Marudhu Pandiyan

J J Dreams – 6

சுனிலும் ஷ்ராவனியும் இல்யூஷன் ஹவுஸ் செல்ல, ஒரு புத்தகத்துடன் அருகில் இருக்கும் பூங்காவில் உள்ள மரப்பலகையில் சென்று அமர்ந்தான் ஜெரோம். எதுவும் பேசாமல் அவன் அருகில் வந்தமர்ந்த ஜோதாவிடம், தானாய் எதுவும் பேசக் கூடதென்பதில் தீர்க்கமாய் இருந்தான் ஜெரோம். சுற்றத்தை நோட்டமிட்டான். சுடாத வெயில். குடை விரித்த மர நிழல்கள். மகரந்தம் ஏந்திய மலர்கள். விளையாடும் சிறார்கள். ஆட்கள் மொய்க்கும் வேஃபல்ஸ் வண்டி. சில நிமிடங்களுக்குப் பின், “என்ன படிக்கிற?”, ஜோதாவே உரையாடலைத் தொடக்கினாள். மிகினும் குறையினும் […]

J J Dreams – 6 Read More »

J J Dreams – 5

Antwerp Railway Station “அவன் ப்ரொப்போஸ்(propose) பண்ணா என்ன சொல்ல”, தன் இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று இறுகப் பற்றிக் கொண்டபடி, நடுக்கத்துடன் கேட்டாள் ஷ்ராவனி. “புடிக்கலன்னு சொல்லிடு”, ஜெரோம். “டேய்…” “அப்றம் என்ன… உனக்கும் அவனப் புடிச்சிருக்கு, அவனுக்கும் உன்னப் புடிச்சிருக்குனா. சரின்னு சொல்லிட்டு சந்தோசமா இருப்பியா”, பேசிக்கொண்டிருக்கும் போதே எதிரே சுனிலும், முகக்கவசம் அணிந்தபடி ஜோதாவும் வர, ‘ஹலோ’ என்று ஒருவருக்கொரு கைகுலுக்கிக் கொண்டனர், ஜோதா ஜெரோமைத் தவிர. இருவரும் வெறுப்புப் பார்வைகளே வீசினர்.

J J Dreams – 5 Read More »

J J Dreams – 4

நாட்கள் ஓடின… இரண்டு துறைகளை ஒன்றாய்த் திரட்டி, ஓரறையில் உட்கார வைத்தபடி, முன்னால் நின்று உரையாற்றத் தொடங்கினார், ப்ரொபஸர் கேலின். அவருக்கு அருகில் இருந்த பெயர்ப் பலகை, பாக்டன் கேலின் என்றது. கேலினை ப்ரொபஸர் என்று ஒப்புக் கொள்வது கொஞ்சம் கடினம். இளம் வயது. மூக்கிற்கும் புருவ மத்திக்கும் இடையில் நிற்கும் விளிம்பில்லாக் கண்ணாடி. வரிசையான மஞ்சைப் பற்கள். சிரிக்கும் போது மட்டும் வந்து போகும் கன்னச் சுருக்கங்கள், வயதைக் கொஞ்சம் கூட்டி மறைத்தது. மேசைக்குப் பின்

J J Dreams – 4 Read More »

J J Dreams – 3

கரைகளைத் தொட்டு நுரைகளைப் பரப்பி, மேடு பள்ளங்களிலும், ஏற்ற இறக்கங்களிலும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஏற்படும் அதிர்வுகள் எண்ணிலடங்காதவை. ஓடும் நதியில் எறியப்படும் ஒரு கல், எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாமல், ஆழம் சென்று அமைதியாய் உறங்கும். ஆனால், குளங்களில் எறியப்படும் கல், கரையைத் தொடும்வரை, தன்னைச்சுற்றி வளையம் உண்டாக்கும் வல்லமை கொண்டவை. வேறுபாடு என்ன? அதிர்வுகளோடும் அசைவுகளோடும் செல்லும் வாழ்க்கை, ஓரிரு இடர்களில் ஒடுங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் முன்பே பழக்கப்பட்டிருப்பதால், ஒரு சிறு கல் அதை

J J Dreams – 3 Read More »

