இசைக்குயில் சுவர்ணலதா!
சிற்றூர்களில் கூத்துகட்டும் நாடக நடிகர்கள், அரங்கத்தில் அத்தனை ஆச்சரியங்களை நிகழ்த்திவிட்டு, கூத்து முடிந்ததும் தன் ஒப்பனைகளைக் களைந்து, ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல் கிளம்புவார்கள். சுவர்ணலதா அவ்வகையே. திரையில் எத்தனையோ மாயங்களை நிகழ்த்திவிட்டு, நேர்காணல்களுக்கு வந்தமரும் போது, அதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருக்கும் இயல்புடையவள் அவள். கூட்டணி சேர்ந்த எல்லோருடனும் வெற்றி மட்டுமே இலக்கு என்று பயணித்தவள். சுவர்ணலதா பாடிய வெகுவான வரிகளெல்லாம், அவளுக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு […]