Marudhu Pandiyan

தேன்! தேன்! தேன்!

கனித்தேனே! உனைத்தானே! சுவைக்க வேண்டும் – எனகணித்தேனே! களித்தேனே! தினமும் தானே!இனித்தேனே! வேண்டாமென் றெனக்குள் நானே! உன்இதழ்தேனைக் குடித்தப்பின் எண்ணினேனே!இனித்தேனே! உன்னாலே! உள்ளன்பாலே! உனைஇசைத்தேனே! விரல்களாலும்! இதழ்களாலும்!சனித்தேனே! கனவில்நீ சாரல் தூற! அடசபித்தேனே மூடாத இமைகள் சேர!மணித்தேனே மலர்த்தேனேத் தோற்றுப் போகும் எனமலைத்தேனே! மலைத் தேனே கண்டி ராததனித் தேனே! உனைப்போல தரணி எங்கும் ஒருதகைத்தேனே! இல்லென்று வண்டும் நாட!பணித்தேனே! உனையென்னுள் பார்க்கத் தானே! – அடபகைத்தேனே! சுற்றத்தைப் பாக்கள் பாட!தனித்தேனே! எனைநானே உன்னைத் தேட! அடதவித்தேனே! […]

தேன்! தேன்! தேன்! Read More »

திருநங்கை/திருநம்பி

புகழ் விரும்பிகளும்கேட்க விரும்பாதகைத்தட்டுக்குச்சொந்தக்காரர்கள்! முப்பாலைமூலை முடுக்கெல்லாம்பரப்பியவர்கள்! அவனா? அவளா? என்றுஅடித்துக் கொண்டது போதும்!‘அவர்’ விகுதி கூடதமிழ்த் தான்! கடவுள் தூரிகைகலந்துத் தீட்டியவண்ண ஓவியம்! பிடித்த உடலில்பிடிக்காத உடைகூடஅணிய மறுக்கும்நமக்கென்ன தெரியும்பிடிக்காத உடலில்பிடித்த உடை அணியும்அவர்களின் வலி? மொழியில் ஒருசின்ன திருத்தம்!மேனியை இனிமெய் என்றுசொல்லாதீர்கள்!இவர்களுக்கு அதுமெய் இல்லை! வல்லினம்மிகும் மிகா விதிகளைத்தீர்மானித்து அவர்களைசந்திப் பிழை என்று சொல்வதேசந்ததிப் பிழை! கடவுள் எழுதியகவிதைத் தொகுப்பில்அவர்கள்அச்சுப் பிழை அல்லசமூகம் ஏற்றுக் கொள்ளாதசீர்த் திருத்தங்கள்!காலம் கடந்தேபுரட்சி என்றுபேசப்படுவார்கள்! இறுதியில் நிகழ்ந்தசிறிய மாற்றம் –

திருநங்கை/திருநம்பி Read More »

அணையா நெருப்பு…

எப்போதாவது நீத்தார் பெருமையை நினைத்துப் பார்த்ததுண்டா?   உலகில் ஏதேனும் ஒரு நாடு, ஒரு மொழி, உயிர் நீப்பில்லாமல் உயிர் வாழ்கிறதென்று சொன்னால் அது மிகப்பெரும் பொய். ஆம்! உயிர் தான் ஒரு நாட்டை, மொழியை, அணையாமல் எரியவைக்கும் நெய்.   தமிழ் மொழி, தமிழ் நிலம், தமிழ் இனம், இன்று மரமாய் இருக்கிறது என்றால், அதற்காக பல உயிர் தன்னைக் கொன்று உரமாய் இட்டதனால் தான்.   செங்கொடி!   செங்கொடி பற்றி அறியும் முன்னே,

அணையா நெருப்பு… Read More »

பூனைக் குட்டிகள்!

எனக்கு ஒரு அற்ப ஆசை!இல்லை இல்லைகர்ப்ப ஆசை! அனைவரும்அடுத்தப் பிறப்பில்பூனையாகவே பிறக்க வேண்டும்! அவைகள்,விரட்டி விரட்டி யாரையும்காதலிப்பதில்லை! அவைகள்தேவையென்ற போது மட்டுமேவன்முறையில் இறங்கும்! முக்கியமான ஒன்று,அவைகள் தன்அந்தரங்கத்தை யாருக்கும்காட்டுவதில்லை! அவைகளைத் தான்,இன்னொருவர் வழியில்குறுக்கிடுவதையாருமே விரும்புவதில்லை! ஆதலால் தான்,அனைவரும்அடுத்தப் பிறப்பில்பூனைக்குட்டியாக பிறக்க வேண்டும்ஆசைப் படுகிறேன்! ஏங்கும் பொழுதெல்லாம்இன்னொரு உடல் சூட்டையாசிக்கும் பூனைகளாகநான் இப்போதேவாழ்ந்துகொண்டு இருக்கிறேன்!

பூனைக் குட்டிகள்! Read More »

The 5-Hour Rule

எட்டு மணி நேர நீண்ட நாளுக்குப் பின், வீட்டிற்குள் நுழையும் நீங்கள், உணவைக் கையில் எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு சீரிஸில் மூழ்கி நேரத்தைத் தொலைக்கிறீர்கள். ஒரு எபிசோட் போதுமென்று தொடங்கிய சீரிஸ், நான்கைந்தில் கொண்டு வந்து நிறுத்த, அயர்ச்சியில் ஆழ்துயில் கொள்கிறீர்கள். கேளிக்கை விரும்பாத மனித மனமா? என்றோ ஒருநாளெனில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எல்லா நாளும் இப்படியே சென்றால்? வென்றவர்கள் எல்லோரும் இவ்வழியில் சென்றவர்களா என்றால், இல்லை. சாதனையாளர்கள் வாழ்வை, சற்று உற்று நோக்கினால்,

The 5-Hour Rule Read More »

செத்துவிடவில்லை!