J J Dreams-1

“இங்கக் கம்யூன் எங்க இருக்கு?”, ஆறடிக்கும் உயரமாக, தொப்பி அணிந்திருந்த பெண்மணியிடம் கேட்டான் ஜெரோம். அப்பெண்மணி, வார்த்தையைச் செலவு செய்யாமல், வலது கையால் வழி சொல்ல, நன்றியுரைத்து அத்திசை நோக்கி விரைந்தான் ஜெரோம். ஃபேர் அண்ட் லவ்லி(Fair and Lovely) விளம்பரத்தில் வெள்ளைக்கு அடுத்து வரும் இந்திய நிறம். ஆறடிக்கு ஓர் அங்குலம் குறைவு. நெற்றியில் விழாமல் நேர்த்தியாய் சீவப்பட்ட முடி. தொட்டால் குத்தும் தாடி. குளிரை வெல்ல, ஆடையை மறைக்கும் கம்பளி மேலாடை. இடப்பக்கம் தோள் தொடங்கி வலப்பக்கம் விழுந்த, ஒரு பக்கப் பை அணிந்து, அந்தக் கண்ணாடிக் கட்டிடத்திற்குள் நுழைந்தான். வெளியே மழை விடாமல் தூறியது. அணிந்திருக்கும்

J J Dreams-1 Read More »

J J Dreams-2

“War is not about who is right!War is all about who is left! நிலப்போர் புரிந்தவருள் நிலைப்போர்க்கு மட்டுமே நிற்பதற்கு நிழல் கொடுக்கிறது வரலாறு. நாளைப் போர் முடியப் போகிறது. பிழைத்தவர்களை எல்லாம் பிரபஞ்சம் பெரிதாய்ப் பேசும், ஆனால், உலக வரலாற்றில் உயிர்கள் குடித்த யுத்தங்களில் முதன்மையானது எது? ஆதாயம் கிடைக்க ஆ! தாயம்! கேட்டு, மனைவி மனை மாடு இழந்து, கைப்பொருள் விட்டுக் காடு நுழைந்து, உட்பகை நெஞ்சுக்குள் உலையாய் கொதிக்க

J J Dreams-2 Read More »

1. மங்கல வாழ்த்துப் பாடல்-புகார் காண்டம்

மக்களுக்கு ஏதும் என்றால்மன்னவன் குடையேகாக்கும்; அதுபோலே- ஆகாயத்தில்-இரவில் ஞாயிறு மறையஇரவல் நிலவேபூக்கும்; அத்தகுச் சிறந்தமதியை மதி;அன்றாடம் அதைத் மனதுள் துதி; ª ஞாயிறு விண்ணின் தோழன்; அதுபோல்ஞாலத்தில் வாழ்ந்தான்சோழன்; அவனதுபாதங்கள் மண்ணைவலம் வரும்; அதனின்பலனாய் பற்பலவளம் வரும்; அதுபோல்பரிதியும் தினமும்நிலம் வரும்; அத்தகு சிறந்தவன்இரவி; இருக்கட்டும்அவன்புகழ் மண்ணில்பரவி; ª விசும்பு விசும்பாமல் போனால்மண் விசும்பும்;மண் விசும்பினால்புல் விசும்பும்;புல் விசும்பினால்புள் விசும்பும்; மழையால் விண்ணும்கானம் பாடும்; அதன்மூலம்மண்ணின் மடியில்தானம் போடும்; அதனால்,அன்றாடம் போற்றுவோம்அடை மழையை; அளவின்றி தருமந்தகொடை நிலையை;

1. மங்கல வாழ்த்துப் பாடல்-புகார் காண்டம் Read More »

சாராயம்!

