வாலியும் கதிரும்-2
முந்தைய அத்தியாயத்தில் சொன்னது போல, கதிருடன் வாலி கொடுத்தக் காதல் காவியங்கள் தான் எத்தனை எத்தனை? காதல் சாயத்தில் கசக்கிப் பிழிந்த துணிகளைப் போல, மொத்தப் படத்தையும் காதலால் முழுக்காட்டி இருப்பார்கள், கதிரும் வாலியும். இவர்கள் இப்படி இருக்க, ரகுமான், எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்திருப்பார். ‘காதல் தேசம்’ முக்கோணக் காதலுக்கு முதல்முறை அல்ல, ஆயினும், ரகுமானும் வாலியும் அதை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது தமிழ் சமூகத்தின் தாரக மந்திரம். […]