarcasm fully intended), who had a great many questions about it. In it he said,

“This is Western influence. A film that corrupts our culture for money. Do we allow you people into the Koothandavar temple or not?” and rambled on about this and that. Most of all, he issued a decree: “The film must be released on OTT only after the kiss in the final scene is removed.”

Two questions rose in my mind then. Who are you to accept or reject, to allow anyone in or keep them out? And isn’t culture the very thing that never stops changing?

In my school days, when I had no real understanding of gender, a classmate who spoke with a certain softness was called a thirunangai by the whole class, and the teacher would join in the mockery. Back then, my heart walked straight past the moments when he wept in a grief he couldn’t put into words. Now that same heart takes time by the hand and walks back, desperate to comfort those tears, the tears of one who suffered and could bear no more, and it aches in helplessness, because it cannot.

We look at, and look away from, the everyday humiliations faced by someone born male who longs to become female (or the other way round). How could people like us ever understand the inner world of a trans community that fights this many battles just to live an ordinary life? The days I cried as I put on the birthday shirt my father bought me, chosen for its price and not my liking, still flicker like shadows in my memory. We, who refuse to wear even an unwanted garment on a body we love, what right do we have to pass judgment on those who simply long to wear the clothes they love on a body they never wanted?

In Dorothy, Subbu realises at sixteen that she is a woman, and for years tells no one, keeping it hidden and brooding deep inside. Even Karthi, who is everything to Subbu, stumbles at this one place. It is Dorothy, arriving at home as the elder brother’s wife, who finally gives Subbu a place to say everything without filtering a single word. At the bottom of a deep well, in a solitude with no one else around, Subbu breaks open the suffocation inside, lays her head in Dorothy’s lap and begins to cry, and with tears overflowing, pours out at Dorothy’s feet the womanhood she has carried all her life. It is a scene that makes you feel that no one, until then, had ever given her even a place to speak her mind.

A few days after I arrived in Belgium, a feud flared up between a manager and me like a fire. I told no one and kept it buried inside. Over time the embers grew hotter until it erupted like a volcano, and everyone came to know. Then a Belgian colleague came to me and said,

“Why didn’t you tell us before? We would all have stood by you. I’m truly sorry for not giving you enough space to confess,” and held my hands to comfort me.

Have we given everyone around us a place where they can speak their hearts freely? Let it be anyone at all: family, relatives, friends, a lover, a husband, a wife. Let us ask ourselves, just once: how many of our relationships have we given the assurance that if they pour out their pain, they will be heard without being judged?

A college friend called me after ten years, and somewhere in the conversation he mentioned that he was gay. When I simply took it in my stride, he said, “I’ve never told anyone, da. Because no one ever gave me that space. I just felt like I should tell you.”

In every relationship, how important it is to make room.

On the TV show Tamizha Tamizha, there was an episode on brothers-in-law and their Annis (elder brothers’ wives). At first it was a little confusing to see just one woman sitting on the brothers-in-law side. The topic that day was how Annis had become a second mother. That lone woman began speaking in a male voice and introduced herself as a thirunangai. Even though she had already become a woman before her brother’s wedding, she recounted how her family sent her out of the house when the bride’s family came to visit, made her wear men’s clothes to the wedding, and told her to cut her hair. Everyone at home had pressured her to become a man again. But on the opposite side, her Anni began with, “My naathanaar (sister-in-law)…” and the host asked, “Who do you mean? Your kozhundhanar (brother-in-law)?”

“She’s changed, hasn’t she? From now on she isn’t my brother-in-law, she’s my sister-in-law,” the Anni said firmly, and went on, “If I’d had a child like this, isn’t this exactly how I would have looked after her?” The thirunangai, who said that simply being called a woman felt like the greatest blessing of her life, added,

“Only after she came into our home did I get any recognition (not resentment, recognition) in my own family. Every Deepavali they would buy me pants and a shirt. Only after she accepted me did I get a saree for Deepavali for the first time,” she said, glowing with pride.

That show told me loud and clear: Dorothys aren’t angels born in the heavens who come and stand at our doorstep. They are flesh and blood, women walking among us as one of us.

I saw opinions everywhere saying the film should have ended where Subbu is dropped off on the road. Why should it have ended there? And what of Subbu after that? She should have begged on the streets, or, unable to find work, been pushed into sex work. That, for them, is the acceptable ending. How many masks can a single kiss tear off? As Mysskin says, if these men can take a knife and slit another man’s throat, then surely there is nothing wrong with a kiss?

A friend I first knew as a man, who became a woman a few days later, told me how in a single stroke she lost everyone and everything: family, relatives, home, job. She poured out her anguish, and not knowing how to console her, I took my leave like a child who has lost his way and forgotten how to speak. How absurd would it be to go to her and lecture her that “gender is feeling, not organs”? Isn’t it society that must change? How violent is it to make those who have already been wounded by change also carry the burden of changing everyone else’s minds?

In “Paal,” a story from Mari Selvaraj’s Marakkave Ninaikkiren, someone first introduced as Karthi has become Karthika. Beaten and driven out by her own family, she appears before Mari, tears welling, dressed as a young woman. Not knowing what to say, Mari asks a single question that speaks loudly for every silenced voice: “Born a man and wanting to live as a woman, must this person die now, or live? If die, why must she die? If live, where must she live?” And in the end,

“What are you going to do now?”

“I’m going to go somewhere.”

“Where will you go?”

“There must be lots of people like me somewhere. I’m going to find them,” says Karthi, weeping. No, forgive me, Karthika. And Mari puts her on a bus and sends her off. Isn’t this the reality for most trans women and trans men born into lower-middle-class and poor families? Without even realising that each of them lives like a small bird searching alone for its own sky, people spout “rise above your trials and triumph” and other hollow revolutionary rubbish. That is the height of ignorance. Or else, it’s fear: fear that the very foundations of male dominance will crack.

One day, much later, Mari goes to Karthi’s house and introduces himself as Karthi’s friend. On hearing that name, Karthi’s mother breaks down sobbing and says, “Karthi is dead.” At the doorway, Mari notices Karthi’s photograph in school uniform, garlanded, and he ends with this:

“Karthi is dead. I know that too. Where is my Karthika? Tell me that.”

The mob that boiled over at the last kiss Karthi gives in Dorothy needs to understand just one thing here. When he leaves Subbu on the road, Karthi says, “My friend Subbu died long ago.” So the kiss was never for Subbu. It was for Dorothy, the woman Subbu had become. And for the few fools (the Himalaya of Directors included) who ask what their life will be after that kiss, who believe lust is the final destination of love, the lines I wrote long ago come back to me:

“Not every fondness has to end in love, marriage, sex, and children. Sometimes the very peak of love is simply to love unconditionally. Let some love grow boundless and fill a whole lifetime. There is nothing wrong in that.”

Shopping Cart
Scroll to Top