தெருவிருந்து போராடத்திறனற்றோன் வணக்கம்! நம்கருவிருந்த பிள்ளைகளும்கத்தியின்மேல் நடக்கும்! ஏற்றிவைத்த நெருப்பிடையேஏழைகளின் குருதி! உரிய(து)ஆற்றிவிடத் தவறிவிட்டால்ஆட்சி மாற்றம் உறுதி! மண்முறைக்கே உரியதெனமல்லுக்கு நின்று – பலர்கண்மறைக்கும் வலிமையெல்லாம்கள்ளுக்கு உண்டு; லட்சங்கள் கொழிக்கும்-இதுலாபகரத் திட்டம்! உயிர்அச்சங்கள் அற்றோரால்அரசுக்கென்ன நட்டம்? வலைகளினைப் பிணம்தின்னும்வாய்களெல்லாம் பின்னும்! பலதலைமுறைகள் அழிகிறதேதாமதமா இன்னும்? நாணில் அம்பு பூட்டு! செத்தநம்பிக்கையை நாட்டு! நமதுமாநிலமே சிறந்ததென்றுமற்றவர்க்குக் காட்டு! விடியலுக்குக் காத்திருக்கவெளுத்திடுமா கிழக்கு? தினம்மடியுமிந்த மக்களுக்குமதுவிலக்கே இலக்கு! தோராயம் பலகோடித்திலகத்தை அழிச்சும் – இந்தச்சாராயம் அழியலையே!சாமிக்கே வெளிச்சம்! 🤦🏻‍♂️

சாராயம்! Read More »

2. பச்சைக் கிளிகள் தோளோடு! பாட்டுக் குயிலோ மடியோடு!

நகலாய் இருந்தாலும்நமைப்போல் குரங்கினம்நாகரிகம் அடையாததேன்? விலங்குகள் நம்மினும்வேறென்று காட்ட,மனிதனே மண்ணுக்குவேரென்று காட்ட,தெளிவாய் மனித இனம்திட்டம் போட்டது!மொழியால் தனைச்சுற்றிவட்டம் போட்டது! மானுடம்,விலங்கிடம் இருந்துவேறுபட்டது மொழியால்!மீண்டும்விலங்கினமாகமாறாதிருந்தது இசையால்! ஆம்!மொழி பயன்பட்டதுதொடர்புகொள்ள!இசைப் பயன்பட்டதுதொடர்ந்து செல்ல! இசை,மானுடம் கண்டுபிடித்ததுஅல்ல,மானுடத்தைக் கண்டுபிடித்தது! மனிதனை ஏற்றிய ஏணியில்,மொழி முதல் படி எனில்,இசை இரண்டாம் படி!அதை உணர்ந்த தமிழ்,இயலை முதலில் வைத்தது!இசையை இரண்டில் வைத்தது! அண்டத்தின் முதல்மொழிதமிழென்பதில்ஆச்சரியம் அல்லவே? *எம். எஸ். வி,தமிழ் கூறும் நல்லுலகைத்தாளம் போட வைத்தவர்!கதைபாடும் கூட்டத்தைக்கானம் பாட வைத்தவர்! ஆயிரம் விண்மீனைஆகாயம் சுமந்தாலும்மதி

2. பச்சைக் கிளிகள் தோளோடு! பாட்டுக் குயிலோ மடியோடு! Read More »

1. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே,நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…எந்த வேர்வைக்கும்வெற்றிகள் வேர் வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே’ பிப்ரவரி 22, 2009! பூமி,வான காகிதத்தில்இரவுக் கட்டுரைஎழுதி முடித்துவிட்டுவெண்ணிலா என்னும்முற்றுப் புள்ளி வைத்ததுஅமேரிக்காவில்! ஒளியால் சுத்தம் செய்துஉலர விட்ட வான வீதியில்சூரிய கோலமிட்டதுஇந்தியாவில்! அமெரிக்காவில்திங்கள் முளைத்தஞாயிறு இரவு!இந்தியாவில்ஞாயிறு உதித்ததிங்கள் காலை!திங்களும்,அலுவலகங்களும்என்றும் இணைந்தஇரட்டைப் பிறவி!ஆனால் அன்று-எங்கும் இருந்தது-ஆஸ்கர் என்றஆசை பரவி! இந்தியதுணைக்கண்ட பரப்பில்,அத்தனை,வேலை பரபரப்பில்,ஊரெல்லாம் இருந்ததுதொலைக்காட்சி முன்பு! செப்பின் சேர்க்கைதங்கத்தின் வடிவத்தைத்தீர்மானிப்பது போல,உப்பின் சேர்க்கைஉணவின் சுவையைஉயர்த்துவது போல,விருதுகளை

1. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே! Read More »

Shopping Cart
Scroll to Top