கனவாய்ப் போகும் வேளைகளில் – அடகரியாய்ப் போகும் நாளைகளில்,கனமாய்ப் போகும் உறவுகளில் – என்கவிதைக் கிடந்து சாகிறதே! கண்ணீர் கொண்டு கலை செய்தேன் – பலகளிப்பினை எல்லாம் கொலை செய்தேன்முந்நீர் கொண்டு முயற்சியினால் – நான்முப்போகம் நிலம் விளை செய்தேன்! எழுதா சொற்கள் ஏராளம் – நான்எழுத்தென்றானால் தாராளம்,விழுதா கிளையா தெரியாது – என்விதைகள் கொண்ட வேர் ஆழம்! முகத்தில் களிப்பு கொண்டதனால் என்முட்காயங்கள் மறைவதில்லை!அகங்கள் கொண்ட ஆழத்தை – அடஅக்கம் பக்கம் அறிவதில்லை! கண்ணிமை கவிழும்

செத்துவிடவில்லை! Read More »

இமயம் சென்ற சமயம்…

இமய மலை செல்வதென்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது? விடிய விடிய உறக்கமில்லாமல் தான் தொடர்வண்டி நிலையம் வந்தோம். ஏழு பேர்(நான், தீபின் விஜித், ராம் குமார், ரவிக்குமார், அஷ்வின், விஷால், சமீர்). தீபின், ராமைத் தவிர ஏனையவர்கள் அதிகம் பரிட்சியமில்லாதவர்கள் ஆதலால், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பயணம் தொடங்கியது. ஒரு முதியவரும், ஒரு இளையவரும் என இரண்டு வட இந்தியர்கள் எங்கள் பிரிவில் வர, சில நிமிடங்களிலேயே இளையவர் எங்களோடு இணங்கி வந்துவிட்டார். முதியவர், மட்டும் முணங்கிக் கொண்டே தான் வந்தார். இருபத்தி ஏழு

இமயம் சென்ற சமயம்… Read More »

இறைவனது காவியம்!

என்வாழ்க்கை நிறைவுறாத இறைவனது காவியம்! இறைவனது காவியத்தில் இடம்கிடைக்கா ஓவியம்! மண்வாழ்க்கை இன்பமுற மனம்முழுக்க வேள்விகள்! மனம் எழுப்பும் வேள்விகட்கு மலர்கொடுக்கும் தோல்விகள்! * இடைமறித்த ஆசைகட்கு இதயங்களை விற்றவன்! இதயங்களை விற்றதனால் இன்னல்களைப் பெற்றவன்! தடைகொடுத்த வாழ்க்கையிலே தத்துவங்கள் சொன்னவன்! தத்துவங்கள் சொல்லும்-நான் தோல்விகளின் மன்னவன்! * காலநதி வெள்ளத்திலே கடல்கலக்கச் சென்றவன்! கடல்கலக்கும் முன்னமஞ்சி கரை ஒதுங்கி நின்றவன்! வாழவழி இல்லையென்று வார்த்தைகளை அழைத்தவன்! வார்த்தைகளை நம்பியதால் வாழ்க்கைதனில் பிழைத்தவன்! * சோலைகளின் மலர்வனப்பில்

இறைவனது காவியம்! Read More »

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

War is not about who is right!War is all about who is left! போர்களில் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. எந்த சண்டைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதே, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கருத்தாக இருக்குமென்றே நம்புகிறேன். உலகம் தனது எல்லைகளுக்காக, அல்லைகளைப் பிளந்த நாட்களில் கூட, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும், மகுடங்களைச் சூட மக்களை மறந்த மன்னர்கள் ஆட்சியில், ‘போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது’ என்றும்

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது Read More »

இறகு உதிர்க்கும் மரம்!

கவிதைத் தொடரின் முன்னுரை…   தோன்றிய நாள் முதலே, வாழ்வில் மனிதன் ஓடிக்கொண்டே இருக்க, உழைக்க வேண்டியிருந்தது. உழைத்துக் களைத்த ஊமை விழிகள், கலைகள் மூலமாய்த் தான் கதைகள் பேசின; ஆம்!கலைகள் தான் அவன்,காயங்களுக்கெல்லாம்களிம்புகள் இட்டன;மௌனத்தைக் கூடமொழி பெயர்த்தன; சமிக்ஞையே அவனதுசகலமும் ஆனது;குறிகள் காட்டியகுறைகளைப் போக்கஒலிகள் வந்துஉதவத் தொடங்கின;ஒலிகள் கூடஓரிரு இடத்தில்உதவாமல் போக,மொழிகள் வந்துவழிகள் காட்டின; ஆனால் மொழிகளால்,வளர்ச்சியில் உழன்றவனின்வலக்கரம் பிடித்தாலும்,அயர்ச்சியில் கிடந்தவனைஆற்றுப்படுத்த முடியவில்லை; வேகமாய் ஓடும் நதியைவெட்டித் திருப்பி வயலுக்குக்கொட்டித் தீர்க்கப் பாய்ச்சுவது போல,மொழிகள் தன்னைமுறைமை

இறகு உதிர்க்கும் மரம்! Read More »

Shopping Cart
Scroll to Top