நான் ரசித்த வாலி-5
கவிதைகளில் கவித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு; ஆனால் பாடல்களுக்கு, அதுவும் தேவையான ஒரு பண்பு. அதுமட்டுமல்ல. பாடல்களைப் பொருத்த வரையில், புதுமையைத் தான் மக்கள் மனம் கொண்டாடுகிறது. இன்றதை, எத்தனையோப் பேர் செய்தாலும், அதை, அன்றே செய்தவர் கவிஞர் வாலி. படங்களில் தோன்றும் பாத்திரங்களை எல்லாம் பாடல்களில் பதித்தவர், சில நிஜப்பெயர்களையும், மக்கள் மனதில், நிலைநாட்ட முயற்சித்தார். முந்தைய பதிவில் சொன்ன ஒரு பாடலால், வாலியோடு ஒருவர், முறைத்துக் கொண்டார் என்றால் நம்புவீர்களா? ஆம்! “கறவை […]